19-02-2025, 11:05 PM
(This post was last modified: 19-02-2025, 11:17 PM by dubukh. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-02-2025, 09:12 PM)raspudinjr Wrote: உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்க Threads போய் பார்த்தால் அது படைப்பாக அல்லாமல் வெறும் விமர்சனமாகவே இருக்கிறது.நான் கதை ஆசிரியன் அல்ல. கமெண்ட் செய்பவன் மட்டுமே. ஏதோ ஒரு த்ரெட்டில் நான் முதல் கமெண்ட் பண்ண போய், அந்த த்ரெட்டின் முதல் பதிவு - விதிமீறல் அல்லது ஏதோ ஒரு காரணமாக மாடரேட்டர்களால் நீக்க பட, என் கமெண்ட் முதல் பதிவாகி, அது என் த்ரெட் போல காட்சி அளிக்கிறது. அனைத்து கதைகளுக்கும் ஆஹா சூப்பர் என என்கரேஜ் பண்ணும் ஓம் பிரகாஸ் அவர்கள் நிலையும் அப்படியே
என் த்ரெட்டை பார்த்த நீங்க, என் கமெண்ட்களை போய் பார்த்து இருக்கலாம். எனக்கு ஒரு குறிப்பிட்ட கதை எந்த அளவு பிடிக்குமோ அந்த அளவு ரசித்து பெரிதாக கமெண்ட் செய்வேன். இன்னும் சொல்ல போனால் என் சில கமெண்ட்கள், சில கதை ஆசிரியர்களின் அப்டேட்டுகளை (no offense to writers) விட பெரிதாக இருக்கும். நான் அவ்வளவு நேரம் எடுத்து கமெண்ட் செய்த கதைகள் அப்டேட் வராமல் போகும் போது, மனம் வலிக்குமா இல்லையா நண்பா?
என் கதைக்கும் கமெண்ட் போடுங்க என தங்கள் கதையின் லிங்கை அனுப்பி இன்னும் பலர் எனக்கு ப்ரைவேட் மெஸேஜ் அனுப்புகிறார்கள். ஆனால் நான் ஒரு குறிப்பிட்ட கதைகள் பக்கம் (அம்மா புள்ள, ரஃப் ஓல், கேவலபடுத்துதல், ...) போவது இல்லை என்றாலும், ஒரு அளவுக்கு மேல் அதிகமான கதைகளை என்னால் ட்ரேக் செய்ய முடிவது இல்லை என சொல்லி, மன்னிப்பு கேட்டு ஒதுங்கி விடுவேன்
எனக்கு க்ரைம் கதைகள் பிடிக்கும். ஆனால் அது முழுமை அடைந்து இருந்தால் மட்டுமே படிக்க போவேன். ரெகுலர் அப்டேட் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் க்ரைம் கதை படிப்பது, எவ்வளவு சிரமம் என்பதை தன் மனதில் ஆதி முதல் அந்தம் வரை உள்ள - முழு ஃப்ளோவும் (மனதில்) வைத்துள்ள ஆசிரியருக்கு புரியாது
க்ரைம் கதை படிப்பவர்கள் க்ரைம் பார்ட்டை ட்ராக் செய்வதில் உள்ள சிரமங்களை எப்படி சொல்வது? ஜம்பிள் கேம் தெரியும் அல்லவா நண்பா? அதில் எல்லா பீஸ்களும் இருந்தால் தான் அதனை கணித்து ரசித்து ஆட முடியும். ஆனால் அந்த ஜம்பிள் கேமில், பாதி பீஸ்கள் இனி சில மாதம் கழித்தே கிடைக்கும், அது வரை நம் கையில் உள்ள துண்டுகள் பெரிதாக உபயோகம் ஆகாது என தெரிந்தால், படிக்கும் சுவாரஸ்யம் குறைந்து போகும் என்பது கமெண்ட் செய்பவர்களுக்கு மட்டுமே புரியும் நண்பா
அதே நேரம் முடிந்து போன கதைக்கு ஆஹா ஓஹோ என கமெண்ட் செய்தால், பழைய புதைத்த கதையை தோண்டி எடுத்து கொண்டு வந்து, புதிய கதைகளுக்கு துரோகம் செய்வதாக சொல்ல படலாம் என அக்கதைகளுக்கும் (முடிந்த க்ரைம் கதைகள்) கமெண்ட் செய்ய முடியாமல் போகும் நண்பா. இதனாலேயே உச்சம் தேவா அவர்களின் சமீபத்திய க்ரைம் பக்கம் சென்ற கதையின் (அண்ணியும் கொழுந்தனும்) அப்டேட்களுக்கு கமெண்ட் போட முடியாமல் போகிறது
Quote:இங்கு எழுதும் 90% பேர் ( நான் உள்பட) professional writers இல்லை. சுய திருப்திக்காக ,தாங்கள் அனுபவித்த உணர்வுகளை உண்மையாகவோ, கற்பனை கலந்தோ எழுத முற்படுகிறார்கள் ! அதில் professional touch or continuation இல்லாது இருப்பதில் ஆச்சரியம் இல்லை..90% அல்ல 99.9999% பேர் அப்படியே. அதில் தவறே இல்லை நண்பா. கதை எழுதும் ஆசிரியர், நான் ஜாலியாகவே பதிக்கிறேன், எனக்கு கமெண்ட் வேண்டியது இல்லை. நீங்கள் கமெண்ட் செய்தால் மகிழ்வேன், கமெண்ட் வரவில்லை என்றால் கவலை பட மாட்டேன் என்று இருப்பவர்கள் பற்றி பிரச்சனை இல்லை நண்பா
Quote:அதே நேரம் உங்களைப் போன்ற ஆர்வலர்கள் வேறு பதிவுகளில் அப்டேட் கேட்டு எளிதினாலும் என் போன்றோருக்கு சிறிது குற்ற உணர்வும், மன அழுத்தமும் ஏற்படுகின்றது. நாங்கள் எங்களுக்கு வெளியுலகில் நிகழும் மன அழுத்தங்களில்இருந்து வெளிவரவே இது போன்றதளங்களில் எழுதுகிறோம். இங்கும் அது நிகழுகிறது என்றால் சங்கடமாக இருக்கிறது !சங்கடம் ஏன் வருகிறது நண்பா? கதை போட்டால் உங்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. அந்த கதை அப்டேட்டுக்கு கமெண்ட் கிடைத்தால் உங்கள் மனம் மகிழ்ச்சி அடைகிறது. ஆனால் எதிர்பாராமல் அப்டேட் தாமதம் ஆனால், நாங்கள் ஏன் தாமதம் என கேட்கும் போது, உங்களுக்கு மன அழுத்தம் / ஏமாற்றம் வருகிறது
ஏமாற்றங்கள் இருக்க கூடாது என்றால் எதிர்பார்ப்புகளும் இருக்க கூடாது நண்பா. எதிர்பார்ப்புகள் எந்த அளவு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஏமாற்றங்கள் வந்தே தீரும் நண்பா
நல்ல கமெண்டை எதிர்பார்க்கும் நண்பர்கள், அதையே ஆதங்கமாக ஒரு பதிவில் சொல்லி விட்டால், உங்களை போல எனக்கும் குற்ற உணர்ச்சி வருகிறது. அவர் கதை என் டேஸ்டுக்கு இருந்தால், அவர் கதையை விடுவதில்லை. தொடர்ந்து கமெண்ட் செய்து ஆதரவு கொடுப்பேன். ஆனால் அவ்வாறு செய்தும் சில நேரம் "ஹோல்ட்" என சென்றால் என் மனம் வலிக்காதா நண்பா?
நண்பா, நான் ஒன்றும் கதை எழுதுபவர்கள் எல்லாம், உங்கள் கதை அப்டேட்டுக்கு நான் போட்ட - என்னுடைய கமெண்ட்களுக்கு ரெப்புடேஸன் போடுங்க என சொல்லவில்லை. ஆனால் "ஒரு லைக்" - ஒரே ஒரு லைக் போட்டு போகலாமே நண்பா, அது கூட சில சமயம், அந்த கதை ஆசிரியரிடம் இருந்து கிடைப்பது இல்லை. ஆனால் அதே கமெண்டில் கதை படிக்க வந்த பலர் லைக் போட்டு சென்று இருப்பார்கள் (அவர்களுக்கு 1000 கோடி நன்றிகள்). ஆனால் யார் கதை அப்டேட்டுக்கு கமெண்ட் செய்தோமோ, அவர் லைக் வரவில்லை என்பது எனக்கு குறையாக இருக்காதா நண்பா?
(நானும் லைக்கை எதிர்பார்த்ததால் தான், எனக்கும் ஏமாற்றம் கிடைத்தது என்றும் புரிந்து கொள்கிறேன்)
Rights and Duties always comes together என்பார்கள். நல்ல கமெண்ட் வேண்டும் என்று உரிமையாக அவர்கள் கேட்டால், அப்படி கமெண்ட் செய்பவர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகள் கொடுப்பது தங்கள் கடமை என்பதை அவர்கள் உணர வேண்டும்.
அதற்காக நான் அப்டேட் கொடுத்தே ஆக வேண்டும் என கழுத்தில் கத்தி வைப்பது போல சொல்லவில்லை. ஆனால் தாமதம் ஆகும் என்றால், தோராயமாக எவ்வளவு கால தாமதம் ஆகும் என சொல்லி விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா நண்பா?
கீதுவெங்கி என்ற ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். அவர் வாரத்துக்கு ஒரு அப்டேட் தான் முடியும் நண்பா என சொல்லி இருக்கிறார். சூப்பர், அப்படி ஓப்பனாக சொல்லி, சொல்லிய படியே நடந்தால் யாவருக்கும் நலமே. அவருக்கு என் கோடானு கோடி நன்றிகள்
ரொம்ப கால தாமதம் ஆகும் என்றால், அந்த கதையை மறந்து அடுத்த கதைக்கு நாங்கள் செல்வோமே. ஆனால் கமெண்ட் செய்த பாதி கதைகளுக்கு இதான் நிலை என்றால், அடுத்து சென்ற கதைக்கு முன்பு போல எங்களால் ரசித்து கமெண்ட் செய்ய முடியுமா நண்பா?
நான் ஏற்கெனவே சொல்லியது தான். கதை எழுதும் ஆசிரியர்கள் எல்லாம், "என் கதைக்கு கமெண்டே வருவதில்லை" என தங்கள் ஆதங்கங்களை தனி த்ரெட்டாகவோ, அல்லது தங்கள் கதையிலோ கொட்ட முடியும். ஆனால் நல்ல கமெண்ட் கொடுத்தும், அப்டேட் கிடைக்காமல் போகும் கமெண்டேட்டர்கள் நிலையை நாங்கள் எங்கே சென்று பதிவு செய்வது நண்பா
தண்ணீரிலே மீன் அழுதால் - அதன்
கண்ணீரை தான் யார் அறிவார்?
Quote:நாங்கள் எழுதுவதை ஜாலியாக விமர்சியுஙகள், ஜாலியாக திட்டுங்கள் ! ஜாலியாகவே எடுத்துக் கொள்ளுங்கள் !ஜாலியா திட்டவா? அது எப்படி நண்பா ஜாலியா திட்ட முடியும்? தலைவன் வடிவேலு கோவை சரளாவிடம் சொன்ன காமெடி தான், எனக்கு நியாபகம் வருகிறது (ஒன்னும் இல்ல சிம்ரன். அவன் என் பால்ய சினேகிதன் - ஆரம்பத்துல இருந்தே நான் அவன் குடும்பத்த கேவலமா பேசுவேன். அவன் என் குடும்பத்த ரெம்ப கேவலமா பேசுவான். இத நாங்க ஜாலியாவே எடுத்துகுவோம்)
ஏம்பா நண்பா, "அப்டேட் ஏன் இல்லை" என்று நாங்கள் சாதாரணமாக சொன்ன சில வார்த்தைகளே உங்களுக்கு மன அழுத்தம் கொடுக்கிறது என்றால், நாங்கள் ஜாலி என்ற பெயரில் சொல்லி திட்டினால் மட்டும் உங்கள் மனம் வருந்தாதா? எப்படிபா, நீயே ஒரு நியாயம் சொல்லு நண்பா
சரி இனி, நான் ஓவராக பில்டப் கொடுத்த என் கமெண்ட்களில் சில இங்கே உங்கள் பார்வைக்கு
01
02
03
04
05
06
இவை எல்லாம் இந்த அரை மாதத்தில் (பிப்ரவரி 2025) நான் கொடுத்த கமெண்டுகள்


இங்கே என் முதல் முயற்சி
மில்க் ஜான்ஸன் எழுதிய என்னங்க! உங்க அப்பா மோசம்! அவரால நான் 10 மாசம்! கதையில் என் அப்டேட் (Last 09 March 2025 Night)