15-01-2025, 01:17 PM
(15-01-2025, 07:39 AM)jspj151 Wrote: எதிர் பாராத முடிவு ஆனால் மிக இயல்பான ஒரு நிறைவு ..
கணத்தில் தடுமாறி பின் மீண்டு விடுவது மனித இயல்பு...
சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்...
நான் reddit தளத்தில் படித்த உண்மை அனுபவ நிஜக் கதைகள் பெரும்பாலும் இப்படித்தான் இருந்தன..சிறிய தடுமாற்றம் அப்புறம் மீண்டு விடுவது..அக் கதைகளை எனது த்ரெட்டில் பதிவிட இக் கதை எனக்கு நினைவூட்டியது
இன்னொன்று உங்கள் தமிழ் மிக மிக நேர்த்தி..சிறிய தவறு கூட இல்லை..
(ஆனால் அந்த அம்மா ஏன் அழுதாள் என்பதைதான் சொல்லவே இல்லை ,...அப்படி விட்டதும் நல்லதே)
தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் மிகுந்த நன்றி சகோதரா!!
இந்த கதை முழுவதும் விக்னேஷின் பார்வையிலிருந்தே சொல்லப்பட்டது. விக்னேஷுக்கு தெரியாது வானதி ஏன் அழுதாள் என்று. வானதியிடம் அதை பற்றி உரையாடும் வாய்ப்பும் அவனுக்கு கிடைக்கவில்லை. அனால், நம் வாழ்வின் அனுபவங்கள் கொண்டும், வானதி மற்றும் ராஜகோபாலன் கதாபாத்திரங்களின் குணாதிசியங்களை கொண்டும், வானதி ஏன் அழுதிருப்பாள் என்று வாசகர்களால் ஓரளவு யூகிக்க முடியும். அனால், அது யூகம் மட்டுமே!! உண்மையில் ஏன் அழுதாள் என்று வானதிக்கு மட்டுமே வெளிச்சம்!