05-03-2025, 09:26 PM
பாகம் - 3
அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்துவிட்டு மறுமுனைக்கு சென்றான் கைலாஷ். செல்வா அடுத்த இரு பந்துகளையும் அடிக்க முடியாமல் beatun ஆக, செல்வா சற்றே நிதானம் இழக்க துவங்கினான்.
அவன் நிதானம் இழப்பதை கண்ட கைலாஷ், நேராக அவனிடம் ஓடி வந்து,
கைலாஷ்: அம்பி! அவசரப்படாதடா... இன்னும் நேரம் இருக்கறது. பாத்துக்கலாம். சத்த ரிலாக்ஸ் ஆகு.
செல்வா: இன்னா ஆச்சுன்னே தெர்லணா. திடீர்னு ஒண்ணுமே படமாட்டுது.
கைலாஷ்: பரவாலடா அம்பி. யாரா இருந்தாலும், சில மேட்ச் அப்டி தான் ஆகும். உன் gameஅயே ஆடு. நீ சத்த relax ஆகுற வரைக்கும் நானே strike எடுத்துக்கறேன். நீ இந்த பால் 2 ரன் அடிக்க முடியுமான்னு பாரு.
செல்வா: சர்ணா.
என்று சொல்லி, இருவரும் மீண்டும் அவர்கள் முனைக்கு செல்ல,
செல்வா அடுத்த பந்தை கொஞ்சம் ஆளில்லாத பக்கம் அடிக்க, 2 ரன்கள் ஓடினர்.
அடுத்த 4 ஓவர்களுக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது.
கைலாஷே பெரும்பான்மையான பந்துகளை சந்தித்து, இலக்கு எட்டா தூரத்தில் போகாமல் பார்த்துக்கொண்டான். மறுபுறம் செல்வா அவனுக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், single எடுத்து, கைலாஷிர்க்கு strike கொடுத்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது சில பந்துகளை dotஉம் ஆக்கி கொண்டிருந்தான்.
அடுத்த 3 ஓவர்களுக்கு 38 ரன்கள் அடிக்கப்பட்டன. அதில் 32 ரன்களை கைலாஷ் தான் சந்தித்த, 12 பந்துகளில் அடித்தான். செல்வா, அந்த மூன்று ஓவர்களில் ஆடிய 6 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தான். 2 extras.
இடையில் செல்வாவை அந்த அணியினர் retired ஆக சொல்ல, செல்வாவும் சம்மதிக்க, அது momentumஐ பாதிக்கலாம் என்று கைலாஷ் இடைமறித்தான்.
கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,
முந்தைய ஓவரின் கடைசி பந்தில் கைலாஷ் single ஆடியதால், கடைசி ஓவரின் முதல் பந்தை அவனே சந்தித்தான்.
கடைசி ஓவர்
முதல் பந்து அவன் கழுத்திற்கு குறிவைத்து பௌன்சர் போடப்பட்டதால், அவன் hook shot ஆடினான். ஆனால் பந்து அவன் பேட்டில் படவில்லை. அவன் கழுத்திலேயே அடித்தது. சுருண்டு விழுந்தான்.
அவன் சுருண்டு விழுந்ததை பார்த்து செல்வா துடித்துப்போய் முதல் ஆளாக ஓடி வந்து அவனை தூக்கினான்.
எதிர் அணியினர் பெரிதும் கண்டுகொள்ளவில்லை. பந்து வீச்சாளர் பெயருக்கென்று மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுவிட்டார்.
செல்வா கைலாஷை பார்த்து,
செல்வா: அண்ணோவ்! எங்கண்ணா பட்டுச்சு?
கைலாஷ்: ஸ்ஸ்ஸ்ஸ். கழுத்தாண்டடா அம்பி!
செல்வா அவன் கழுத்தை தொட்டு பார்த்து தடவி விட்டு,
செல்வா:: bouncerலாம் வந்தா கொஞ்சம் பாத்து ஆடுணா.. மூஞ்சுக்குலாம் வந்துச்சுனா குனிஞ்சிடுணா. match போனா போது.. எதனா ஆனா இன்னாவுறது?
கைலாஷ்: பரவாலடா அம்பி..
ரகுபதி ஓடி வந்தார்.
ரகுபதி கைலாஷின் கழுத்தை தொட்டு பார்த்து,
ரகுபதி: கைலாஷே! போதும் வா... மேட்ச் போனா போயிட்டு போது. அட்த்த வாரம் பாத்துக்கலாம்.
கைலாஷ்: இல்லண்ணா. பெரிய வலிலாம் இல்ல. நான் ஆடறேன்.
ரகுபதி: சொன்னா கேளுடா.
கைலாஷ்: நேக்கு ஒன்னும் இல்லண்ணா. நான் ஆடறேன்.
ரகுபதி: சொன்னா கேக்க மாட்டியே நீ... birunner வெக்கவா?
கைலாஷ்: இல்லண்ணா. நானே ஒடிக்கறேன்.
செல்வாவை பார்த்து,
ரகுபதி: செல்வா! உனக்கு இந்த மேட்ச் சரியா படல. இவனே எல்லா பாலும் ஆடிக்கட்டும்.
செல்வா: சர்ணா!
ரகுபதி அங்கிருந்தது செல்ல, செல்வா கைலாஷை பார்த்து,
செல்வா: ணோவ். கொஞ்சம் பாத்தாடுணா...singleலாம் ஓடாத... ரெண்டு ரன் ஓடுற மாதிரி இருந்தா மட்டும் சொல்லு. நான் ஓடியாறேன். நீயே எல்லா பாலையும் ஆடிக்கோ.
கைலாஷ்: சரிடா அம்பி.
செல்வா தன் முனைக்கு செல்ல, கைலாஷ் மீண்டும் பேட்டிங் பண்ண தயாரானான்.
இரண்டாம் பந்தை வீச பந்து வீச்சாளர் ஓடி வருவதை கழுகு போல கவனித்துக்கொண்டிருந்தான். பந்து வீச்சாளர் ஓடி வந்து, மீண்டும் கைலாஷின் கழுத்தை குறிவைத்து, பந்தை போட,
பந்து கைலாஷின் கழுத்தை பதம் பார்க்கும் முனைப்புடன் வர,
கைலாஷ் மீண்டும் ஹூக் ஷாட் அடித்தான். இம்முறை பந்து சரியாக மட்டையில் பட்டது. காணாமல் போனது! six!!
செல்வா ஆனந்த பூரிப்புடன்,
செல்வா: வாணா....வாணா...வாணா!! தூக்கி சொருவிட்ட! ரோஹித் ஷர்மாலாம் ஆடுறது என்ன ஹூக்.. நீ அட்ச்ச பாரு ஒரு ஷாட்டு!! அதான்!!
கைலாஷிர்க்கு கொஞ்சம் கொஞ்சமாக செல்வாவை பிடிக்க ஆரம்பித்தது.
மூன்றாவது பந்தை, பந்துவீச்சாளர் toe crusherஆக போட முயல அது fulltoss ஆக, கைலாஷ் அதை அப்படியே square leg திசையில் flick செய்தான்! Six!
மீண்டும் செல்வா கைலாஷை பாராட்ட, கைலாஷிர்க்கு செல்வாவை இன்னும் பிடிக்க ஆரம்பித்தது.
நான்காவது பந்தை, பந்துவீச்சாளர் wide yorkaraaga போடவே, அதை கைலாஷால் சரியாக அடிக்க முடியவில்லை. extra cover திசையில் சென்றது. பந்தை தொட்ட மறுகணமே கைலாஷ்,
கைலாஷ்: two, two, two, two!
என்று கத்திக்கொண்டு ஓட, செல்வாவும் இரண்டு ரன்கள் எடுக்கும் முனைப்புடன் ஓடி வந்தான்.
ஆனால் மறுபக்கத்தை அடைந்து திரும்பிய கைலாஷிர்க்கு கால் சறுக்கவே, அவனால் இரண்டாவது ரன்னை ஓட முடியவில்லை. மறுமுனையிலேயே விழுந்து கிடந்தான். இரண்டாவது ரன்னிற்காக பாதி வரை செல்வா ஓடி வர, கைலாஷ் விழுந்திருந்தததை பார்த்து அங்கேயே நிற்க, அவனை runout செய்ய விக்கெட் கீப்பரிடம் throw அடிக்கப்பட்டது. இனியும் இரண்டாவது ரன் ஓட சாத்தியமில்லை என்றுணர்ந்த செல்வா, தன் விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ள, திரும்பி தன்னால் முடிந்தவரை வேகமாக ஓடி வர, பந்து அருகில் வந்து விட்டதால், அவன் எகிறி தன்னால் முடிந்தவரை தன் உடலை நீட்டி, dive அடித்து, விக்கெட் கீப்பர் கையில் பந்து வருவதற்கு, ஒரு வினாடிக்கு முன்பு creaseக்குள் தன் பேட்டை கொண்டுவந்தான்.
சிறிது நேரம் அப்படியே கிடந்தான். ஒரு வழியாக எழுந்து நின்று, தன் உடல் முழுவதும் இருக்கும் மண்ணை துடைத்துக்கொண்டிருக்க, கைலாஷ் அங்கு வந்தான். செல்வா dive அடித்ததால், அவன் முழங்கை தரையில் உராசியதில் அவன் முழங்கையில் இருக்கும் ரத்தத்தை பார்த்து,
கைலாஷ்: அச்சோ அம்பி, என்னடா ரத்தம் வர்றது?
செல்வா துடைத்துக்கொண்டே,
செல்வா: ஒன்னும் இல்லணா...கொஞ்ச நேரத்துல காஞ்சிடும் வுடு.
கைலாஷ்: காட்டுடா அம்பி!
என்று சொல்லி, தன் கைக்குட்டையால் அவன் ரத்தத்தை துடைத்து, அந்த கைக்குட்டையை அவன் கையில் கட்டினான்.
செல்வா: ணோவ்! இன்னாணா நீ? இன்னாத்துக்குணா இப்போ கச்சிப்லாம் வேஸ்ட் பண்ற?
கைலாஷ்: ஆபத்துக்கு உதவி பண்ணுறது எப்பிடிடா அம்பி வேஸ்ட் பண்றதாகும்?
செல்வா: செம நல்ல மனசுணா உனக்கு.
கைலாஷ் அவன் கையில் தன் கைக்குட்டையை முழுவதுமாக கட்டிமுடித்துவிட்டு,
கைலாஷ்: சரிடா அம்பி! 2 பால்க்கு 10 ரன் அடிக்கணும். நீ தான்டா அம்பி அடிக்கணும். இது வர என்ன நடந்ததுன்றத மறந்துடு. அந்த மேட்ச் எப்போவோ முடிஞ்சிடுத்து, இது புது மேட்ச்னு நெனைச்சிண்டு ஆடு! நீ அடிக்கலானாலும் பரவால்ல. நீ எவ்ளோ பெரிய பிளேயர்னு முதல் 2 மேட்ச்லேயே காட்டிட்டடா அம்பி! நம்பிக்கையோட ஆடு. கண்டிப்பா அடிக்கலாம்! புரியறதடா?
செல்வா: அடிப்பானோ இல்லையோ, நீ பேசுனதே செம strengthஆக்குதுணா எனக்கு. தேங்க்ஸ்ணா.
கைலாஷ்: சரிடா அம்பி! பாத்து ஆடு.
என்று சொல்லிவிட்டு, கைலாஷ் அவன் முனைக்கு செல்ல, கைலாஷின் சொற்களால் புத்துணர்வு கொண்ட செல்வா பேட்டிங் ஆட தயாரானான்.
ஐந்தாவது பந்தை வீச பந்து வீச்சாளர் ஓடி வர அவன் பார்வை பந்து வீச்சாளரின் கைகளிலேயே இருந்தது. அவன் பார்வை கூர்மையானது. பந்துவீச்சாளர் பந்தை வீசினார்.
அவருடைய கையை மிகவும் கவனமாக கவனித்திருந்ததால் அவர் வீசிய slower பந்தை சரியாக கணித்தான்.
short pitch lengthil, மட்டையை வீசுவதற்கு இடமளிக்காமல், அவன் உடலை நோக்கி வந்த பந்தை, அவன் நகர்ந்து, T20 உலகக்கோப்பையில், ஹாரிஸ் ராஃப் வீசிய 18.5ஆவது பந்தை விராட் கோலி அடித்தது போல், straight திசையில் அடித்தான். Six!
அந்த ஷாட்டை பார்த்த கைலாஷால் வாயை பிளக்காமல் இருக்க முடியவில்லை.
ஓடி செல்வாவிடம் வந்து,
கைலாஷ்: செம ஷாட்டா அம்பி! அப்படியே விராட் கோஹ்லிய பாத்தது மாதிரி இருந்தது.
கைலாஷின் பாராட்டை கேட்டு செல்வாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைக்க,
கைலாஷ்: இன்னும் ஒரு பால்க்கு 4 ரன்டா அம்பி. எத பத்தியும் கவலபடாம ஆடு... ரிசல்ட் எப்படி வந்தாலும் பரவால்ல
என்று சொல்லி, அவன் முதுகில் தட்டி கொடுத்துவிட்டு தன் முனைக்கு சென்றான்.
ஆட்டத்தின் கடைசி பந்தை போடுவதற்கு முன் எதிர் அணி தலைவரும், துணை தலைவரும், பந்து வீச்சாளரிடம் பரபரப்பாக ஏதோ திட்டத்தை சொல்ல, அவர்கள் fielding setupபை மாற்றி விட்டு, பந்துவீச்சாளருக்கு தெம்பளித்து விட்டு சென்றனர்.
செல்வா சுற்றி முற்றி எங்கெல்லாம் ஆட்கள் நிற்கின்றார்கள் என்று பார்த்துவிட்டு, பந்தை எதிர்கொள்ள தயாரானான்.
பந்து வீச்சாளர் ஓடிவந்தார், செல்வா மட்டையை தரையில் தட்டிக்கொண்டு அவர் ஓடிவருவதை மும்முரமாக கவனித்தான். இம்முறை அவர் slower பந்தை போட வாய்ப்பில்லை என்று கணித்திருந்தான். பந்து வீச்சாளர் அவன் கணித்ததை போலவே பந்தை வேகமாக வீசினார். wide yorkerஆக வீசப்பட்ட பந்தை, செல்வா அவர் அப்படி தான் வீச போகிறார் என்று கணித்து, தன்னுடைய மட்டையை இடது புறமாக பிடித்து, reverse paddle scoop செய்ய, பந்து சரியாக படாமல் inside edge ஆகி பின்னே செல்ல, கீப்பர் dive அடித்து பந்தை தடுக்க முயல, பந்து அவர் விரல்களை உரசிக்கொண்டு பின்னே சென்றது. third man திசையில் கீப்பக்கு பின் 10 அடி இடைவெளி விட்டு நின்ற fielderம் அதை தடுக்க முயன்று, dive அடிக்க, பந்து அவரையும் ஏமாற்றிவிட்டு boundaryக்கு சென்றது.
பந்து boundary கோட்டை தொடுவதற்கு முன்னாலேயே, மகிழ்ச்சியை அடக்க முடியாமல் கைலாஷ் செல்வாவிடம் ஓடிவந்து, அவனை கட்டி தழுவி தூக்கி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அணியின் மற்ற உறுப்பினர்களும் ஓடி வந்து, இருவரையும் தூக்கி, ஆரவாரக்கூச்சலிட்டபடி, தங்கள் பாராட்டுக்களை அந்த இருவருக்கும் பொழிந்தனர்.
அந்த தினத்தின் தொடரை கைலாஷ் அணி வென்றது. அணி தலைவர் ரகுபதி சென்று பந்தய பணத்தை பெற்றுக்கொண்டு, கொஞ்சம் பணத்தை அணிக்கு தேவையானதை வாங்க வைத்துக்கொண்டு, மீதியை அனைவருக்கும் பகிர்ந்தளித்தார். பின்பு அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அணியின் மற்ற உறுப்பினர்கள் கூட்டமாக பேசிக்கொண்டிருக்க, மறுபக்கம் செல்வாவும் கைலாஷும் அந்த போட்டியை பற்றி உரையாடிவிட்டு, தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் பேசிவிட்டு, செல்வா கைலாஷின் பேட்டை தொட்டு பார்க்க அவனிடம் அனுமதி கேட்க, கைலாஷ் அனுமதி அளிக்க, செல்வா அதை வைத்து shadow batting செய்து பார்த்துவிட்டு,
செல்வா: செம்யாக்குதுணா பேட்டு...ஆனா நடுவாண்ட கொஞ்சம் வெயிட் ஜாஸ்தியா இருக்க மாதிரி கீது.
கைலாஷ்: ஆமாடா அம்பி! நானும் அத கம்மி பண்ணனும்னு பாத்துண்டிருக்கேன். ஆனா யார் கிட்டயாவது கொடுத்தா, பேட்ட அவா கண்டம் பண்ணிடுவாளோனு பயமா இருக்குறதுடா அம்பி!
செல்வா: என்னாண்ட குடுணா. நான் எயஷினு வரேன். எங்கப்பா carpenter தான். எங்கூட்ல மெஷின் கீது.
கைலாஷ்: சூப்பர்டா அம்பி! எவ்ளோடா ஆகும்?
செல்வா: ணோவ்! இன்னாணா நீ? துட்டு எவ்ளோ ஆகும்னு கேட்டு அசிங்கப்படுத்தின்னுக்கீற? ஒரே நாள்ல எவ்ளோ close ஆகிட்டோம். உன்னாண்ட எப்டிணா நான் துட்டு கேப்பன்?
செல்வாவின் பேச்சை கேட்டு கைலாஷிர்க்கு புல்லரித்தது.
செல்வா: நீ வுடுனா. நான் அடுத்த வாரம் வர சொல்லோ , பேட்ட எயஷினு வரேன்.
கைலாஷ்: சரிடா அம்பி! தேங்க்ஸ் டா!
என்று சொல்லி அவனிடம் தன் மட்டையை கொடுத்துவிட்டு, பேசிவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல, செல்வா அவர்களுடன் சேர்ந்து செல்வதற்காக கைலாஷிடம் விடைபெற்றுக்கொண்டு செல்ல, கைலாஷும் தன் வீட்டிற்க்கு புறப்பட்டான்.
அடுத்தவாரம் வழக்கம் போல கைலாஷ் மைதானத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு செல்வா கைலாஷின் மட்டையுடன் அமர்ந்திருந்தான். கைலாஷ் அவனிடம் செல்ல,
செல்வா: இந்தாணா! நீ சொன்ன எடத்துலலாம் எயஷ்ட்டன். நல்லக்குதா பாரு.
கைலாஷ் அதை வாங்கி shadow batting செய்து பார்த்து,
கைலாஷ்: சூப்பர்டா அம்பி! அருமையா பண்ணிருக்கடா. இப்போ bat புடிக்க நன்னா இருக்கு...தேங்க்ஸ் டா!!
இருவரும் அன்றைய தினம் கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் பேசிவிட்டு மேலும் நெருக்கமாக, இருவரும் தங்கள் கைப்பேசியின் எண்ணை பகிர்ந்துகொண்டு, கிரிக்கெட் போட்டிகளை பற்றி பேச ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குள் இருந்த நட்பு அதிகரித்து, மற்ற விஷயங்களையும் பேசினர். வார இறுதியில் மட்டும் சந்தித்த அவர்கள், வார நாட்களிலும் சந்திக்க ஆரம்பித்து, அடிக்கடி வெளியில் சென்றனர்.
இரண்டு மாதங்கள் இப்படியே இருக்க, இரு மாதங்கள் கழித்து ஒரு வார இறுதியில் அவர்கள் கடற்கரையில் சந்தித்து அங்கே மணலில் அமர்ந்தபடி, சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். பேசிவிட்டு, செல்வா தன் கைப்பேசியை கையில் எடுத்தான். அவன் galleryஐ திறந்து, அவன் குடும்ப புகைப்படத்தை கைலாஷிடம் காட்டி,
செல்வா: இதான்ணா எங்கம்மா.. வூட்ல தான் கீது. பக்கத்துல நான், என் பக்கத்துல என் நைனா!
கைலாஷ்: நன்னா இருக்காங்கடா அம்பி!
அடுத்து கைலாஷும் தன் கைப்பேசியை எடுத்து, galleryஐ திறந்து தன் குடும்ப புகைப்படத்தை செல்வாவிடம் காண்பிக்க, மீனாவின் அழகை பார்த்து ஸ்தம்பித்துப்போனான் செல்வா!!!