20-02-2025, 01:55 PM
(20-02-2025, 12:00 PM)Kavinrajan Wrote: Thanks for your comments.நண்பா உங்க ஆதங்கம் புரியுது கேவலமான நரசமான கதைக்கு எல்லாம் நிறைய கமெண்ட் வரும் போது நம்ம நல்ல கதை எழுதியும் லைக் கமெண்ட் வரல அப்படினா ரொம்ப கஷ்டமா தான் இருக்கும்.. என்ன பண்றது இங்க இருக்க mostly ஆளுங்க அந்த மாதிரி கதையா தான் படிக்கறாங்க.. நீங்க மனச விடாம எழுதுங்க கண்டிப்பா கமெண்ட் லைக் அதிகம் ஆகும்
இது வரை இந்த தளத்தில் நான் புரிந்து கொண்ட பல விஷயங்களில் ஒன்று. நல்ல கதைக்கோ.. கதையின் வரிகளுக்கோ இங்கே யாரும் மரியாதை கொடுத்து கமெண்ட் அளிப்பதில்லை..
(லோக்கலாக கொச்சையான தமிழில் எழுதப்படும் எல்லா கதையில்லா கதைகளுக்கு மட்டும் உடனே கமெண்ட் கிடைப்பது தனிக்கதை)
இல்லையெனில் அக்கதைக்கான தகுதியான வாசகர் வந்து படித்து கமெண்ட் அளிக்கும் வரை எழுத்தாளர் பொறுமையாக காத்திருக்க வேண்டும். எத்தனை முறை தான் அப்படி காத்து கொண்டிருப்பது?
அடுத்ததாக.. தொடராத கதையை தொடரும்படி எழுத சொல்கிறார்கள். நாமும் மாங்கு மாங்குவென தொடர்ந்து பதிவுகள் போட்டு கொண்டிருப்போம்.. அப்போது திரும்ப யாருமே கமெண்ட் செய்ய மாட்டார்கள். மறுபடியும் கதையை கைவிட வேண்டி நிலையை வரவழைத்து விடுகிறார்கள்.
கமெண்ட்கள் தாருங்கள் என கேட்டால் வீயூஸ் லைக்ஸை கை காட்டுகிறார்கள். அந்த சிறுபிள்ளைத்தனமான நம்பர்களை வைத்து நான் என்ன செய்வது? யாராவது அதற்கான பயனை எடுத்து சொன்னால் ஏற்று கொள்கிறேன்.
நான் நேர்மையாக இருப்பதால் என் நிலையை வெளிப்படையாக சொல்கிறேன். கதையை தொடராமல் போன காரணம் தருகிறேன்.
இத்தளத்தில் அப்டெட் வேண்டி எத்தனை கதைகளுக்கு கமெண்ட் பறக்கிறது என்பதை எண்ணி பாருங்கள்.
வேண்டுமானால் ஒரு புதிய கதையை எளிய தமிழில் எழுத முயற்சித்து பார்கிறேன். அதுவே இத்தளத்துக்கு பொருந்தும் கதை.
இக்கதையை தொடர வேண்டுமா வேண்டாமா என்பது எழுத்தாளரான என் கையில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அதன் முடிவு வாசகர்களான உங்களிடத்தில் மட்டுமே உள்ளது.