25-12-2024, 04:28 AM
வாசகர்களுக்கு என் வணக்கங்கள்.
ஏற்கெனவே அறிவித்தபடி 01.01.2025 புது வருடம் பிறக்கும் நாளன்று கதையின் முதல் பதிவு இருக்கும் என்பதை உறுதி செய்கிறேன்.
சரி, அதான் ஏற்கெனவே சொல்லிட்டியே, எப்படியும் அது வரைக்கும் கதையை சொல்லப் போறதில்லை. ஏற்கெனவே ஏகப்பட்ட பில்டப் பதிவு போட்டாச்சு. இப்ப எதுக்கு இந்த பதிவு. திரும்பவும் பில்டப்பான்னு கேட்கிற வாசகர்களுக்கு...
பில்டப் மாதிரியும் எடுத்துக்கலாம். சில விசயங்களை முன்னாடியே வாசகர்களிடம் பகிர்ந்துக்க நினைக்கிறதாவும் எடுத்துக்கலாம். கொஞ்சம் பொறுமையா படிங்க ப்ளீஸ். இந்த பதிவு கதை ஆரம்பிச்சு பயணிக்கும் போது உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.
இந்த கதைக்கு இவ்ளோ பில்டப் திரும்ப திரும்ப குடுக்க முக்கியமான காரணம், இந்த திரியில் முதல் பதிவை போடும் போது என்னிடம் தயாராக இருந்த கதை இருந்த அளவை விட இப்போது பெரிய கதையாக உருவெடுத்திருப்பது தான்.
மிக சாதாரணமாக எழுத ஆரம்பித்த இந்த கதையை எனக்கு நானே ரசித்து இப்போது ஒரு நல்ல படைப்பாக உருவாக்கி விட்டேன் என்று நம்பிக்கையாக இருக்கிறேன்.
வழக்கமான காம கதைகளில் வருவது போல இல்லாமல் நிறைய விசயங்களை சேர்த்திருக்கிறேன். அதற்காக நிறைய யோசித்திருக்கிறேன். நிறைய உழைத்திருக்கிறேன்.
ஏற்கெனவே சொன்ன மாதிரி கதை Non Linear முறையில் செல்லும்.
அதாவது சம்பவங்கள் நடைபெறும் காலங்கள் 1,2,3,4,5... என்று வரிசையாக இருக்காது. 88, 3, 19, 1, 75, 114, 7 என்று முன்னுக்கு பின் வரிசை மாற்றி இடம் பெறும். ஆனால் கதை தொடர்ச்சியாக புரிந்துக் கொள்வது மாதிரி அமைக்கப்பட்டிருக்கும். குழப்பமில்லாமல் இருக்க என்னால் முடிந்த அளவு சம்பவங்களை இணைத்திருக்கிறேன். இருந்தாலும் கதையின் பதிவுகளை படிக்கும் போது அந்த பதிவு எந்த கால கட்டத்தில் நடைபெறுகிறது என்பதை வாசகர்கள் கவனத்தில் வைத்துக் கொண்டால் கதை இன்னும் ருசிக்கும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் ஒரு சம்பவம் நடந்துக் கொண்டிருக்கும் போதே, அந்த சம்பவத்துடன் தொடர்புடைய கதாபாத்திரம் தன்னுடைய பழைய நினைவுகளுக்குள் செல்வது போலவோ, அல்லது கதையாசிரியர் அந்த கேரக்டரின் பழைய அனுபவங்களை சொல்வது போலவோ கதை அமைந்திருக்கும். சில சம்பவங்கள் ப்ளாஷ்பேக்குக்குள் ப்ளாஷ் பேக் என்று எங்கெங்கோ சென்று சுற்றி விட்டு மீண்டும் துவங்கிய இடத்திற்கு வரும். பெரும்பாலும் குழப்பமாக இருக்காது. இருந்தாலும் முன்னாடியே சொல்லி விடுவது உதவியாக இருக்கும் என்பதால் இந்த பதிவு.
கதையில் நிறைய லீட் கொடுத்திருக்கிறேன். கதையின் வர்ணனைகளில் சாதாரணமாக குறிப்பிடப்பட்டு கடந்து செல்லும் சில சம்பவங்கள், அல்லது நபர்கள் பிற்பகுதியில் முக்கியத்துவம் பெறலாம்.
சில ரீகேப் சீன்கள் இருக்கும். அதாவது ஒரு சம்பவம் நடந்த முறை முதலில் ஒரு கோணத்திலும் பின் வேறொரு கோணத்திலும் விவரிக்கப்படும். இரண்டாவதாக ரீகேப்பில் வரும் போது முதலில் சொல்லப்பட்ட பகுதியில் விடுபட்டு போன, அல்லது சம்பந்தப்பட்டவர்களால் மறைக்கப்பட்ட ரகசியமான உண்மைகள் வெளிவரும்.
இத்தனை பில்டப் குடுத்துட்டு ஒரு மொக்கை கதையை குடுக்கப் போறான் பாரேன் என்று யாராவது நினைத்தால் என்னுடைய பதில்...
கதை கண்டிப்பாக ஒரு அறுசுவை விருந்தாக இருக்கும் வாசக பெருமக்களே...
கண்டிப்பாக உங்களுக்கு ஏமாற்றத்தை தர மாட்டேன்.
ஆனால் கதை என்னுடைய பாணியில் ஸ்லோவாக நகர்ந்து செல்லும். சுவை குறையாமல் இருக்க, அங்கங்கே சில உபகதைகள் சூடேற்றும் விதமாக இடம் பெறும்.
எல்லா கதைகளும் சம்பவங்களும் கடைசியில் ஒரு இடத்தில் வந்து சேரும்.
கதையை மூன்று பாகங்களாக எழுத நினைத்திருக்கிறேன். முதல் பாகம் முழுவதும் ஒரே ஒரு நிகழ்ச்சியையும் அதனை சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள், முன் அனுபவங்கள் இவைகளை மட்டுமே சொல்லும். முதல் பாகம் எந்த இடத்தில் ஆரம்பிக்கிறதோ அதே இடத்தில் வந்து முடிவு பெறும். ஆனால் அதுவே அறுபதுக்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டிருக்கும்.
கதைகளில் இடம் பெறும் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்று நான் கற்பனை செய்து வைத்திருக்கிறேனோ, அதற்கு பொருத்தமான நடிகைகளின் போட்டோக்களை பயன்படுத்த நினைத்திருக்கிறேன். மற்றபடி அந்த நடிகைகளுக்கும் இந்த கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அவ்வளவு தான் நண்பர்களே. இந்த பதிவை முழுதாக வாசித்த அனைவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.