02-01-2025, 02:33 AM
(25-12-2024, 01:16 PM)krishnaid123 Wrote:கதையின் ஒரு பாகம் முழுமையாக முடிந்து விட்டால் அதை சிறிய இடைவேளையில் பதிவிடுங்கள். மற்றவர் கருத்துக்கு எதிர்பார்த்து இருந்தால் கதையின் முழு வடிவம் உங்களால் கொடுக்க முடியுமா என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதையும் எதிர்பார்க்காமல் கதை பதிவு செய்ய முடியாது புரிகிறது. ஆனால் மற்றவர் கருத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க எப்படி முடியும் ஆதலால் முடிந்தவரை பதிவு செய்து பின்பு கருத்து கேட்டால் நல்லது
தங்கள் கருத்திற்கும் புரிதலுக்கும் ஆலோசனைக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கதையை பொருத்த வரை ஒரு பாகத்தை எழுதி வைத்திருக்கிறேன். மூன்று பாகங்களாக வெளியிட தீர்மானித்திருக்கிறேன். இன்னும் எழுதி முடிக்கவில்லை என்றாலும் கதை எப்படி பயணிக்க வேண்டும், எப்படி முடிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானித்து விட்டேன். அதை கண்டிப்பாக மாற்ற போவதில்லை.
நான் வாசகர்களிடம் கேட்கும் கருத்து என்னவென்றால் கதையின் வரிகள் வர்ணனைகள் உரையாடல்கள் சொல்லும் விதம் இவைகளைப் பற்றிய விமரிசனங்களை. கதையின் அடிப்படையையே மாற்ற சொல்லும் கருத்துகளை அல்ல. இதை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும். இது மேலோட்டமாக பார்த்தால் திமிர் போன்று தோன்றும். ஆனால் புரிந்துக் கொண்டால், கதாசிரியரின் சிரமம் புரியும். ஒரு கதையை இப்படி எழுதுங்கள் என்று 4 பேர் சொல்கிறார்கள். இப்படி எழுத வேண்டாம் என்று 4 பேர் யோசனை சொல்கிறார்கள். நான் என்ன செய்ய முடியும். அதனால் என் மனதில் இருக்கும் கதையை நான் மாற்றம் செய்யாமல் பதிவிட போகிறேன்.
கதையின் ஒரு பகுதி இப்போது பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு தங்கள் கருத்தை சொல்லி தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் நண்பா.
மீண்டும் நன்றி.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.