கதை திருட்டு!!
#1
Exclamation 
அன்புள்ள கதாசிரியர்களே!

இது பல நாட்களாக எனக்கு கவலை அளித்துக்கொண்டிருக்கின்ற ஒரு விஷயம்.

எனக்கு என்னவோ, நாம் இங்கு எழுதும் கதைகள் எல்லாம் வேறெங்கோ விற்கப்படுகின்றனவோ என்று பல நாட்களாக சந்தேகம் உள்ளது.

அதன் காரணம் கொண்டே நான் முடித்த என் கதையின் பல பதிவுகளையும் நீக்கினேன். நன்றாக ஓடிக்கொண்டிருந்த ஒரு கதையையும் நிறுத்தினேன்.

ஏன் எனக்கிந்த பயம்?

நண்பர்களே! இந்த தளத்தின் வருகை மிகவும் குறைவு! ஒட்டுமொத்தமாக சேர்த்துப்பார்த்தாலும் 5000 பேருக்கு மேல் இந்த தளத்திற்கு வர மாட்டார்கள் என்பது என் கணிப்பு.

இன்னும் சொல்லப்போனால் எனக்கே இப்படி ஒரு தளம் இருப்பது இரண்டரை மாதங்களுக்கு முன்பு தான் தெரிய வந்தது. 

ஆனால், தமிழகத்திலோ காமக்கதையை விரும்பி படிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையோ லட்சக்கணக்கில் இருக்கும்.

5000ஐ லட்சத்துடன் ஒப்பிடும்போது, அது குறிப்பிட தகுந்த சதவீதம் இல்லை. கிட்டத்தட்ட அது ஒன்றுமே இல்லை என்றுமே வைத்துக்கொள்ளலாம்.

பல telegram பக்கங்களிலோ, அல்லது வேறேதாவது தளங்களிலோ இங்கு எழுதப்படும் கதைகளை விற்றாலும், அது கதை எழுதியவருக்கு தெரியவர வாய்ப்பில்லை.

நாம் இங்கு லைக்ஸ்களுக்கும், கருத்துக்களுக்கும் காவல் காத்துக்கொண்டு இருக்கும்போது, சில ஒட்டுண்ணிகள் இதை வைத்து லாபம் பார்க்கிறார்களோ என்ற ஒரு சந்தேகமும் என் மனதில் உள்ளது.

என்னை paranoid என்று கருத வேண்டாம்.

நான் போடும் twitter postகளிலுமே வீடீயோவை திருடி, பிறகு captionஐ திருடி, இரண்டையும் ஒன்றாய் சேர்த்து, தன்னுடைய கற்பனை என்று போடும் பிறவிகளும் உண்டு. பல உண்டு!!

கதை திருட்டையும் சந்தித்துள்ளேன். எனக்கு தெரிந்த ஒரு நண்பர், ஒரு பக்கம் உள்ள ஒரு சுமாரான கதையை எழுதி அதை அவருடைய பக்கத்தில் பதிவிட்டார். ஆனால் வெறும் பெயரை மட்டும் மாற்றி, அதை தன் கதை என்று வேறொருவன் அதை அடுத்த நாளே அவனுடைய பக்கத்தில் பதிவிட்டுருந்தான்.

அதற்கே அந்த நிலைமை என்றால், கண்டிப்பாக நாம் எழுதும் கதைகள் எல்லாம் ஏதோ ஒரு வடிவில் சூறையாடப்பட்டு, நம் உழைப்பை அவர்கள் உழைப்பு என்று மாற்றிவிடும் பலர் உண்டு என்ற ஒரு கனத்த சந்தேகம் என் மனதில் உண்டு.

இந்த சந்தேகம் நியாயம் தானா? அப்படி என்றால் அதை எப்படி தடுப்பது?

என்னுடைய secret message லிங்கையும் இங்கே பகிர்கிறேன். இதை பதித்துக்கொண்டிருக்கும் guest users இதை பற்றி ஏதேனும் தெரிவிக்க வேண்டி இருந்தால், தயவு செய்து தெரிவியுங்கள்.   

https://www.secretmessage.link/secret/67cd8847efbdb/

குறிப்பு: இது ஒரு கதைக்காக ஆரம்பிக்கப்பட்ட திரி. அந்த கதை இப்போதைக்கு ஆரம்பிக்கப்படாது. எனவே அதை convert செய்து விட்டேன்.
[+] 2 users Like antibull007's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
கதை திருட்டு!! - by antibull007 - 05-01-2025, 02:26 AM



Users browsing this thread: