07-03-2025, 01:16 PM
(This post was last modified: 07-03-2025, 01:17 PM by antibull007. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-03-2025, 07:45 PM)dubukh Wrote: நண்பா, இதை நிறுத்துவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. முக்கியமாக நம்ம ஃபோரம் ஒரு திறந்த வெளி புத்தகமாக இருக்கும் வரை, சுத்தமாக வாய்ப்பே இல்லை எனலாம்
நீங்கள் சொல்வது போல படிப்பவர்கள் இதனை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள் என்பது 100 க்கு 100 உண்மை. முட்டை போடும் கோழிக்கு தான் தெரியும், அதன் வலி என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் சொல்வது போல க்ளோஸ்ட் க்ரூப் ஆரம்பிப்பதுலாம் சரியாக வருமா என தெரியாது நண்பா. அங்கேயும் கதை திருடர், புகுந்து விட முடியாது என்கிறீர்களா? வேறு எங்காவது புது இடத்தில் கதை திருடி இங்கே பதித்து, நானும் ஆசிரியன் என சொல்லி உங்கள் க்ரூப்புக்குள் யாரும் நுழைய முடியாதா நண்பா?
என்னை பொறுத்த வரை, தன் கதை திருடப்பட கூடாது என விரும்பும் எழுத்தாள நண்பர்களுக்கு உரிய இடம், இது கிடையாது நண்பா. இது ஒரு கதவு + கூரையே இல்லா வீடு. யாரும், எப்படி பட்டவரும் இங்கே வந்து போகலாம், கேள்வி கேட்பார் எவரும் இல்லை நண்பா. "எவனும் என்னமும் பண்ணட்டும், திருடி தொலையட்டும், கமெண்ட் போட்டா போடட்டும், போடாட்டியும் போகட்டும், நான் என் திருப்திக்காக மட்டும் எழுதுகிறேன்", என்று நினைத்தால் மட்டுமே இங்கே எழுதுவதில் அர்த்தம் உள்ளது நண்பா
மீண்டும் சொல்கிறேன், திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது நண்பா. ஆனால் அவர்களை இரும்பு கரம் கொண்டு கன்ட்ரோல் பண்ணலாம் (லோகம் தளம் போல). ஆனால் இங்கே அந்த இரும்பு கரம் நடவடிக்கையை எதிர்பார்க்கவே முடியாது நண்பா
நண்பா! திருடர்கள் நுழைந்தால் நுழைந்து கொள்ளட்டும். பிரச்சனை அதுவன்று!
திருட்டு கதைகள் விற்கப்படும் பதிவிடப்படும் தளங்களும், டெலெக்ராம் சேனல்களும் மற்ற கதாசிரியர்களுக்கு தெரிந்தால், மற்றவர்களும் கவனமாக இருப்பார்கள். அதுமட்டுமல்ல, அனைவரும் ஒரு சேர அந்த டெலெக்ராம் channelகளையும், websiteகளையும் report செய்தால், அவை நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
நாம் திருடர்களை அவர்கள் இடத்தில் ஊடுருவி அவர்களை திருடர்கள் என காட்டிக்கொடுப்பதற்காக தான் இந்த முயற்சி.
அதை விட பெரிய பிரச்சனை யாதெனில், பல கதாசிரியர்கள் இந்த திரியை கண்டும் காணாமல் செல்வது தான்.
நண்பா, நீங்கள் இப்போது ஒரு கதையை எழுத துவங்கி உள்ளீர்கள். ஆனால் நீங்கள் பெரும்பாலும் வாசகரே!
நீங்களே இந்த விஷயத்தில் ஆர்வம் கொண்டு, கதாசிரியர்களின் நலனில் அக்கறை கொண்டு விவாதிக்கும்போது, மற்ற காதாசிரியர்கள் இந்த விஷயத்தை விவாதிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.