19-01-2025, 07:28 PM
பாகம் - 12
பேராசிரியரின் சத்தம் கேட்டு மாட்டிக்கொண்டோம் என்ற பதட்டத்துடன் இருவரும் இயல்பு நிலைக்கு வந்தனர். இருவரும் பேராசிரியரை பார்த்தனர். அவர் ஆண்கள் வரிசையில் நடு மேசையில் இருக்கும் ஒரு மாணவனைப் பார்த்து எழுந்து நிற்க சொன்னார். "ஒய் ஆர் யூ லாஃபிங்? ஏம் ஐ டூயிங் ஸ்டேண்டப் காமெடி?" என்று காட்டமாக கேட்க, அவன் "சாரி சார்" என்று பம்மிய படி பதிலளிக்க, "கெட் அவுட் ஆஃப் மை க்ளாஸ்" என்று அவனை வெளியே துரத்தி விட்டு பாடத்தை தொடர்ந்தார். ஹேமாவும், சதீஷும் தப்பினோம் என்று பெருமூச்சு விட்டு, பாடத்தை கவனித்தனர். இருந்தும் இருவரும் அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்க்க தவறவில்லை.
இடைவேளையில் ஹேமாவிடம் இருந்து சதீஷிற்கு வாட்சப்பில் மெசேஜ் வந்தது.
ஹேமா: எதுக்கு என்னையே பாத்துட்டு இருந்த?
சதிஷ்: அப்டிலாம் இல்லையே! நான் க்ளாஸ தான் கவனிச்சிட்டு இருந்தேன்!
ஹேமா: டேய்! பொய் சொல்லாத! நீ பாத்தது எனக்கு நல்லா தெரியும்!
சதிஷ்: நான் பாத்தன்னே வச்சிப்போம்! அது உனக்கெப்படி தெரியும்?
ஹேமா: அது பொண்ணுங்களுக்கு இருக்க சூப்பர் பவர்.
சதிஷ்: நல்ல பவர் தான்! ஆனா நான் க்ளாஸ் ஃபுல்லாலாம் உன்ன பாத்துட்டேலாம் இல்ல. அப்போப்போ பாத்தேன். அவ்ளோ தான்!
ஹேமா: அப்டியா?சரி சொல்லு! எதுக்கு என்னையே பாத்துட்டு இருந்த?
சதிஷ்: உன் கன்னத்துல எப்போவும் இல்லாம புதுசா ஒரு பரு வந்திருக்கே! அதான் பாத்தேன்!
ஹேமா: ஐயோ! அவ்ளோ அப்பட்டமாவா தெரியுது?
சதிஷ்: ஆமா!
ஹேமா: அசிங்கமா இருக்கா பாக்க?
சதிஷ்: நான் அப்டிலாம் ஒன்னும் சொல்லலையே
ஹேமா: உண்மைய சொல்லுடா!
சதிஷ்: உண்மைய தான் சொல்லுறேன்!
ஹேமா: நான் நம்ப மாட்டேன். நான் வீட்டுக்கு கெளம்பி போறேன். பரு சரி ஆனப்புறம் காலேஜ்க்கு வரேன்.
சதிஷ்: இதுக்குலாமா வீட்டுக்கு போவாங்க?
ஹேமா: கொஞ்சம் இன்செகியூரா இருக்கு. அதான்
சதிஷ்: ஹே! பரு இருக்குனு தான் சொன்னான். அது பாக்க அசிங்கமா இருக்குனு சொன்னானா?
ஹேமா: வேற எப்படி இருக்கு?
சதிஷ்: பெட் ஆஃப் ரோசஸ் மாதிரி இருக்கு.
ஹேமா: ஐயோ! வெட்கப்பட வைக்குறியே!
சதிஷ்: நீ எதுக்கு தனியா வெக்கப்படலாம் கஷ்டப்படுற? உன் பருவே அல்ரெடி நீ வெக்கத்துல இருக்க மாதிரி தான் காட்டுது.
ஹேமா: போதும்பா! இதுக்கு மேல என்னால கேக்க முடியாது!
சதிஷ்: அப்போ நான் உன்ன பாக்கலைனு ஓத்துக்கோ
ஹேமா: மாட்டேன்! நீ பாத்தத நான் பாத்தேன்!
சதிஷ்: சரி, நீ ஏன் என்ன பாத்த?
ஹேமா: அது, நீ ஏன் பாக்குறனு பாத்தேன்
சதிஷ்: நம்பிட்டேன்!
ஹேமா: உன் கிட்ட இன்னைக்கு ஏதோ மாற்றம் தெரியுதே?
சதிஷ்: என்ன மாற்றம்? தெளிவா சொல்லு.
ஹேமாவின் தோழிகள் வர,
ஹேமா: சரி, அப்புறம் பேசலாம்!
என்று கைப்பேசியை மூடி மறைத்தாள்.
அன்று இரவு மீண்டும் ஹேமா தொடர்ந்தாள்.
ஹேமா: ஹாய் டா.
ஹேமாவிடம் இருந்து மெசேஜ் வருமா என்று எதிர் பார்த்த படி அமர்ந்திருந்த சதிஷ் உடனடியாக பதில் சொன்னான்.
சதிஷ்: ஹாய் ஹேமா!!!
ஹேமா: ஃபிரீயா இருக்கியா?
சதிஷ்: ஃபிரீ தான். சொல்லு. என்ன விஷயம்?
ஹேமா: ஏதாவது விஷயம் இருந்தா தான் பேசணுமா?
சதிஷ்: ப்ளீஸ். நான் அப்டி மீன் பண்ணலன்னு உனக்கு நல்லாவே தெரியும்
ஹேமா: ஹ்ம்ம்..
சதிஷ்: என் கிட்ட ஏதோ மாற்றம் தெரியுதுனு சொன்னியே! என்னது?
ஹேமா: அதான் எனக்கும் தெரியல. ஆனா உன் கிட்ட கண்டிப்பா ஏதோ சேஞ்ச் இருக்கு.
சதிஷ்: சொன்னா தான தெரியும்?
ஹேமா: எக்ஸாக்டா தெரியலடா. தெரிஞ்சா சொல்ல மாட்டேனா?
சதிஷ்: சரி ஒகே.
ஹேமா: ஹ்ம்ம்.
இருவரும் 2 நிமிடங்கள் மௌனம் காக்க,
ஹேமா: நான் ஒன்னு கேட்ட்டா தப்ப எடுத்துக்க மாட்டியே!
சதிஷ்: கேளு
ஹேமா: நாளைக்கு எங்கேயாவது வெளிய போலாமா?
சதிஷ்: நானே இத கேட்கலாம்னு இருந்தேன். ஆனா திடீர்னு கேட்டா தப்ப எடுத்துப்பியான்னு கேக்கல.
ஹேமா: ஹ்ம்ம். எங்க போகலாம்?
சதிஷ்: தெரியலையே. உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?
ஹேமா: மூவி?
ஹேமா சினிமாவுக்கு போகலாம் என்று சொன்னவுடன் சதீஷிக்கு புல்லரித்தது.
சதிஷ்: போகலாமே! ரீஸண்ட்டா தமிழ்ல ஏதாவது நல்ல படம் ரிலீஸ் ஆகிருக்கா?
ஹேமா: தமிழ் சினிமால எடுக்குற நல்ல படத்தலாம் பாத்து ஒப்பாரி வச்சிட்டு தான் வரணும். நாம இங்கிலிஷ் படம் போகலாம்.
சதிஷ்: நீ சொல்லுறதும் சரி தான். இங்கிலீஷ்ல ஏதாச்சு நல்ல படம் ரிலீஸ் ஆகிருக்கா?
ஹேமா: நெறய படம் ரிலீஸ் ஆகியிருக்கு. ஆனா ரிவியூ டுகெதர் ஃபாரெவர் படத்துக்கு தான் நல்லாருக்கு. அதுக்கே போகலாமா?
சினிமா என்று ஹேமா சொன்னதற்க்கே சதீஷுக்கு புல்லரித்தது. காதல் திரைப்படம் என்று சொன்னது, அவனுக்கு 'கண்ணா! ரெண்டு லட்டு தின்ன ஆசையா?!!' போன்று ஆனது. இருந்தும் எதையும் காட்டிக்கொள்ளாமலே,
சதிஷ்: டன். பட் எப்போ போறது?
ஹேமா: க்ளாஸ் கட் அடிச்சிட்டு போக முடியாது. ஒரே நேரத்துல 2 பேரும் இல்லனா, மத்தவங்களாம் கொஞ்சம் சந்தேகப்படுவாங்க. அதனால ஈவினிங் ஷோ போகலாம்.
ஏற்கனவே 2 லட்டுகள் சாப்பிட்டு கொண்டிருந்த சதீஷுக்கு ஹேமா மற்றவர்கள் சந்தேகப்படுவர் என்று சொல்லியது மூன்றாவது லட்டாக அமைந்தது. மீண்டும் ஒன்றும் காட்டிக்கொள்ளாமலே,
சதிஷ்: சரி ஒகே. ரெண்டு பேரும் வழக்கம் போல வீட்டுக்கு போற மாதிரி கிளம்புவோம். தியேட்டர்ல மீட் பண்ணுவோம்.
ஹேமா: ஆல்ரைட்.
சதிஷ்: சரி, நாளைக்கு பாக்கலாம். குட் நைட்.
ஹேமா: குட் நைட்.
இருவரும் அடுத்த நாள் வகுப்புகள் முடிந்து, அவர்களின் திட்டப்படி தனித்தனியாக பக்கத்தில் உள்ள மாலில் உள்ள தியேட்டருக்கு வந்து சேர்ந்தனர். டிக்கெட்டை காண்பித்து விட்டு உள்ளே சென்று கார்னர் சீட்டில் அமர்ந்தனர். அனைத்தும் தான் நினைத்தது பொலவே நடந்து வருவதை நினைத்து உள்ளத்தில் மகிழ்ந்தான். இருவரும் தங்களுடைய சீட்டில் அருகருகே அமர்ந்தனர். ரொமான்ஸ் படத்தில் நிறைய கட்டிப்பிடி காட்சிகளும், முத்தக் காட்சிகளும், ஆங்கில படம் என்பதால் உடலுறவு காட்சிகளும் வரும், அவையெல்லாம் ஹேமாவின் உணர்ச்சிகளை தூண்டி, அவர்களுக்குள் தீண்டல் ஏற்படும் என்று கனவுக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தான். படம் ஆரம்பித்தது. நாயகனும் நாயகியும் பார்ப்பது, பேசுவது என்ற காதலின் முதற்கட்ட காட்சிகள் நன்றாக இருந்தது. அடுத்து காதலர்கக்குள் நடக்கும் மத்த சமாச்சாரங்களை எதிர் பார்த்து காத்திருந்த சதீஷுக்கு மிஞ்சியதெல்லாம் ஏமாற்றமே! கதையின் நாயகன், நாயகியுடன் சண்டை போடுவதும், மீண்டும் சமாதானம் ஆவதும், மீண்டும் சண்டை போடுவதும் என படம் முழுக்க ஒப்பாரியாக இருந்தது. இதற்க்கு தமிழ் படங்களில் வரும் ஒப்பாரியே மேல் என்று சலித்துக்கொண்டு, ஹேமாவிற்காக வேறு வழி இல்லாமல் பார்த்து முடித்தான். படம் முடிந்து வெளியே வரும்போது, ஹேமா அவனைப் பார்த்து "செம ரொமான்டிக்கா இருந்ததுல?" என்று கேட்ட பொழுது சதீஷின் முகத்தை பார்க்க வேண்டுமே!! ஆனாலும் வேறு வழி இல்லாமல், "ஆமா, செம ரொமான்டிக்" என்று பொய்யை சொல்லி விட்டு, ஹேமாவை கேப்பில் ஏற்றி விட்டு, அவன் தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு கிளம்பினான்.
அடுத்து 2 வாரங்கள் இருவரும் கல்லூரி முடிந்ததும், யாருக்கும் தெரியாமல் ஊர் சுற்றுவது வழக்கமானது. அனால் அனைத்தும் அந்த சினிமாவை போலவே முடிந்தது. சதிஷ் எதிர் பார்த்தது ஒன்றும் நடக்கவில்லை. அடுத்த நாள் ஹேமா வழக்கம் போல் கடற்கரைக்கு செல்லலாம் என்று கேட்க, சதீஷும் சம்மதிக்க, கல்லூரி முடிந்ததும் இருவரும் வழக்கம் போல தனித்தனியே கிளம்ப தயாரானர். ஆனால், சதிஷ் பைக்கை எடுத்துக்கொண்டு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வரும்பொழுது, ஹேமா நின்றிருப்பதை பார்த்து வண்டியை உடனே நிறுத்தினான். "என்ன ஆச்சு?கேப் கிடைக்கலையா?" என்று கேட்க, "நான் இன்னும் புக் பண்ணவே இல்ல. உன் கூடவே பைக்ல வரேன்" என்று சொல்ல, ஹேமாவை பைக்கின் பின்னால் அமர வைத்துக்கொண்டு சதிஷ் பைக்கை ஓட்டினான். இருவரும் 5 மணி அளவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.
பக்கத்தில் இருக்கும் கடைகளில் ஆசைப்பட்ட தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு இருவரும் கடற்கரை மணலில் சென்று அமர்ந்தனர். சாப்பிட்டுக் கொண்டே ஹேமா வழக்கம் போல கதை பேச ஆரம்பித்தாள். 'இன்னைக்கும் இவ மொக்க போடுறத கேக்கறது மட்டும் தான் மிச்சம்' என்று மனதில் நினைத்த படி, ஹேமா பேசுவதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தான். 7 மணி தாண்டியது. போதுமான அளவுக்கு இருள் சூழ்ந்தது. அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த பகுதியில், மின் விளக்கும் இல்லை. பெரிதும் ஆள் நடமாட்டமும் இல்லை. அவர்களைப் போலவே மற்ற ஜோடிகள் மட்டும் தேவையான இடைவெளி விட்டு அவர்களின் காதல் களியாட்டங்களை நடத்த்தினர். ஆனால் ஹேமாவோ, அந்த இருட்டிலும் தன்னுடைய கதைகளை மட்டும் பேசிக்கொண்டிருந்தாள். 'இதுக்கு மேல பாடி தாங்காது!' என்று நினைத்த சதிஷ், எப்படி கிளம்புவது என்று யோசித்துக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் ஹேமா பேசுவதே அவன் காதில் விழவில்லை, அவன் சிந்தனை எங்கெங்கோ சென்றது. திடீரென்று அவன் கன்னத்தை பிடித்து யாரோ ஆட்டுவது போல் இருந்தது. சுய நினைவுக்கு வந்தான். அது ஹேமா தான்.
ஹேமா: என்னடா? கூப்பிட கூப்பிட பதிலே சொல்ல மாட்டுற?
என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான். சரி எதையாவது சொல்லி சமாளிப்போம் என்று
சதிஷ்: கடல்ல அலைய பாத்துட்டே இருந்தேன். அப்டியே ஃபேஸ் அவுட் ஆகிட்டேன்.
ஹேமா: அதுக்கு தான் நீ லாயக்கி.
திடீரென்று ஹேமா திட்டுவதை கேட்டு பதறிய சதிஷ்,
சதிஷ்: நான் என்ன பண்ணேன்ட்டு திட்டுற?
ஹேமா: நீ எதுவுமே பண்ண மாட்டுறனு தான் திட்டுறேன்.
சதிஷ்: நான் நெனைக்குறத தான் நீ சொல்லுறியா?
ஹேமா: நீ என்னத்த நெனைக்கிறனு எனக்கெப்படி தெரியும்? 2 வாரமா நீ தொடுவனு உன்ன கூட்டிட்டு வெளிய சுத்திட்டு இருக்கேன். தியேட்டருக்கு கூட்டிட்டு போய் கார்னர் சீட்டுல உக்கார வச்சா, நீ அந்த கன்றாவி படத்த எதோ காவியம் மாதிரி பாத்துட்டு இருக்க. பைக்லயாவது கூட்டிட்டு போவனு பாத்தா, நீ கேப் வர வரைக்கும் வெயிட் பண்ணி ஏத்தி விடுற. சரினு நானே பைக்ல கூட்டிட்டு பொன்னு சொல்லி பின்னாடி உக்காந்துட்டு வந்தா, பின்னாடி ஏதோ 70 வயசு கெழவி உக்காந்துட்டு இருக்க மாதிரி ஓட்டுற. சரினு பீச்க்காவது கூட்டிட்டு வந்து வெளிச்சம் இல்லாத எடத்துல உக்காரவச்சா நீ அலைய பாத்துட்டு இருக்க. சாமியாரா போக போறியாடா? இல்ல, அவனா நீ?
'நான் ஒரு கதைய நெனச்சிட்டிருந்தா, இவை இப்டி ஒரு ட்விஸ்ட் குடுக்குறாளே!' என்று நினைத்துக்கொண்டு அதிர்ச்சியில் உறைந்தான். ஒரு வழியாக பேசலாம் என்று வாயை திறக்க வரும் பொழுது, ஹேமா மீண்டும் தொடர்ந்தாள்.
ஹேமா: இது எல்லாத்தயும் மன்னிச்சிடுவேன். ஆனா, கிஸ் குடுடானு 3 தடவ சொன்னது கூட காதுல வாங்காம, சித்த ப்ரம்ம புடிச்ச மாதிரி உக்காந்துட்டு இருக்க பாத்தியா? என் லைஃப்ல மறக்க மாட்டேன். உனக்கு போய், இத்தன நாளா காத்திருந்தேன் பாத்தியா? என்ன சொல்லணும்.
ஹேமாவின் பேச்சு சதீஷை திக்கு முக்காட வைத்தது.