28-06-2019, 12:43 PM
பாகம் 11.
நாங்கள் கிளம்பினோம்.
நான் சொன்னது என்ன என்று புரியாமல் கொஞ்ச நேரம் முழித்தவள், யோசனையில், அவளது கண்கள் பெரிதானது. ஏதோ ஒன்றை புரிந்து கொண்ட, அவள், என்னைப் பார்த்த பார்வையில் வலி, வேதனை, கோபம், வருத்தம் எல்லாம் கலந்த ஒரு உணர்வு இருந்தது.
நீங்களாண்ணா, இப்பிடி சொல்றது? இப்படிச் சொல்ல எப்பிடிண்ணா உங்களுக்கு மனசு வந்தது?
இல்லை மைதிலி நான் என்ன சொல்றேன்னா…
பேசாதீங்கண்ணா, உங்களை எப்பிடி நினைச்சிருந்தேன். எவ்ளோ உசரத்துல வெச்சிருந்தேன். சொல்லப் போனா, உங்களை மாதிரி ஒரு புருஷன் எனக்கு வந்திருக்கக் கூடாதான்னு நான் ஏங்கியிருக்கேன். ஆனா, நீங்க போயி் இப்படி…
இல்லை, மைதிலி நீ தப்பா புரிஞ்சிகிட்ட…
பின்ன, நீங்க சொன்னதுக்கு என்னண்ணா அர்த்தம்? முள்ளை முள்ளால எடுக்கலாம்ன்னா, அவிங்களை மாதிரியே நாமும் கள்ள உறவு வெச்சுக்கலாம்னு சொல்றீங்களா?
அவளையே, நான் பார்த்துக் கொண்டிருக்க, அவள் இன்னும் தொடர்ந்தாள். பழிவாங்கலாம்ன்னீங்க. ஓகே. ஆனா, அவிங்களை மாதிரி நாமும் செஞ்சா, அப்புறம் அவிங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? ஒருவேளை நாம் அப்பிடி பண்ணாலும், அவிங்களுக்கு அது சாதகம்தானே, அதைக் கூட நீங்க யோசிக்கலியா? இதுக்கு நீங்க என்னை சாகவே உட்டிருக்கலாம்ண்ணா!
இவ்வளவு நேரம் அவள் என்னிடம் உரிமையாய் காட்டிய கோபத்தை ரசித்தவன், கடைசியில் அவள் மீண்டும் சாவைப் பற்றி பேசியவுடன், எனக்கு கோபம் வந்தது. பேசி முடிச்சிட்டியா? இல்லை இன்னும் இருக்கா?
எனது கோபத்தில் ஏதோ நியாயம் இருப்பதை உணர்ந்தவள், சட்டென்று அமைதியானாள். எங்கோ பார்த்த படி கேட்டாள்,
பின்ன, ஏண்ணா அப்பிடிச் சொன்னீங்க?
நான் அப்பிடிச் சொன்னேனா??? நான் சொன்னது வார்த்தைகள்தான்... நீதான் அதுக்கு வேற அர்த்தம் கொடுத்துகிட்ட!
என்னைத் திரும்பி பார்த்தவளின் கண்கள் மலர்ந்தது! வேறு சேரில் உட்கார்ந்திருந்தவள், சட்டென்று எழுந்து என்னருகே மண்டி போட்டவள், சாரிண்ணா, வேற யாரு சொல்லியிருந்தாலும் அப்படி பேசியிருக்க மாட்டேன். நீங்க அப்பிடி பேசினதால, உணர்ச்சி வசப்படுட்டேன். சாரி. இப்ப, சொல்லுங்க என்ன ப்ளான்னு!
அவளை எழுப்பி, என்னருகே என் சோஃபாவில் உட்கார வைத்தவன், இப்பவும் சொல்றேன், முள்ளை முள்ளாலத்தான் எடுக்கனும் என்று சொல்லி இடைவெளி விட்டு அவளைப் பார்த்தேன்.
இந்த முறை அவள் சுதாரித்துக் கொண்டவள், என்னையும் புரிந்து கொண்டாள். சிரித்துக் கொண்டே, இன்னும் விளக்கமாச் சொல்லுங்க என்றாள்!
இங்க பாரு, என்கிட்ட இன்னமும் முழுத் திட்டமும் இல்லை. பாதிதான் ரெடி… ரெண்டு பேரையும் ஒரே டைம்ல பழி வாங்க முடியாது. முதல்ல ப்ரேம், அப்புறந்தான் ப்ரியா. ப்ரியாவை முதல்ல டார்கெட் பண்ணா, ப்ரேம் சுதாரிச்சுக்குவான். அப்புறம் அவனை பழி வாங்க முடியாது. அது கூட பிரச்சினையில்லை. ஆனா, அவன் ஷார்ப் ஆயிட்டானா, உனக்கு ஏதாவது ஆபத்து வரலாம். அதுனால, முத டார்கெட்டு அவன் தான். தென் ப்ரியா. என்று சொல்லியவன், மெல்ல என் திட்டத்தை விவரித்தேன்.
திட்டம் அவளுக்கும் ஓகே என்பதை அவள் முகமே சொல்லியது. எல்லாவற்றையும் சொன்ன பின், கேட்டாள். அப்ப நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன?
நாம என்ன செய்யுறதுக்கும் முன்னாடி, அவிங்களுக்கு எதிரா நிறைய ஆதாரம் வேணும். அதுக்குதான், முந்தா நேத்தே, மும்பைல இருந்து வந்தா மாதிரி வீட்டுக்கு போயிட்டாளும், ரெண்டு நாளா லீவ் போட்டு சில வேலைகள் செஞ்சிருக்கேன்!
அப்பிடி என்ன செஞ்சீங்க?
என் பெட் ரூம், ஹால், எல்லாத்துலியும் பவர்ஃபுல் ஹிடன் காமிரா, மைக்ரோஃபோன் எல்லாம் ஃபிக்ஸ் பன்ணியிருக்கேன். அவிங்க பேசுறது, செய்யுறது எல்லாமே பதிவாகும். கண்டிப்பா, இந்த 5 நாள் லீவ்ல அவிங்க மீட் பண்ணுவாங்க. ஏன்னா, வழக்கமா ஊருக்கு போற நீங்க, இந்த முறையும் போறீங்களான்னு ப்ரியாவே கேட்டா! ஏன் வர்றியான்னு கேட்டதுக்கு இல்லை எனக்கு உடம்பு முடியலை, என்னால வர முடியாதுன்னு சொல்றதுக்குதான் கேட்டேன்னா.
அப்ப கண்டிப்பா அவிங்க மீட் பண்ணலாம். எனக்கும், ரொம்ப நாளைக்கு இதை வளத்துறதில இஷ்டம் இல்லை. அதுனால வீடியோ எவிடன்ஸ்தான் பெஸ்ட். அப்புறம், எனக்குத் தெரிஞ்ச டிடக்டிவ் ஏஜன்சிகிட்ட ரிப்போர்ட் ரெடி பண்ணச் சொல்லியிருக்கேன். தெரிஞ்ச லாயர்கிட்டயும் கன்சல்ட் பண்ணியிருக்கேன்.
ஆமாண்ணா, என்கிட்ட கூட ப்ரேம் கேட்டான். நான் ஊருக்கு ஏதாவது போகனுமான்னு? அவனுக்கு ஆஃபிஸ்ல, முக்கியமான ப்ராஜக்ட் டெலிவரி டைம், அதுனால, 5 நாளும் ஆஃபிஸ் போகனும், வீட்டுக்கு கூட வர முடியுமான்னு தெரியலைன்னு சொன்னான்!
ம்ம்… அப்ப நீ, ஊருக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு இங்க வந்துடு. ஏண்ணா, ப்ரேம், என் வீட்டுக்கு போனதுக்கப்புறம், உங்க வீட்ல சில வேளைகள் இருக்கு. நம்ம ப்ளானுக்கு இன்னும் பல ஸ்டெப்ஸ் முடிவு பண்ண வேண்டியிருக்கு.
என் வீட்டுல என்னண்ணா?
ம்ம்ம்… இதே மாதிரி காமிராவும் மைக்கும் உன் வீட்டுலயும் ஃபிட் பண்ணனும். அவன் கிட்ட யூஸ் பண்ர வீடியோல, பொது இடமோ, இல்ல உங்க வீட்டு பேக்கிரவுண்ட் இருக்கிரதுதான் சேஃப். தவிர, இதுக்குப் பின்னாடி நான் இருக்கிறேன்னு அவனுக்கு தெரியவே கூடாது! அதான்.
மைதிலியும் கண்ணை மூடிக் கொண்டு சரி என்றாள்.
என் கன்சர்ன் ஒண்ணுதான். நாம ப்ரேமை டார்கெட் பண்றப்ப, உனக்கு சப்போர்ட்க்கு ஒரு ஆளு வேணும். ஏன்னா, இது ப்ரியாவுக்கு தெரியக்கூடாது. என்னாலயும், ஒரு அளவுக்கு மேல இதுல உள்ள நுழைய முடியாது. அதான் யோசிக்கிறேன்.
கொஞ்சம் யோசித்தவள், மெல்லச் சொன்னாள். என் அப்பா தான்னா கரெக்ட். எப்டின்னாலும் அவர்கிட்ட சொல்லித்தானே ஆகனும்! ஆனா, எப்பிடிச் சொல்லுவேன், என்ன சொல்லுவேன்னுதான் ஒண்ணும் புரியலை என்று புலம்பினாள்.
அவளது கவலை புரிந்ததால், சொன்னேன். இப்போதைக்கு எதுவும் நினைக்காத மைதிலி. முதல்ல, எல்லாம் ரெடி பண்ணலாம். அப்புறம் பாத்துக்கலாம். என்று சொன்னவன். சரி, லேட்டாச்சு, கிளம்பு, நான் வீட்ல உன்னை விட்டுடுறேன். ப்ளான் ஞாபகம் இருக்கட்டும் என்றேன்.