29-12-2024, 11:58 PM
அத்தியாயம் - 6
மறுநாள் அதே போல் பெரிய மகள் அனுஷா சமைத்துக் கொண்டிருக்க, டைனிங் டேபிலில் பார்கவிக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள் அம்மா நர்மதா, அப்போது அனுஷா அங்கே வருவதை பார்த்த நர்மதா...
அவ எங்க டி சின்னவ
என்ன கேட்டா
நேரமாகுது இன்னும் ஆள காணோம் என்றவள் இன்னும் 5 நிமிடம் பொறுத்து பார்த்து, வீட்டில் இருந்தப்படியே அவளுக்கு போன் செய்தாள், அவள் எடுக்கவில்லை, அவளே மாடி படி ஏறி சென்று அவள் அறையை நோக்கி நடந்தாள்
அவர்கள் வீடு 5 படுக்கையறை கொண்ட பெரிய வீடு, ஒவ்வொரு அறையும் நன்கு பெரிதாக கட்டிருந்தான் அப்பா ராம் பிரகாஷ், கீழே பெரிய ஹால், சமையலறை, இரண்டு பெரிய படுக்கையறைகள்கள், மேலே மூன்று பெரிய பபடுக்கையறைகள், அதற்கு மேலே பெரிய மாடி அமைந்திருந்தது, எல்லா படுக்கையறையிலும் இணைக்கப்பட்ட பாத்ரூம் இருந்தது, மேல் தளத்திற்க்கு செல்லவும், மாடிக்கு செல்லவும் வீட்டின் உள்ளேயே படிகள் அமைக்கப் பட்டிருந்தது, அந்த படிகளின் வழியாக தான் நர்மதா நடந்து சென்று இளசின் படுக்கையறை கதவை தட்டிக் கொண்டிருந்தாள்
ஹே இளசு இளசு கதவ திற டி நேரமாகுது, என்ன பண்ணிட்டிருக்க
கதவு திறக்கவில்லை
மீண்டும் மீண்டும் தட்ட
அவள் கதவை திறந்து வெளியே வந்தாள், நைட் டிரஸ் தான் அணிந்திருந்தாள்
என்ன டி இன்னும் கிளம்பாம இருக்க
அவள் பதில் பேசவில்லை, முகம் வாடியிருந்தது
என்ன டி உடம்பு ஏதாச்சும் சரியில்லையா என்று அவளை தொட்டு பார்த்தாள்
அம்மா நான் காலேஜூக்கு போகல
ஏன் டி என்னாச்சு
எனக்கு பயமா இருக்கு என்று கண் கலங்கினாள், அப்படியே அவளின் மெத்தை மீது அமர்ந்தாள்.
என்னாச்சு சொல்லு டி, என்னாச்சு மா செல்லம்? அவள் பதறி போனாலும், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை, கண்டிப்பாக கல்லூரியில் ஏதோ பிரச்சனை நடந்திருக்க வேண்டும், அதனால் தான் போக பயப்படுகிறாள், பெரியவளிடம் தான் இவள் மனம் விட்டு பேசுவாள் என்று அவளை அழைத்து வந்தாள்
என்னாச்சு டி கண்ணுக்குட்டி என்று கேட்டாள் அனுஷா
அவள் அழுது கொண்டே, ஒன்னும் இல்ல க்கா, நான் போகல
போலனா இன்னைக்கு மட்டுமா...
என்னைக்கும் போல, போகமாட்ட
நர்மதா இன்னும் பதறி போனாள், இம்முறை அவள் முகத்தில் பயத்தின் ரேகைகள் தெரிந்தது
கீழே அனுஷாவும் சாப்பிட்டு விட்டு, மேல என்ன நடக்குது என்று பார்க்க படி ஏற தொடங்கினாள்
காலேஜ்க்கு டைம் ஆயிடுச்சு நீ கிளம்பு என்றாள் பார்கவி, ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தபடி
அனுஷா மறு வார்த்தை பேசாமல் கல்லூரிக்கு கிளம்பினாள்
முந்தைய நாள் கல்லூரியில் என்ன நடந்தது என்று விவரித்துக் கொண்டிருந்தாள் இளவரசி
எங்க காலேஜ்ல ரெண்டு அண்ண தம்பிங்க இருக்காங்க, சரியான பொருக்கி பசங்க, ரௌடீங்க, ஒருத்தன் பைனல் இயர், இன்னொருத்தன் செகண்ட் இயர், ரெண்டு பேரும் என்ன தான் லவ் பண்றாங்களா, அவனுங்ககுள்ளேயே அடிச்சினு மண்டைய ஒடச்சுக்கிணாங்க, சின்னவன் மண்டையில ரத்தம் வர மாதிரி அடிச்சிட்டான் பெரியவன், அவன் மூஞ்சிலும் செம காயம், காலேஜ் முழுக்க நேத்து இது தான் பேச்சு, எனக்கு போகவே பயமா இருக்கு, சண்ட முடிஞ்சதும் பெரியவன் என்ன மிரட்டுனா
லவ் பண்ணா எங்க ரெண்டு பேருல யாரையாச்சும் ஒருத்தர தான் பண்ணனும், வேற எவனயாச்சும் பார்த்த, அவன் செத்தான் பார்த்துக்கோனு மிரட்டினா
அதுக்காக காலேஜ் போகாம இருப்பியா, இரு நான் அப்பாவ அனுப்பி பேச சொல்ற என்றாள் நர்மதா
அதெல்லாம் வேணாமா ப்ளீஸ், அப்பாக்கு தெரிஞ்சா ரொம்ப பீல் பண்ணுவாரு
அதுக்காக சொல்லாமலே இருக்க முடியாது இளசு என்றாள் அனுஷா
இந்த மாதிரி பிரச்சனைங்க எவ்ளோ பாத்திருப்பாங்க உங்க அக்காங்க என்றாள் நர்மதா
சரி மா நீ அப்பாவ கூப்பிடு போ என்றாள் அனுஷா
அவள் வெளியே வர, இதையெல்லாம் கேட்ட படி நின்றுக் கொண்டிருந்தாள் பார்கவி
அவளை பார்த்து, நீ எப்ப டி வந்த என்று கேட்டாள் நர்மதா
நீ அவர கூப்பிடாத, அவரு காலேஜ் மாத்தலாம்னு சொல்லுவாரு, நாம ஏன் ஓடி ஒளியனும், நான் இப்போ அவ காலேஜ்க்கு தான் போற என்று புறப்பட்டுவிட்டாள்.
அனுஷா வெளியே வந்து அவள் அம்மாவை பார்க்க, அவள் கீழே சென்றுக் கொண்டிருந்த பார்கவியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இனி அவ பார்த்துப்பா விடு என்று அனுஷா அவர்களின் அம்மாவை பார்த்து சொல்ல
ஹ்ம்ம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் நர்மதா.
கல்லூரி முதல்வரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தாள் பார்கவி
சார் நேத்து உங்க காலேஜ்ல இவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கு, நீங்க இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கலயா?
இன்னைக்கு காலையில தான் இந்த விஷயம் என் காதுக்கு வந்துச்சு, அந்த பசங்களயும் சம்மதப்பட்ட பெண்ணையும் கூப்பிட்டு விசாரிக்கலாம்னு தான் இருந்த
சார் என் தங்கச்சி காலேஜ்க்கு வரவே பயப்படுறா, முதல்ல, அந்த பொறுக்கிங்கள டீ.சி கொடுத்து அனுப்புங்க
உங்க கவலை புரியுது பார்கவி, ஆனா எடுத்தோம் கவுத்தோமானு எந்த முடிவும் எடுக்க முடியாது, அவங்கள கூப்பிட்டு விசாரிக்கிற
ஆபீஸ் பியூனை அழைத்தார் அந்த கல்லூரியின் முதல்வர்
பியூன் நீ போய் அந்த பசங்கள கூட்டினு வா என்று அவர்களின் விவரங்களை கூறினார்
பியூன் திரும்பி வரும் வரை, பார்கவியின் அழகை மிகவும் நேக்காக ரசித்து கொண்டிருந்தார், ( அக்கா தங்கச்சியே இவ்ளோ அழகா இருக்காங்களே, இவளுங்கள பெத்த அம்மாகாறி எப்படி இருப்பா, இவ்ளோ அழகா இருந்தா பிரச்சனை வரது சகஜம் தானே, இதுக்கு போய் இப்படி அழட்டிக்கிறா ) என்று மனதில் நினைக்க
சிறிது நேரம் கழித்து பியூன் வந்தான்
சார், அந்த பசங்க இன்னைக்கு காலேஜ் வரலியா சார்
ஓ சரி நீ போய் உன் மற்ற வேலைய பாரு
சரிங்க சார் என்று அவன் சென்றுவிட
பார்கவி, நீங்க உங்க சிஸ்டர்ர 3 நாள் விடுமுறை எடுத்துக்க சொல்லுங்க, நீங்க பார்க்க தைரியமான பெண்ணா தெரியுரிங்க, அவங்க கொஞ்சம் பயந்த சுபாவம் போல, அவங்க மனசு கொஞ்சம் அமைதி அடையட்டும், அதுக்குள்ள இந்த விஷயத்துக்கு நடவடிக்கை எடுத்து உங்களுக்கு முடிவ சொல்ற
சரிங்க சார் அப்போ நான் வர
வீட்ல ரெண்டு பெண் பிள்ளைங்க இருந்தா, மூத்தவ தைரியமாவும், இளையவ கொஞ்சம் பயந்த சுபாவமா இருப்பிங்க போல, என் வீட்ல அப்படி தான்
சார் எங்க வீட்ல எங்களோட சேர்த்து 4 பொம்பள பிள்ளைங்க, நான் மூத்தவ கிடையாது, நான் ரெண்டாவது பொண்ணு
( ஆ ஹா எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கே ) என்று மனதில் வழிந்தான்
நான் போயிட்டு வர சார் என்று அங்கிருந்து கிளம்பினாள்
கல்லூரி முதல்வர் அறையில் இருந்து வெளியே வந்தவள், அவள் அம்மாவிடம் போனில் விஷயத்தை தெரிவித்து விட்டு, அங்கிருந்து நேராக அவள் அலுவகத்திற்கு சென்றாள்
அவள் வந்தவுடன் அதர்வா அவளை அழைத்தான்
ஏன் லேட்
தங்கச்சி காலேஜ்ல ஒரு பிரச்சனை
யாரு கிட்ட பேசணும் சொல்லு
அதெல்லாம் நான் சமாளிச்சிட்ட, பொறுக்கி பசங்க தொல்ல பண்ணிருக்காங் அது தான் பிரச்சனை
உன்னையும் நிறைய பேர் தொல்ல பண்ணிருப்பாங்களே
உன் அளவுக்கு இல்ல
ஹா ஹா என்று இருவரும் சிரித்தனர்