05-02-2025, 03:59 PM
(This post was last modified: 05-02-2025, 04:15 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
வசந்தும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் அங்கே வந்த நோக்கத்தை விரைவாக புரிந்து கொண்டான் ரிஷி.
மேற்கொண்டு என்ன செய்வது? தற்சமயம் அவனுக்கு எதுவும் பிடிபடவில்லை.
அவன் ஜன்னல் வழியாக உற்று பார்த்து கொண்டிருப்பதை கண்டு அபர்ணா அவனருகே வந்தாள்.
"என்ன ரிஷி.."
"போலீஸ்.."
"அப்படியா.. வா உடனே போய் அந்த காமவெறியன் மகேஷ் எனக்கு பண்ண அநியாயத்த சொல்லி கம்ப்ளைன்ட் பண்ணிடலாம்.."
"அவசரப்படாத.. போலீஸ் கூட வசந்த்தும் இருக்கான்.."
"அதனாலென்ன ரிஷி..?"
"பணத்த கொடுத்து கூட கூட்டிட்டு வந்திருக்கலாம் அபர்ணா.. உன் வீட்டு அட்ரஸ அவங்களுக்கு கொடுத்தியா..?"
"இல்ல.. ஏரியா பேரு மட்டும் சொல்லிருக்கேன்டா.."
"ஒகே.. அத வச்சு இங்க மோப்பம் பிடிச்சு வந்திருக்காங்க நினைக்குறேன்.. என்ன ஆனாலும் சரி.. கதவ திறக்காத.."
"எதுக்காக இங்க வந்திருக்காங்க ரிஷி..?"
"சொல்றேன் அபர்ணா.. அதுக்கு முன்னாடி இந்த வீட்ட விட்டு வெளியே போக வேற எதாச்சும் வழி இருக்கா.."
"இருக்கு.. பால்கனி வழியா.. பைப் பிடிச்சு இறங்கினா முதல் மாடிக்கு வந்துடுவோம்.. அங்கேயிருந்து குறுக்கா பேஸ்மென்ட் போக ஒரு படிக்கெட்டு இருக்கு.. சரி.. எதுக்கு கேக்குற..?"
"ஒகே.. இப்ப சொல்றதுக்கு நமக்கு டைமில்ல.. எல்லாத்தையும் டீடைல்லா அப்புறமா சொல்றேன்.. ஓரு பூட்டும் சாவியும் கொடுக்குறியா..?"
எடுத்து கொடுத்தாள்.
மீண்டும் ஜன்னல் வழியே எட்டி பார்த்தான். அங்கே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலையில் வருவோர் போவோரிடம் விசாரித்து கொண்டிருந்தார். வசந்த் நகம் கடித்து கொண்டிருந்தான்.
இன்னும் சில நிமிடங்களில் இவர்கள் எப்படியும் அபர்ணாவின் ஃப்ளாட் கதவை தட்டுவது உறுதி. அதற்குள் துரிதமாக செயல்பட்டாக வேண்டும்.
"சீக்கிரமா வந்துடுறேன்.. நா வர்ர வரைக்கும் யாராச்சும் கதவ தட்டுனா திறக்காத அபர்ணா.."
"ஒகேடா.. பார்த்து போடா.."
பால்கனி பைப்பை பிடித்து கொண்டு.. கவனமாக கீழறங்கினான் ரிஷி.
முதல்மாடி வந்தடைந்தான்.
கொஞ்சம் இருட்டாய் நிறைய அழுக்காய் இருந்த குறுக்கு படிக்கட்டுகளில் இறங்கி பேஸ்மென்ட் வந்தடைந்தான்.
வரிசையாக நின்ற கார், பைக்குகளை கடந்த பின் லீஃப்டை கண்டுபிடித்தான். நம்பர் இரண்டை அமுக்கி விட்டு இரண்டாவது தளத்துக்கு வந்தான்.
அபர்ணாவின் ஃப்ளாட் கதவு முன்பாக வந்து தாழ்ப்பாள் போட்டான். கையோடு கொண்டு வந்த பூட்டை மாட்டி பூட்டு போட்டான்.
முழு திருப்தியடைந்தவனாக.. திரும்பி சென்றான்.
இம்முறை லீஃப்டில் போகாமல் பிரதான படிக்கட்டுகளில் இறங்கி பேஸ்மெண்ட் வந்து.. மீண்டும் அழுக்கடைந்த குறுக்கு படிக்கட்டுகளில் ஏறி முதல் மாடிக்கு வந்து.. நிறைய மூச்சு வாங்கினான்.
சற்று நிதானித்தவன்.. மீண்டும் பைப் வழியாக ஏறி அபர்ணா வசிக்கும் பால்கனியில் வந்து இறங்கினான்.
உள்ளே வந்தவன்.. கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காமல், உள்ளே எரிந்த அனைத்து விளக்குகளை மின் சாதனங்களை துரிதமாக அணைத்தான்.
"அபர்ணா.. நா சொல்ற வரைக்கும் எதுவும் பேசாத.. சைலண்டா இரு.. எனக்கு எதாவது சொல்லனோம்னா சைகை பாஷைல மட்டும் பேசுடி.. ஒகேவா.."
சரியென தலையாட்டினாள் அபர்ணா.
அமைதியாக சோஃபாவில் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள்.
ரிஷியின் விரல்களுக்குள் தன் விரல்களை கோர்த்து கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் அபர்ணா.
அவள் தலைமூடியை வருடிக் கொண்டே.. ஃப்ளாட்க்கு வெளியே எழும்பும் அனைத்து ஒலிகளையும் கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான் ரிஷி.
ஒரு பத்து நிமிடம் கழித்து..
பூட்ஸ் கால்களின் ஒசையும்.. அதன் தொடர்ச்சியாக.. அவர்கள் இருந்த ஃப்ளாட்டின் கதவு தட்டும் சத்தமும் தெளிவாக கேட்டன.
"சார்.. கதவு பூட்டிருக்கு.."
"இந்த ஃப்ளாட் நம்பர் க்ரேக்ட் தானே.."
"ஆமாங்க சார்.."
"ஒகே.. அப்போ வீட்ட விட்டோ.. இல்ல இந்த சிட்டிய விட்டோ ஒடி போயிருப்பாங்க வசந்த்.."
"எப்படி சார்.. அவ்வளவு சீக்கிரம் ஒடி போயிருக்க முடியும்.. ஆச்சர்யமா இருக்கு சார்.."
"சிசிடிவி கூட இல்லாத பழைய அபார்மெண்ட் இது.. ச்சே.. நம்ம கெட்ட நேரம்.."
"சார்.. இப்ப அவன எப்படி பிடிக்கறது..?"
"எப்படியும் போலீஸ்கிட்ட மாட்டாமலா போயிடுவாங்க.. அவன் மேல பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளிடுறேன்.. சரி.. வசந்த்.. இங்க நின்னு டையத்த வேஸ்ட் பண்ணாம.. அவங்களோட ப்ரண்ட்ஸ் கிட்ட போய் விசாரிப்போம்.. கிளம்பு.."
மறுபடியும் பூட்ஸ் காலடி தடங்களின் ஒசைகள்.. தேய்ந்து ஒய்ந்து போயின.
லீஃப்ட் இயங்கும் சத்தம் முடிந்தது போனதும்.. எழுந்து ஜன்னல் அருகே நின்று கொண்டு எட்டி பார்த்தான்.
இருவரும் ஜீப்பில் கிளம்பி மறையும் வரை அமைதி காத்தான்.
"இப்ப கேளுடி.. சொல்றேன்.." அறையிலிருந்த மௌனத்தை கலைத்தான் ரிஷி.
"எனக்கு ஒரளவு புரியுதுடா.. ஆனா எதுக்கு போலீஸ் நம்ம வீடு தேடி வரனும்..?"
"என்ன கைது பண்ணறதுக்கு..?"
"ஆனா நீ தான் எந்த தப்பும் பண்ணலயேடா..?"
"நா வசந்த் ஆபிஸுக்கு வந்து போனது.. அவங்க சிசிடிவியில ரிக்கார்டு ஆயிருக்கும்.. அத ஆதாராம வச்சி டைரக்டர் மகேஷ அடிச்சு போட்டு இருபது லட்சத்த தூக்கிட்டு போயிட்டானு பொய் கேஸ் போட திட்டம் போடுறாங்க.. அந்த பணத்தையும் என்னையும் தேடி தான் இங்க வந்திருந்தாங்க.."
"உண்மையில நாம தானே அவன் மேல வன்கொடுமை கேஸ் கொடுக்கனும் ரிஷி.. நீ செய்ஞ்சது எந்த தப்புமில்லடா ரிஷி.. ஏன் பயப்படுற..?"
"நா எனக்காக பயப்படல அபர்ணா.. உன் எதிர்காலத்துக்காக யோசிக்குறேன்.. சப்போஸ் அவன் மேல பலாத்கார வழக்கு நாம போட்டோம்னா.. கேஸ் நிக்கும்.. நானும் தப்பிச்சிடுவேன்.. அவனுக்கும் தண்டனை வாங்கி கொடுத்துடலாம்.. ஆனா உன் சினிமா கனவு.. அத யோசிச்சி பாத்தியாடி..? இனிமே யாருமே உனக்கு சான்ஸ் கொடுக்க மாட்டாங்க.."
சோர்வாக சோஃபாவில் அமர்ந்து கொண்டாள் அபர்ணா. ரிஷி சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
"நமக்கு மூணு சாய்ஸ் தான் இருக்கு அபர்ணா.. நீ சரின்னு சொன்னா அத உடனே செயல்படுத்திடுறேன்.."
"என்ன ரிஷி..?"
"முதல் சாய்ஸ்.. மகேஷ் கொடுத்த இருபது லட்சத்தோட எங்கனா தலைமறைவா போய்.. யாருக்கும் தெரியாம நாம இரண்டு பேரும் புது வாழ்க்கை ஆரம்பிக்குறது.. இந்த பணத்த வச்சு அங்க புது பிஸ்னஸ் கூட தாராளமா தொடங்கலாம்.. இரண்டாவது சாய்ஸ்.. டைரக்டர் மகேஷ் மேல வன்கொடுமை கேஸ் போட்டு அவன கடைசி வரை எதிர்த்து நின்னு போராடுறது.. நாம எங்கேயும் ஒடி ஒளிய தேவையில்ல.. இருந்த இடத்துலேயே வாழ்ந்திடலாம்.. கடைசி சாய்ஸ்.. கொஞ்சம் கஷ்டமான எமோஷலான சாய்ஸ்.. நீ விருப்பப்ட்டா சொல்றேன் அபர்ணா.."
"அதையும் சொல்லிடு ரிஷி.. எதுக்கு தயங்குற..?"
"நா ஜெயிலுக்கு போறது.."
"ய்யோஒஒ ரிஷி.. என்னடா இப்படி பேசற.."
"முழுசா கேட்டுட்டு அப்புறமா உன் பதில சொல்லு அபர்ணா.. மகேஷோட ஆபிஸ்ல இருந்து இருபது லட்ச ரூபாய திருடிட்டு.. தடுக்க வந்த அவரையும் வசந்த்தையும் நா அடிச்சு போட்டதா மாஜிஸ்ட்ரேட் முன்னாடி சரணடைஞ்சுடுவேன்.. நா மட்டும் தான் இதுல இன்வால்வ் ஆகியிருக்கேன்.. இதுல வேறு யாருக்கும் சம்பந்தமில்லனு வாக்குமூலம் கொடுத்துடுவேன்.. அவங்களால உன்ன இதுல இழுக்க முடியாது.. ஏன்னா பதிலுக்கு மகேஷ் வன்கொடுமை பண்ணின விஷயத்த வெளிய சொல்லிடுவேனு கண்டிப்பா பயப்படுவாங்க.. ஸோ நீ எந்த தொந்தரவு இல்லாம உன் சொந்த ஊருக்கு போய் இருக்கலாம்.. நா ஜெயிலுக்கு போயிடுவேன்.. தண்டனை முடிஞ்சு வெளிய வந்த எனக்காகவே காத்திருக்க முடிஞ்சா இரு.. இல்ல உன் வாழ்க்கைய பார்த்துட்டு போயிட்டே இரு.. உன் மேல எந்த பழியும் இல்லாததனால.. நீயும் திரும்ப சினிமா சான்ஸ் தேடலாம்.. நிம்மதியா உன் கனவ அடைய இது தான் நல்ல வழி.. என்ன சொல்ற..?"
"எப்படிடா உன்னால இப்படியெல்லாம் யோசிக்க முடியுது.. நீ எந்த திருட்டு பட்டமும் வாங்கிக்க வேணாம்.. முதல் இல்ல இரண்டாவது சாய்ஸுக்கே போயிடலாம்டா.. ப்ளீஸ்.. என் பேச்ச கேளுடா.."
"எப்படி யோசிச்சி பாத்தாலும்.. அந்த இரண்டு சாய்ஸ்லையும் உனக்கு சினிமா சான்ஸ் கிடைக்க வழியில்ல அபர்ணா.. பணத்த இழந்துட்டு.. என் கைல அடி வாங்கின மகேஷ் சும்மா இருப்பானா.. அவன் செல்வாக்க வச்சு.. எதாவது ஒரு வகையுல நமக்கு தொந்தரவு கொடுத்துட்டே இருப்பான்.. அதையும் நீ புரிஞ்சுக்கனும்டி.. கடைசி சாய்ஸ் தான் பெட்டர்னு எனக்கு தோணுது.. ஏன்னா என்ன பழிவாங்கிட்ட திருப்தில அமைதியாயிடுவான்.. உன்னையும் சீண்ட மாட்டான்.."
"எனக்கு சினிமாவே வேண்டாம்டா.. எங்கேனா போய் நிம்மதியா வாழ்ந்திடலாம்டா.. ப்ளீஸ்.. அது போதும் எனக்கு.."
"நிம்மதியா வாழ்ந்திடலாம்.. ஆனா உன்னால சந்தோஷமா இருக்க முடியுமா அபர்ணா.. உன் கனவ விட்டுட்டு எங்கிட்ட வந்தா உனக்கு 'அட்ஜஸ்ட்மெண்ட்' லைஃப் தான் கிடைக்கும்.. என்னோட பொண்டாட்டியா.. குழந்தைகள பெத்து வளர்த்துகிட்டு.. உன்னால கடைசி வரை மிடில் கிளாஸ் வாழ்க்கை ஏத்துக்கிட்டு காலம் தள்ள முடியுமா அபர்ணா.. சொல்லு.. அதனால நமக்கு சண்டை வந்து பிரிவு கூட பின்னாடி உண்டாகலாம்.. கொஞ்சம் ப்ராக்டிகல்லா நல்லா யோசிச்சி பாரு.. இப்ப நா ஜெயிலுக்கு போக கூடாதுனு உணர்ச்சி வசப்பட்டு தப்பான முடிவுக்கு மட்டும் வந்திடாத.."
"உன்ன மாதிரி ஒருத்தன விட்டுட்டு எப்படிடா நா சந்தோஷமா இருப்பேன்.. ப்ளீஸ்டா.. என் கூடவே இருடா.."
ரிஷியின் கைகளை பிடித்து கெஞ்சினாள் அபர்ணா. ஆனால் ரிஷி தன் முடிவில் உறுதியாய் இருந்தான்.
"அது இப்போதைக்கு முடியாதுடி.. சரி.. விட்டா இதையே தான் திரும்ப திரும்ப பேசிட்டே இருப்போம்.. நா ஆல்ரெடி முடிவெடுத்துட்டேன்.. நா இப்ப போய் கோர்ட்ல சரணடைஞ்சுடுறேன்.. அதுக்கு முன்னாடி என் பைக்க வித்தா எப்படியும் ஒரு ஐம்பதாயிரம் தேறும்.. அதை உன் யூபிஐக்கு அனுப்பிடுறேன்.. கை செலவுக்கு வச்சிக்கோ.. நா சரணடைஞ்ச பிறகு மெசேஜ் அனுப்புறேன்.. அப்ப நீ உடனே உன் சொந்த ஊருக்கு கிளம்பி போயிடு.. நா ஜெயில்ல இருக்கும் போது எக்காரணத்த கொண்டும் என்ன வந்து பாக்காதடி.. மீறி வந்து பாத்தா.. நீயும் போலீஸ் சந்தேக வளையத்துக்குள்ள வந்துடுவ.. ஒரு மூணு மாசம் கழிச்சு சென்னை வந்து சான்ஸ் தேடு.. இந்த முறை ரொம்ப உஷாரா நீ இருக்கனும்.. இன்னிக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால இண்டஸ்ட்ரில யார் யாரு நல்லவங்கனு உனக்கு ஒரு தெளிவு கிடைச்சிருக்கும்.. அத வச்சு நம்பிக்கையா நம்பகமானவங்ககிட்ட மட்டும் சான்ஸ் தேடு.. கண்டிப்பா இந்த முறை உனக்கு கிடைக்கும்டி.. எனக்கு நம்பிக்கை இருக்கு.."
"நா செய்ஞ்ச தப்புக்கு நீ தண்டனை அனுபவிக்குறது மனசுக்கு கஷ்டமா இருக்குடா.. "
"முதல்ல அப்படி தான் இருக்கும்.. அப்புறம் போக போக சரியாயிடும்டி.. நீ என்னோட பாதிடி.. குற்றவுணர்ச்சிக்கு இங்க இடமில்லடி.. இப்ப இருக்குற நம்பர மாத்திடு.. உங்க சொந்த வீட்ல உன் புது நம்பர குடுத்துட்டு போ.. தண்டனை முடிஞ்சு வந்து வாங்கி உன்ன கால் பண்றேன்.. இனிமே உன் கஷ்டமெல்லாம் போயிடும்.. அந்த இருபது லட்சத்துல அஞ்சு லட்சத்த எடுத்துக்கோ.. மீதி பணத்த என்கிட்ட கொடுத்துடு.. பாவப்பட்ட பணம்னு நினைக்காதடி.. உன் சினிமா வளர்ச்சிக்கு அத யூஸ் பண்ணுக்கோடி.. புரிஞ்சுதா..? கண்ண கசக்கிட்டு இருக்காத.. ஆக வேண்டியத பாரு.."
"ம்ம்.. எல்லாத்துக்கும் ஒரு பதில வச்சு என் வாய அடைச்சிடுற.. எப்படிடா உன்னால ஈஸியா என்ன விட்டு போக முடியுது.."
"நேத்து என்ன விட்டு விலகிப்போனு நீ சொன்னப்போ.. அப்போ வந்த வலி.. மனசுக்குள்ள குத்துன அந்த வலி.. மறக்க முடியுமா.. அதையே நா தாங்கிட்டேன்.. இத என்னால தாங்க முடியாதா என்ன..?"
"ய்யோ.. ரிஷி.. சாரிடா.. உனக்காக கடைசி வரைக்கும் நான் வெய்ட் பண்றேன்டா.. இது சத்தியம்.."
அவன் கைகளை பிடித்து கொண்டு உள்ளங்கையில் அடித்து பேசினாள்.
"இது போதும்டி.. ஆயுசு முழுக்க தாங்கிடுவேன்.. எனக்கு எப்படியும் இரண்டு மூணு வருஷம் கிடைக்கும்னு நினைக்குறேன்.. தண்டனை முடிஞ்சு உன்ன வந்து பாக்குறேன்.. இன்னொரு விஷயம்.. என் ப்ரண்டோட லவ்வர்.. பேரு சுதா.. ரொம்ப நல்லவங்க.. அவங்க நம்பர் கொடுக்குறேன்.. மூணு மாசம் கழிச்சு நீ வரும் போது.. அவங்க வீட்ல தங்கி சான்ஸ் தேடு.. அது உனக்கு பாதுகாப்பான இடம்.."
சுதாவின் நம்பரை அனுப்பி விட்டு நிமிர்ந்த போது.. அவன் உதடுகளை கவ்வி.. அழுத்தமாக முத்தமிட்டாள்.
சில நிமிடங்களாக நீடித்த அந்த முத்தத்தில் தங்கள் காதலை உணர்ந்தார்கள். பிரிவின் வலியை உணர்ந்தார்கள். பிரகாசமான எதிர்காலத்தை உணர்ந்தார்கள்.
ஐந்து லட்சத்தை கழித்து.. அபர்ணாவிடம் மீதி பணத்தை பெற்று கொண்டான்.
"சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குல்ல அபர்ணா.. டேக் கேர்.. சீ யூ சுன் அபர்ணா.."
இறுதியாக அபர்ணாவிடம் விடைபெற்று கொண்டு.. சற்று முன்னர் திறந்த முன் கதவின் வழியே வெளியேறினான்.
நேராக தன் பைக் இருக்குமிடம் சென்றான். நல்லவேளையாக அங்கு போலீஸ் இல்லை.
தனக்கு தெரிந்த பைக் சர்வீஸ் சென்டரில் நல்ல விலைக்கு விற்றான்.
அந்த பணத்தை அபர்ணாவுக்கு உடனே அனுப்பி விட்டான்.
கோர்ட் வாசல் வரை நடந்தே வந்தவன்.. உள்ளே போகாமல் ஒரு கணம் அங்கேயே நின்றான்.. அபர்ணாவை நினைத்து குலுங்கி குலுங்கி அழுதான்.
கண்களை துடைத்து கொண்டு திடமாக உள்ளே நுழைந்தான்.
வெளியே வானம் கருத்து போய்.. மழை பெய்யலாமா என யோசித்து கொண்டிருந்தது.