31-12-2024, 01:14 PM
அத்தியாயம் - 9
அவளை ரெஸ்டாராண்டில் இறக்கி விட, அவள் ஸ்கூட்டி எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றாள், அவள் அறையில் தேவிகா காத்துக் கொண்டிருந்தாள்
சொல்லு டி தேவி, சாப்டியா
ஆச்சு க்கா, நீ
ஹ்ம்ம் ஹ்ம்ம்
அவள் குளியளறைக்குள் நுழைந்து கால் மட்டும் கழுவி வெளியே வந்து, அவளின் படுக்கையில் விழுந்தாள்
என்ன க்கா முகம் கழுவுல, துணி மாத்தல, அப்படியே படுத்துட்ட
செம அசதியா இருக்கு டி
அவள் மௌனமாக பார்த்தாள்
நீ சொல்லு டி
ஒன்னும் இல்ல க்கா நீ தூங்கு நாம அப்புறம் பேசிக்கலாம்
சரி செல்லம் குட்நைட்
குட்நைட் க்கா
மறுநாள் அரிதாக அனைவரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்
ஹே இளவரசி நீ எங்க கிளம்பிட்ட
காலேஜ்க்கு அக்கா
இரு டி, உங்க காலேஜ் பிரின்சிபால் இன்னும் எதுவும் சொல்லலியே
நேத்து எனக்கு காலேஜ்ல இருந்து போன் வந்துச்சு என்றார் ராம் பிரகாஷ், தொடர்ந்து...
அந்த பசங்கள அவங்க அப்பாவ கூட்டினு வர சொன்னாங்களாம், அவரு வந்து மன்னிப்பு கடிதம் எழுதி, அவங்க ரெண்டு பேரும் இனிமே இப்படி நடக்காது, ஒருவேளை நடந்தால் கல்லூரி எந்த முடிவு வேணாலும் எடுத்துக்கொள்ளலாம்னு கையெழுத்து போட்டாங்களா
ஓ... நல்லது, இனி அவங்க எந்த பிரச்சனையும் பண்ணமாட்டாங்க இளசு, பயப்படாம போ என்றாள் பாரு
சரி அக்கா
பின்பு, தேவிகாவிடம் இன்னைக்கு நான் உன்ன ட்ராப் பண்ற டி
ஏன் டி என்னாச்சு அவ காலேஜ் பஸ்சுக்கு என்று நர்மதா கேட்டாள்
எனக்கு அந்த பக்கம் சின்ன வேல இருக்கு அதான்
சரி சரி, பார்த்து போயிட்டு வாங்க
இருவரும் ஸ்கூட்டியில் கிளம்ப
யாரு டி பையன்?
பையன் இல்ல வாத்தியார்
என்னது வாத்தியாரா? என்று பிரேக் அடித்தாள்
அக்கா அக்கா வாத்தியார்னா 40 வயசு இல்ல, சின்ன வயசு ஆள் தான், 25 வயசு
ஓ அப்படியா சரி சரி என்று மீண்டும் வண்டியை ஓட்டினாள்
நீ இப்போ கண்டிப்பா காலேஜ் வரணுமா?
ஏன் உன் ஆள எனக்கு அறிமுக படுத்த மாட்டியா?
அப்படியில்ல அவருகிட்ட எதுவும் சொல்லல
ஓ.. அவ்ளோ தூரம் போச்சா விவகாரம்.. எதுவும் சொல்லாம அறிமுகம் ஆகுறதுல தான் த்ரில்
அவளை பைக் பார்க்கிங்கில் இறக்கிவிட்டு, நான் கேன்டீன்ல இருக்க, உங்க ஆள் வருவாரா?
அவரு எப்பவுமே காலையில அங்க டீ குடிக்க வருவாரு
நீ?
நானும் தான்
நீ வராத நான் மட்டும் போற
அவர எப்படி அடையாளம் கண்டுபுடிப்ப?
போன்ல போட்டோ காட்டு டி
கொண்டு வரல
அவரோட சோஷியல் மீடியா அக்கௌன்ட் ஏதாச்சும் சொல்லு
என்னனோட ப்ரொபைல்ல கோகுல்னு சர்ச் பண்ணு பிரண்ட்ஸ் லிஸ்ட்ல
அதெல்லாம் ஹைட் பண்ணமாட்டியா?
வாத்தியார் தானே யாருக்கு சந்தேகம் வர போகுது?
விவரமா தான் இருக்க, சரி நேரமாச்சு நீ போ, உன் ஆள ரேகிங் பண்ணிட்டு வர
பார்த்து பண்ணுக்கா பாவம் அவரு
போ டி எல்லாம் எனக்கு தெரியும்
அவள் கேன்டீன்ல் டீ சொல்ல, அங்கு கோகுல் வந்து அவனும் டீ சொன்னான், அவன் பொதுவாகவே பெண்களை கண்டுக்கொள்ளமாட்டான், இப்போது புதிதாக காதல் வயப்பட்டு வேறு இருக்கிறான், எப்படி இன்னொரு பெண்ணை பார்ப்பான்? அவன் பார்கவியை கண்டுக்கொள்ளவில்லை. முதல் முறை ஒரு ஆண் அவளை துளியும் சட்டை செய்யாமல் அவன் வேலையை பார்ப்பதை இப்போது தான் பார்க்கிறாள்.
குட் மார்னிங் சார் என்றாள்
அவன் உடனே கை கடிக்காரத்தை பார்த்தான் மணி 9 காட்டியது
என்ன டைம் ஆகுது, இன்னும் கிளாஸ் போகாம இருக்க, பைனல் இயரா, எந்த டிபார்ட்மென்ட் நீ என்று அதட்டலாக கேட்டான், அவள் கண்களில் கண் வைத்தபடி
அவளுக்கு மிகவும் பிடித்து போனான், அவனை இன்னும் கொஞ்சம் வெறுப்பேற்ற
குட் மார்னிங் தான சொன்ன, அதுக்கு இப்படி கத்துறீங்க..
வாத்தியாரையே எதிர்த்து பேசுறியா நீ, எந்த டிபார்ட்மென்ட் நீ? சொல்லு உங்க ஹெச்.ஓ.டி கிட்ட பேசுற
ஹ்ம்ம் சிஸ்டர் டிபார்ட்மென்ட், எங்க ஹெச்.ஓ.டிக்கு ( அனுஷா ) கூச்ச சுபாவம், என்கிட்ட தான் பேசணும் நீங்க
அவனுக்கு அப்போது தான் விளங்கியது
ஹையோ பார்கவியா நீங்க, ரொம்ப சாரிங்க, யாரோ ஸ்டுடென்ட் நினைச்சிட்ட, குட் மார்னிங் குட் மார்னிங்
ஹ்ம்ம்... ஆளு செம ஷார்ப்பா இருக்கீங்க, எப்படி டக்குனு புடிச்சிட்டீங்க
லைட்டா சாயல் கூட இருக்கே
ஓ...
இருங்க நான் பே பண்ற என்று அவள் டீக்கும் இவனே காசு கொடுத்தான்.
சரிங்க ப்ரோ, எனக்கும் ஆபிஸ் டைம் ஆகிடுச்சு ஈவினிங் மீட் பண்ணலாம் என்று கிளம்பினாள், அவள் தங்கச்சி நல்லவனை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறாள் என்று சந்தோஷப்பட்டாள்.
ஆபீஸ் போனதும், அதர்வாவை சந்தித்தாள்
நீ ஏன் டி வந்த, ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான
ரெஸ்ட் எடுத்தா என் மாமனார் சம்பளம் பிடிக்காம போடுவாரா? நான் முடிக்காத வேலைய நீ செய்வியா?
ஹா ஹா இனி கம்பெனியே உன்னோடது டி
அதனால தான் ரெஸ்ட் எடுக்காம வந்த
அப்பா கிட்ட நம்மள பற்றி பேசலாம்னு இருக்க
இப்பவே வேணா, அனுஷாக்கு நிச்சயம் ஆகட்டும்
சரி டி
இன்னைக்கு ஈவினிங் பிரீயா?
இல்ல நான் ரொம்ப பிஸி என்ன டிஸ்டர்ப் பண்ணாத என்று சீரியசாக சொல்ல
பார்கவி அவனை ஆச்சிரயமாக பார்த்தாள்
பின்பு ஹா ஹா என்று கிண்டலாக சிரித்து விட்டு, எங்க போகணும் சொல்லு டி போதும் என்றான்.
தேவிகா காலேஜ்க்கு
இப்ப அவளுக்கு பிரச்சனையா?
இல்ல இல்ல, அவளுகம் லவ் பண்றா, அவங்க ஆள காலைல மீட் பண்ண, பக்கா ஜெண்டில் மேன்
(அவனுக்கு, அவள் இன்னொருவனை புகழ்வது சுத்தமாக பிடிக்கவில்லை, ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை)
ஹ்ம்ம்... ஸோ 4 பேரும் வெளிய போறோமா
ஆமா, என் ஆளும் ஷார்ப் தான் என்று அழகாக சிரித்தாள்
மாலை அவள் கல்லூரி வாசலில் காரில் காத்துக் கொண்டிருந்தனர், அவர்கள் இருவரும் அங்கு வர
ஹாய் ப்ரோ, நான் அதர்வா
ஹலோ ப்ரோ கோகுல் என்று கை கொடுத்தான்
இவ தான் தேவிகா
ஹாய் மாமா...
இருவரும் சிரிக்க, கோகுல்க்கு மட்டும் லேசாக புகைந்தது
4 பேரும் காபி ஷாப் போக, இரண்டு ஜோடிகளும் எதிர் எதிரே அமர
அதர்வா அவர்கள் மூவருக்கும் சந்தேகம் வராதபடி தேவிகாவின் அழகையும் அங்கங்களையும் ஆராய்ந்தான்...