19-12-2024, 03:12 PM
(This post was last modified: 19-12-2024, 03:23 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
dubukh Wrote:அதை விடுத்து கோபம் கொள்வதால், சிறிதாக ஆனால் சிறப்பாக 2 வரி கமெண்ட் போடுபவர்களுக்கும் தயக்கம் வரலாமே நண்பா? அது நல்ல நல்ல கதைகளை கொடுக்கும் உங்களுக்கு வேண்டாமே நண்பா
பலமணி நேரம் எழுதும் கதைக்கு வரும் முதல் கமெண்ட் 'நெக்ஸ்ட் அப்டேட் வெயிட்டிங்' என பார்க்கும் போது கோபத்தை கட்டுப் படுத்த முடியவில்லை.
ஒரு லைன் ரெண்டு லைன் கமெண்ட்ஸ் போடுபர்கள் மீது எனக்கு ஒருநாளும் கோபம் இல்லை. தவறுகளை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும் என்ற எண்ணம் உண்டு.
ஆனால் ஒரே மாதிரி, ஒரே நேரத்தில், பல கதைகளுக்கு ஒரே கமெண்ட்டை காப்பி பேஸ்ட் செய்பவர்கள் மீதும் எரிச்சல் வருவது உண்டு. பெயரளவுக்கு encourage செய்வது என முடிவு செய்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
சின்ன கமெண்ட்டாக இருந்தாலும், அதில் கதையைப் பற்றி ஏதேனும் வரிகளை quote செய்தால் அதற்கு பதில் சொல்வது அவசியம்.நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.
வெகு சிலர் மட்டுமே பெரும்பாலான பதிவுகளுக்கு கமெண்ட் செய்கிறார்கள். அவர்களுக்கு நன்றியை தவிர எதுவும் சொல்ல முடியாத நிலை. 5+ பேருக்கு தனிதனியாக நன்றி சொல்வது கதையை முன்பகுதியில் கொண்டு வர உதவும். ஆனால் நிறைய பேருக்கு அது வெறுப்பை ஏற்படுத்தும்.
வெறுமனே நன்றி சொல்வதை விட interact பண்ணவே விரும்புகிறேன். அது நெகட்டிவ் ஆர் பாசிட்டிவ் கமெண்ட்டாக இருந்தாலும் சரி.