19-02-2025, 01:58 PM
(19-02-2025, 01:11 PM)raasug Wrote: அவள் மனசாட்சி அவளுக்கு கொடுக்கும் தண்டனை !
அவள் தற்கொலை முயற்சி செய்கிறாளா ?
குற்ற உணர்ச்சியால் கையை அறுத்துக் கொண்டாள் ! ரத்தம் அதிகமாக வெளியே போனதால் அவளுக்கு மயக்கம் வந்திருக்கிறது. உடனடியாக மருத்துவம் செய்தால், அவள் பிழைப்பாள் !
கதாநாயகன் உடனடியாக அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வானா ?
கண்டிப்பாக அழைத்துச் செல்வான் ! காரணம் அவனுக்கும் மனசாட்சி இருக்கிறதே ! அவன் மீது இருக்கும் தவறை அவன் மனசாட்சி எடுத்துச் சொல்லுமே ! காம உணர்ச்சிகள் பொங்கும் ஒரு இளம் பெண்ணை தனியே தவிக்க விட்டுட்டு பணம் சம்பாதிக்க வெளிநாடு போகிறானே ! அவளையும் கூடவே அழைத்துச் சென்றிருக்கலாமே ! அது இயலாத பட்சத்தில் தன்னுடைய இயலாமையை ஒப்புக் கொள்ள வேண்டுமல்லவா ?
இருவர் மீதும் தவறு இருக்கிறது ! ஆகவே இதன் தீர்வை வள்ளுவ பெருந்தகைக்கு விட்டு விடுகிறேன்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்:
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.
அருமையான கருத்து கொண்ட கதை !
தொடரட்டும் அடுத்த பாகங்கள்
உங்களுடைய கருத்துக்கு எதிர் கருத்து சொல்வதாக நினைத்து கொள்ள வேண்டாம் நண்பா
அவளுடைய கணவனும் வெளிநாட்டில் சுற்றுலா போகவோ அல்லது ஏகபோகமாக வாழவோ செல்லவில்லை அங்கேயும் குடியும் குட்டியுடன் வாழவும் இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது.அவன் வெளிநாடு போகும்போது கூட அவள் அவனை போக வேண்டாம் என்றோ அல்லது நானும் கூட வருகிறேன் என்னையும் கூட்டி செல்லுங்கள் என்று சொன்னது போல இல்லை.
அவன் வெளிநாட்டில் இருக்கும் போது அவள் தவறான உறவு வைத்துக் கொண்ட போதிலும் ஒருநாள் கூட அவனிடம் மனம் திறந்து தன்னுடைய ஏக்கத்தை கூறியதில்லையே நண்பா.
இவளை விடுங்கள் மகள் வயதுடைய பெண்ணின் தனிமையை பயன்படுத்தி அவளிடம் தவறாக நடந்து இரண்டு முறை கருக்கலைப்பு செய்யும் அளவுக்கு கொண்டு போய் இருக்கிறானே அந்த மிலிட்டரி அவனையும் மன்னித்து விட்டு விடலாமா நண்பா.