Non-erotic Tamilla yen ivvalavu incest stories irukku?
#6
(02-01-2025, 03:05 PM)Kavinrajan Wrote: இந்த கேள்வி பல நாளா எனக்குள்ளேயும் இருக்கு நண்பா.. என்னோட ஒரு த்ரில்லர் கதையை இங்கிலீஷ்ல மொழி மாற்றம் செய்ஞ்சி அங்க பதிவு பண்ணா என்னனு கூட யோசிச்சிட்டு இருக்கேன்.. அந்தளவுக்கு இங்க திகட்ட திகட்ட போயிட்டு இருக்கு.. மத்த ஜானர் கதைகளுக்கு சரியான வேல்யூ இல்ல..

இன்செஸ்ட் எழுதறது தப்பில்ல.. அதுக்கு மட்டும் ஏன் அவ்ளோ முக்கியத்துவம் தர்றிங்கனு பல முறை என்னோட த்ரியில கேட்டும் யாருமே பதில் சொல்ல மாட்டேங்குறாங்க நண்பா..

இதுக்கு நா பதில் சொன்னா இன்செஸ்ட் எதிர்க்குறேனு பொத்தம் போதுவா சொல்லிடுவாங்க..

ஸோ இன்சேஸ்ட் கதைகளுக்கு மட்டுமே ஆதரவு கொடுப்போம்னு உறுதியா சிலர் இருக்காங்க.. அவங்க இந்த கேள்விக்கு பதில் சொன்னா சரியா இருக்கும்..

இருந்தாலும் என்னோட கதையை படிக்கும் வாசகர்கிட்ட இதே கேள்வியை கேட்டேன்.

அவரு சொன்னத அப்படியே இங்க சொல்றேன்.. இன்செஸ்ட் கதைங்க படிக்குறது ரொம்ப இன்டிரஸ்டிங்கா இருக்கு.. அதுக்காக நா வீட்ல இன்செஸ்ட் செய்றனு தப்பா நினைக்காதீங்க.. இன்செஸ்ட் படிக்க மட்டும் தான்.. அப்படினு முடிச்சாரு.. இன்னொரு விஷயம் அந்த வாசகர் என்னோட த்ரில்லர் கதை கூட வாசிக்க மறுத்துட்டது இன்ஸ்டிரங்கான விஷயம்.

அதே எண்ணத்தில் தான் மத்த வாசகர்களும் இங்க இருப்பாங்கன்னு நினைக்குறேன்.

இப்படி பெரும்பாலான வாசகர்கங்க மத்த ஜானர படிச்சு ஆதரவு கொடுக்காம.. இன்சேஸ்ட்டே கதினு இருந்தா.. பாவம் எழுத்தாளருங்க என்ன பண்ணுவாங்க.. அதான் மொத்தமா உஜாலாவுக்கு மாறிட்டாங்க.. 

நா இன்செஸ்ட் கதைகள படிப்பதில்லை.. எழுதுவதில்லை.. எதிர்ப்பதும் இல்ல.. ஏன் அதுக்கு மட்டும் அதிகமா ஆதரவு கொடுக்குறிங்கனு கேக்குறேன். அவ்வளவு தான்.

இது தான் என்னோட பதில்.

சில விசயங்கள் எனக்கும் இதுவரை புரியவில்லை நண்பரே.நீங்கள் கேட்ட கேள்வி தான் பல நாளாக எனக்குள்ளேயும் ஓடிக்கொண்டு இருந்தது.இங்கு இன்செஸ்ட் கதைகளை படிக்கும் வாசகர்கள் மிக மிக அதிகம்.அதனால் அந்த கதைகளுக்கு கிடைக்கும் வரவேற்பும் அதிகம்.நானும் இன்செஸ்ட் கதைகளை படிப்பதும் இல்லை,எழுதுவதும் இல்லை.அதனால் அந்த கதைகளை எழுதும் ஆசிரியர்களின் கதைகளையும் படிப்பதும் இல்லை.நான் மெனக்கெட்டு தான் கதையை யோசித்து காட்சியை உருவாக்கி எழுதுகிறேன்.ஆனா views ஏனோ வருவது இல்லை.நான் எழுதும் பாகங்கள் எனக்கு பிடித்து இருக்கிறது.ஆனா மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை.அதனால் சோர்வு அடைந்து அவ்வப்பொழுது எழுதாமல் விட்டு விடுவேன்.பின்பு யாராவது ஒரு வாசகர் பாராட்டி கமென்ட் போட்டால் மீண்டும் உற்சாகம் அடைந்து எழுதுவேன்.இப்போ கொஞ்சம் personal problems சேர்ந்து கொண்டு மனம் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாகி விட்டது.ஒரு நீண்ட gap.பிறகு ரெண்டு பாகம் எழுதி போட்டு இருக்கிறேன்,தொடர்ந்து படிக்கும் வாசகர்களுக்காக.நான் ஒரு வாக்குறுதி கொடுத்து இருக்கேன்,எக்காரணத்தை கொண்டும் கதையை பாதியில் நிப்பாட்டி விட மாட்டேன் என்று.ஆனா இப்போ இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் நிப்பாட்டி விடுவேனோ என்று எனக்கே பயமா தான் இருக்கு

இன்செஸ்ட் கதைகளுக்கு ஏன் இப்படி ஒரு வரவேற்பு என்று தெரிந்து கொள்ள சும்மா ஒரு பெண் user id உருவாக்கி,ஒரேயொரு line மட்டும் எழுதி ஒரு திரியை உருவாக்கினேன்..கதையே எழுதவில்லை,ஆனா 15 comments மேலே ரெண்டே நாளில் வந்தது.Views அள்ளி கொண்டு போனது.மாயமலை கதையை யோசித்து யோசித்து விரல் வலிக்க வலிக்க மொபைலில் type செய்த பாகத்துக்கு கூட அந்த அளவு views வரல..நொந்து போய்ட்டேன்.. போங்க.இதுக்கு மேல என்ன தான் முக்கி முனகி fantasy அல்லது வேறு கதைகள் எழுதினாலும் views வராது என புரிந்து கொண்டேன்.ஆர்வம் இருக்கிற வரை எழுதுவேன்.ஆர்வம் போய் விட்டால் நிறுத்தி விட்டு போக வேண்டியது தான்.
[+] 1 user Likes Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: Tamilla yen ivvalavu incest stories irukku? - by Geneliarasigan - 02-01-2025, 05:42 PM



Users browsing this thread: 5 Guest(s)