31-12-2018, 09:43 AM
பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்தது இந்தியா: மெல்போர்னில் 150-வது டெஸ்ட் வெற்றி: பும்ரா சாதனை
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து ஓடி வந்த கேப்டன் விராட் கோலி
மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் டிராபியை தக்கவைத்துள்ளது.
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் 2 டெஸ்ட் வெற்றிகளை இந்திய அணி முதல்முறையாகப் பெற்றுள்ளது. கடந்த 1980-81-ம் ஆண்டில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி இதே மெல்போர்ன் மைதானத்தில் கிரேக் சாப்பல் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை வென்றது. ஏறக்குறைய 37 ஆண்டுகளுக்குப் பின் 2 வெற்றிகளை ஆஸி. மண்ணில் இந்தியா பெற்றுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பை இந்தியாவில் நடந்த போது அதை இந்திய அணி கைப்பற்றி இருந்ததால், இந்த தொடர் சமன் அடைந்தாலும், அந்த கோப்பை இந்திய அணி வசமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மழை குறுக்கிட்டு ஏறக்குறைய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்காததால், போட்டி சமனில் முடிந்து இந்திய அணியின் வெற்றியை மழை தடுத்துவிடுமோ என்று கவலை நீங்கியது.
உணவு இடைவேளைக்குப்பின் மழை நின்றதால், மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 5 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் மீதமிருந்த 2 விக்கெட்டுகளையும் இசாந்த், பும்ரா வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.