கதை திருட்டு!!
#7
நண்பரே என்னுடைய‌ மனதில் இருந்த விசயத்தை தான் திரியாக ஆரம்பித்திருக்கிறீர்கள். எனக்கு சந்தேகம் எல்லாம் கிடையாது. கண்டிப்பாக கதை திருடப்படுகிறது. அதில் சந்தேகமே இல்லை.


என்னுடைய திரியிலேயே இதைப் பற்றி பேசியிருக்கிறேன். நான் எழுதும் கதைகளை வேறு பெயரில் வேறு தளத்தில் பதிவிடுகிறார்கள்.


அதை விட‌ கொடுமை என்னவென்றால் அந்த கதையை அவன் எழுதியது போல கமெண்ட் செய்து பாராட்டுபவர்களுக்கு ரிப்ளை வேறு செய்கிறான். 


உலகில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினாலும் அந்த ஜென்மங்கள் திருந்தப்போவது இல்லை. 


சில திருடர்கள் கதையை Pdf ஆக மாற்றி அதற்கு ஒரு விலையை கேட்கிறார்கள். நானே சில தளங்களில் பார்த்தேன். 500 ரூ முதல் 1000 வரை கேட்கிறார்கள். 

யாரு எழுதுன கதைக்கு யாரு பணம் வசூல் பண்றது.. இந்த பொழப்புக்கு அவனுங்க நாலு பேருக்கு மண்டி போட்டு சம்பாதிக்கலாம்..


இதை தடுக்கும் வழி கதையை படிக்கும் வாசகர்கள் கதையில் தான் உள்ளது..


மெனக்கெட்டு கதையை எழுதி போஸ்ட் செய்வதை திருடி வேறு தளத்தில் பதிவிடும் போது அதை வாசகர்கள் எதிர்க்க வேண்டும்..


அந்த கதைக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும். கமெண்ட்டில் அவனை கழுவி ஊற்ற வேண்டும். ஒரிஜினல் எழுத்தாளருக்கு சப்போர்ட் செய்ய வேண்டும்.


ஆனால் அதை மட்டும் வாசகர்கள் செய்ய மாட்டார்கள்..


எவன் எழுதுன கதையா இருந்தா எங்கலுக்கு  என்ன...  எங்களுக்கு உணர்ச்சிய தூண்டனும்.. அதுக்கு யாரு கதையை வேணாலும் திருடி போடுங்க படிப்போம்.. சூப்பர்னு கமெண்ட் பண்ணுவோம்.. 

இப்படித் தானே இருக்காங்க.. மெனக்கெட்டு எழுதுறவனுக்கு என்ன சப்போர்ட் இருக்கு இங்க.. 


இதனாலேயே எனக்கு கதை எழுதும் ஆர்வம் குறைந்துவிட்டது. கதைக்கும் கமெண்ட் வருவது கிடையாது. சப்போர்ட்டும் கிடையாது.


எந்த பிரயோஜனமும் இல்லாமல் எதற்காக நாம் மெனக்கெட வேண்டும் என்று தோன்றுகிறது.


முன்பு இலவசமாக கதை எழுதிய பல பேர் இப்போது கட்டணமாக மாற்றி விட்டார்கள். அவர்கள் மீது தவறு இல்லை.  அவர்கள் தான் பிழைக்கத் தெரிந்தவர்கள்..  இந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு சரியாக யோசிக்கிறார்கள். 


முன்பு ஆன்லைனில் பெண்களை ஈசியாக பேசி கரெக்ட் செய்து கொண்டிருந்த காலம் போய்விட்டது.. இப்போது கால் பேச கட்டணம். வீடியோ காலுக்கு கட்டணம். லைவ் பார்க்க கட்டணம் என்று பல வழிகளில் வருமானம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு பெயர் விபச்சாரம் என்றாலும் அதற்கு நவீன பெயர்கள் வைத்து செய்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல் பல அப்ளிகேசன்கள் வந்துவிட்டது. குறைந்த கட்டணத்தில் பெண்களிடம் பேசுங்கள் என்று மாமா வேலையை வெளிப்படையாக செய்கிறார்கள்..  அதை விளம்பரம் செய்ய இன்ஸ்டா பிரபலங்களை பயன்படுத்துகிறார்கள். நிறைய பெண்கள் வீட்டிலிருந்தபடியே கால் பேசி வருமானம் ஈட்டுகிறார்கள். அதையும் தாண்டி அதிக பண ஆசையில் நேரடி விபச்சாரத்திலும் இறங்குகிறார்கள்.


இதை பற்றி நான் இங்கு பேசியதற்கு காரணம் இந்த நவீன யுகத்தில் எல்லாமே பணம் தான். 


இங்கு எழுதப்படும் கதைகளை திருடி அமேசானில் வியாபாரம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...

இந்த தளத்தின் நிர்வாகிகள் மற்றவர்கள் திருடாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். 

கதைகளை மற்றவர்கள் காப்பி பண்ணவோ , ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ அனுமதிக்க கூடாது.
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 1 user Likes Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: கதை திருட்டு!! - by Kokko Munivar 2.0 - 02-03-2025, 09:40 PM



Users browsing this thread: 1 Guest(s)