17-12-2024, 06:50 PM
மன்னிக்கவும் நண்பர்களே..பத்து வருடத்துக்கு முன்பு நான் செய்த முட்டாள்தனமான தவறு என் வாழ்க்கையையே கொஞ்சம் கேள்விக்குறி ஆக்கி விட்டது.பத்து வருடம் முன்பு நான் standard chartered credit card ஒன்று உபயோகித்து கொண்டு இருந்தேன்.ஆனால் அப்போ எனக்கு அது தேவையில்லை என்பதால் close பண்ணலாம் என்று இருந்தேன்.அப்போ என் நெருங்கிய நண்பன் நான் உபயோகித்து கொள்கிறேன்,எல்லா payment சரியா நான் கட்டி விடுகிறேன் என்று சொன்னான்.நானும் நம்பி கொடுத்தேன்.20,000 ரூபா தான் limit என்ற தைரியத்தில் நான் இருந்தேன்.ஆனா கொஞ்ச கொஞ்சமா அவன் எப்படியோ customer care கிட்ட பேசி கிரெடிட் லிமிட் 60,000 வரை உயர்த்தி,அப்புறம் ஒரு கட்டத்தில் செலுத்தாமலேயே விட்டு விட்டான்.இப்போ நான் லோன் apply பண்ணி இருந்த பொழுது தான் நான் ஒரு defaulter என்று பதிவாகி cibil scr கடுமையா அடிவாங்கி லோன் reject ஆகி இருக்கு.விசாரித்து பார்க்கும் பொழுது தான் உண்மை தெரிய வந்தது.ஒரு லட்ச ரூபாய் மேல கட்ட சொல்லி வந்து இருக்கு.என்ன பிரச்சினை என்றால் alert எல்லாம் அவன் நம்பருக்கு மாற்றி விட்டதாக வந்த பிரச்சினை .mobile service centre புது இடத்தில் தொடங்க ஆசையாய் இருந்த நான் இப்போ வேறு வழியின்றி மீண்டும் வேலைக்கு செய்ய வேண்டிய நிலை.மனசு நொந்து போய்ட்டேன்.அவனிடம் கேட்டாலும் சரியா பதில் இல்லை.ஃபோன் வேறு avoid செய்கிறான்.எப்போ update போட முடியும் என்று தெரியல.