15-12-2024, 05:59 AM
(This post was last modified: 22-05-2025, 10:36 AM by Kavinrajan. Edited 3 times in total. Edited 3 times in total.)
அத்தியாயம் #12
அதிகாலை 6.30 மணிக்கு கண்விழித்தவுடன் தவறு தவறு உயிர்தெழுந்தவுடன்... வேதாளத்தை தன் முதுகில் சுமந்து செல்லும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்த மன்னனின் மனநிலையை ஒத்திருந்தார் ஆதி என்கிற ஆதிராஜ்.
என்ன வேதாளத்திற்கு பதிலாக இங்கு அவரது உயிர்.
ஒவ்வொரு முறையும் தன் உயிரை சுமந்து கொண்டு பெரும் உயிர்ப்போராட்டத்தை அவர் சந்திக்க நேருகிறது. இறுதியில் அவர் கொலை செய்யப்பட்டு அவரது உயிர் அவரை விட்டு விலகுகிறது. கால வளையம் அவருக்கு மீண்டும் உயிர்பிச்சை அளித்து அடுத்த உயிர்ப்போராட்டத்தை அதிகாலை முதலே துவக்கி விடுகிறது.
விக்கிரமாதித்தனை போல ஒவ்வொரு முறையும் புதுப்புது கதைகளை கேட்டு புதுப்புது கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டியதில்லை.
இது அவரது சொந்த கதை, அதில் ஒரே வகையான கேள்விகள் மட்டுமே அவர் முன்வைக்கப்படுகிறது.
ஏன் என்னை கொலை செய்கிறார்கள்? அதன் பின்புலத்தில் இருப்பது யார்?
அவர் கொலை செய்யப்படும் மர்ம மூடிச்சினை அவிழ்த்து உயிர் தப்பினாலே போதும். கால வளையத்திலிருந்தும் தப்பிக்கலாம் என்பது அவரது திடமான நம்பிக்கை.
கடந்தமுறை போலில்லாது பயமோ பதட்டமோ இல்லாமல் இயல்பாக இருந்தார் ஆதி.
இம்முறையும் அவர் கொலைகாரனிடம் ஏமாற்றப்பட்டு மூன்றாவது முறையாக தன் உயிரை இழந்திருந்தாலும் மனவுறுதி மனப்பக்குவம் என நிறைய விஷயங்களை புதிதாக கற்றிருந்தார்.
படுக்கையிலிருந்து எழுந்து தரையில் நின்ற போது, மண்டைக்குள் ஏதோ பட்டாம்பூச்சிகள் பறப்பது போல இருந்தது ஆதிக்கு.
நெற்றியில் பொட்டு வைத்தது போல துப்பாக்கியால் சுட்டு கபாலம் சிதற என்னை கொன்றதினால் இது உண்டானதா? இன்னும் அந்த அதிர்வுகள் உணர்வுகளாக முளைக்குள் எங்கோ ஒரிடத்தில் திசுக்களை தீண்டி கொண்டிருக்கின்றன.
சமநிலைக்கு வந்ததும், ஒரு விஷயம் அவரை மிகவும் யோசிக்க வைத்தது. என்னை பற்றிய பல அந்தரங்க விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறான் அந்த கொலைகாரன்.
அழகு பெண்களை புணருவதற்காக நான் துரையை தொடர்பு கொள்வது. அவன் ஏற்பாடு செய்து கொடுப்பது. இரவு நேரம் அவுட் ஹவுஸில் வேசிகளோடு படுக்கையை பகிர்வது. இப்படி என்னை பற்றிய பல அந்தரங்க விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம்.
என்னை பற்றிய இத்தனை விஷயங்களை அவனே ஆராய்ந்து தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. என் நெருக்கத்தில் உள்ள யாரோ தான் அவனுக்கு தெரிய வைத்து உதவி செய்கிறார்கள்.
கொலைகாரனுக்கு உதவி செய்து என்னை முதுகில் குத்தும் அந்த துரோகி யாராக இருக்கும்?
முகந்தெரியாத கொலைகாரன் வெறும் அம்பு தான். அவனை எய்த்தவன் யார்?
செக்யூரிட்டிகள் - நட்ராஜ், ராம்தேவ்
செக்கரட்டரி பூஜா
கார் ட்ரைவர்
தோட்டக்காரன் செல்வம்
ஆபிஸில் உடன் பணிபுரிவோர்
என் தொழில் போட்டியாளர்கள்
என்னால் பாதிக்கப்பட்டவர்கள்
என் மனைவி சுமித்ரா
துரை என்கிற துரைச்சாமி
இவர்கள் அனைவரும் என் சந்தேக ரேடாரில் இருந்தாலும்... இவர் தான் என யாரையுமே உறுதியாக சுட்டி காட்ட முடியாது.
முக்கியமாக அவர் மனைவி சுமித்ரா மற்றும் துரை கொலைகாரனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் அவர் சந்தேகப் பார்வையில் கடைசி இடத்தில் வைத்து விட்டார்.
அடுத்தது, இன்றிரவு நான் வீட்டிற்கு எக்காரணம் கொண்டும் திரும்ப வர கூடாது. கடந்த மூன்று முறையும் அவுட் ஹவுஸில் வைத்து தான் நான் கொலை செய்யப்பட்டுள்ளேன்.
என் மனைவியை பயமுறுத்தி என்னை திரும்பவும் பங்களாவுக்கு வரவழைத்துள்ளார்கள். இம்முறை அவளை பிணைக்கைதியாக வைத்து என்னை கட்டுப்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
பங்களாவை விட்டு வெளியே போய் திரும்பி வராமல் இருப்பதற்கான முன்னெற்பாடுகளை உடனே செய்ய வேண்டும் என உறுதி எடுத்து கொண்டார் ஆதி.
பீல்டர் காபியின் சுவையை பருகி கொண்டே அவர் மனைவி சுமித்ராவின் முகபாவனைகளை உற்று நோக்கினார்.
நேற்று நடந்த சம்பவங்கள் எதுவுமே அவளுக்கு தெரியாதது போன்று முகத்தை வைத்திருந்தாள். முக்கியமாக நெடுநாள் கழித்து அவளை படுக்கையில் போட்டு புரட்டி புணர்ந்தது கூட தெரியாதது ஆச்சர்யம் தான். ஆனால் அது உண்மை தானே. எல்லாம் கால வளையத்தின் உபயம்.
"என்ன தீவிரமா யோசிட்டிருக்கீங்க...?"
"இல்ல.. ஒரு வாரம் என்ன விட்டு தனியா பிரிஞ்சி இந்த பங்களாவில எப்படி இருக்க போறியோனு யோசிட்டிருக்கேன்..."
"என்னங்க... என்ன திடீர்னு இப்படி சொல்றிங்க... அப்ப வெளியூர் எங்கனா கிளம்ப போறிங்களா... நேத்து நைட்டு கூட இத பத்தி எதுவுமே சொல்லலையே?" அவள் கண்களில் தவிப்பு தெரிந்தது.
"இப்ப தான் அவசரமா தகவல் வந்தது. ஒரு வாரம் கான்பரன்ஸ் மீட்டிங் இருக்குது. கண்டிப்பா போயாகனும். வேற வழியில்ல..." புளுகு முட்டையை அவிழ்த்து விட்டார்.
"எந்த ஊருக்கு போகனும்...? நானும் கூட வரட்டுங்களா...?"
அவருக்கு சுமித்ரா சொன்னது சரியென பட்டாலும், மனதுக்குள் வேறு புதிய திட்டம் வைத்திருந்தார். அதனால் அவளை தவிர்க்க நினைத்தார்.
"அத இனிமே தான் முடிவு பண்ணணும் சுமி... சாரி, முடிவு செய்வாங்க... அனேகமா மும்பை, டெல்லி மாதிரி ஏதாச்சும் ஒரு சிட்டில இருக்கும்... இல்லனா இரண்டு மூணு சிட்டிக்கு ட்ராவல் பண்ற மாதிரியும் இருக்கும்... நீ கூட வந்தா உனக்கு தான் சிரமம்.."
"நீங்க சொன்னா சரிங்க.."
என்ன சொன்னாலும் நம்பி விடுகிறாளே... அந்த விஷயத்தில் நான் பாக்கியசாலி கணவன் தான்.
"..ஆனா பங்களாவுல தனியா எப்படிங்க இருக்குறது... நீங்க வர்ற வரைக்கும் சொந்தக்காரங்க யாரையாவது கூட துணைக்கு வச்சிக்கவா...?"
ஆதி என்ன பதில் சொல்வாரோ என இழுத்தாள் சுமித்ரா.
இவளே இங்கு இருக்க கூடாது என நாம் திட்டம் போட்டால், கூட யாரையாவது சேர்த்து கொண்டு பிரச்சனைகளை ஊதி பெரியதாக்கி விடுகிறாளே.
"அதேல்லாம் வேணாம்டி. உன் சொந்த கிராமத்துக்கு போயிடேன். உனக்கு அது ஒரு நல்ல மாறுதலா இருக்கும்..."
"சொந்த ஊருக்கு போகணுமா... பழைய ஞாபகம் வர கூடாதுனு தான் நா இந்த பங்களாவிலயே அடைஞ்சி கிடைக்குறேன். இப்ப எப்படிங்க அங்க போறது.? வேண்டாங்க நா இங்கயே இருந்துடறேன்.. "
"தனியா இங்க இருக்க வேணானு சொன்னா கேக்க மாடேன்றியே... உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.. சொந்த ஊருல போய் இரு... ஒரே ஒரு வாரம் தானே... நானும் சீக்கிரமா வரப் பாக்குறேன்.."
"சரிங்க..."
இறுதியாக சுமித்ராவை ஒத்துக்கொள்ள வைத்தார்.
"நீ ஒரு வாரத்துக்கு தேவையான துணிமணிகள ரெடி பண்ணி வைச்சிக்கோ... நம்ம ட்ரைவர வரச் சொல்றேன். பார்சூனர் கார்லயே ஊருக்கு போயிடு..."
இம்முறை பி.எம்.டபிள்யூ காரை உபயோகப்படுத்த நினைத்தார். ஒரு மாறுதலுக்காக...
ஒரு மணி நேரம் கழித்து, பார்சூனர் காரில் சுமித்ரா புறப்படத் தயாரானாள்.
கண் கலங்கியடி செல்லும் மனைவியை, கண் கலங்காமல் வழியனுப்பி வைத்தவர் தன் அடுத்த கட்ட திட்டங்களை பற்றி யோசித்தார் ஆதி.
மணி பத்தாகிறது. எங்கே போகலாம்? என்ன செய்யலாம்? ஆனால் இந்த பங்களாவில் மட்டும் இன்றிரவு கழிக்க கூடாது.
அதற்கு முன் தன் பழைய நண்பன் கிருஷ்ண பிரசாத்துக்கு ஒரு போன் கால் போட்டால் என்ன?
சென்னை ஐ.ஐ.டியில் பௌதிகத் துறையில் பேராசிரியராக இருக்கிறார். சந்தித்து குறைந்தது ஒரு வருடமாகி இருக்கும். வேறென்ன கால வளையத்தை பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைக்குமா அவை நமக்கு தேறுமா எனப் பார்க்கலாம்.
பரஸ்பர நல விசாரிப்புகளிடையே அந்த முக்கியமான கேள்வியை அவரிடம் கேட்டு விட்டார்.
"என்னடா டைம் லூப்புன்னா சொன்ன... காலங்கார்த்தால கேக்குறதுக்கு வேற கேள்வியே உனக்கு கிடைக்கலையா...?"
"டென்ஷன் ஆகாம நா சொல்லுறத கேளுடா... இன்னிக்கு இந்த நாள்ல நடக்குற சம்பவங்க, திரும்பத் திரும்ப எனக்கு நடக்குது. இன்னிக்கு நைட் முடிஞ்ச பின்ன, திரும்பவும் இதே நாள் எனக்கு தொடங்குது. இது வரைக்கும் எனக்கு இரண்டு மூணு தடவ இப்படி நடந்திருக்கு... அதனால நா டைம் லூப் மாட்டியிருக்கேனு சத்தியமா தோணுது. இதுலயிருந்து வெளிய வர நா என்ன செய்யனும்."
தான் ஒரு முகந் தெரியாத கொலைகாரனிடம் ஒவ்வொரு இரவும் துப்பாக்கியால் சுடப்பட்டு செத்து போகும் விஷயத்தை மட்டும் உரையாடும் போது கவனமாக தவிர்த்தார் ஆதி.
"எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல... அதுக்கு முன்னாடி டைம் லூப் பத்தி எனக்கு தெரிஞ்சத கொஞ்சம் சொல்லிடுறேனே... டைம் லூப் என்றது ஒரு வகையான ஃபேன்டஸிதானே தவிர அதற்கு எந்த அறிவியல்பூர்வமான ஆதாரமும், காரணமும் இல்லை... அத நீ முதல்ல புரிஞ்சிக்கனும்... நீ சொல்லுறது உண்மையா இருக்கலாம். இல்ல பொய்யா கூட இருக்கலாம்.. "
"டேய், நா சொல்லுறது நூத்துக்கு நூறு உண்மை கிருஷ்ணா.."
"சரி, நீ சொல்றதயெல்லாம் உண்மைனே வைச்சிகிட்டாலும், சயின்ஸ பொறுத்து வரையில எல்லா விஷயங்களுக்கும் ஃபுருப் வேணும்டா ஆதி.. இல்லனா எல்லாத்தையும் கட்டுக்கதனு தான் எடுத்துப்பாங்க.. இப்ப உதாரணத்துக்கு மகாபாரத்து இறுதி யுத்த களத்துல.. சக்கரவியூகத்துக்குள்ள போற அபிமன்யு திரும்ப வர்ர வழி தெரியாம உள்ளேயே மாட்டிக்குற கதை மாதிரி தான் நீ என்கிட்ட சொல்ற கதையும் இருக்குது.."
"அப்ப நா சொல்றது பூராவும் கட்டுகதனு சொல்லுறியா..?"
"நா அப்படி சொல்லல ஆதி... யூ நீட் சம் கவுன்ஸலீங். நீ உடனே நல்ல சைக்காரிஸ்ட்ட போய் பாக்குறது நல்லதுனு சொல்லுறேன். தேவையில்லாம எல்லாத்தையும் மனசுல போட்டு குழப்பி.."
"தாங்க்ஸ் ஃபார் யூ அட்வைஸ் கிருஷ்ணா..." எரிச்சலில் அழைப்பை உடனே துண்டித்தார் ஆதி.
இவனிடம் போய் அட்வைஸ் கேட்டேன் பாரு... என்ன சொல்ல வேண்டும்... டைம் லூப் பற்றி இவர்கள் அறிவுப்பூர்வமாக அறிவியல் மீட்டிங்கில் ஏடுகளில் பேசுவார்களாம் எழுதுவார்களாம்... ஆனால் நேரில் சந்தேகம் கேட்டால் ஏதோ நாம் சொந்தமாக கட்டுகதை விடுகிறோம் என நம்மை துரத்தி விடுவார்களாம்... இவனுடன் பேசியது டோட்டல் டைம் வேஸ்ட்.
சரி, இவனை விட்டுத் தள்ளு... அடுத்ததாக எங்கே செல்லலாம்? அதை பற்றி யோசிப்போம். இன்றிரவு பொழுதை நல்லபடியா கடக்கனுமே.
மும்பை, டெல்லி, கொல்கட்டா, ஹைதராபாத், பெங்களூர்... பெங்களூர் தான் சரி.. ஐந்து மணி நேரத்தில் காரிலே போய்விடலாம்.
தேவையானவற்றை எடுத்து கொண்டு காரை கிளப்பி கொண்டு போகும் போது.. அவரின் வழக்கமான சபல புத்தி குறுக்கே வந்து அவரை தடுமாற வைத்தது.
தனியாகத்தான் பெங்களூர் போக வேண்டுமா...? அழகான பெண் துணை யாரையாவது உடன் அழைத்து சென்றால் என்ன...?
மினி ஸ்கர்ட் பூஜாவா..
காமக்கன்னி நித்யாவா..
சொக்க வைக்கும் அனுஷ்காவா..
ம்ம்.. பூஜாவும் நித்யாவும் படுக்கையில் நன்றாக ஒத்துழைத்தாலும்.. அவர்களுக்கு ஒருவிதத்தில் சராசரியான உடல்வாகு தானே.. என்ன இருந்தாலும் அனுஷ்காவின் திகட்டாத கட்டழகு மாதிரி வருமா.. அவள் தான் சரி.. அனுஷ்கா பெயரை டிக்கடித்து விட்டார்.
அவ்வாறு அவர் யோசித்தது கூட தவறில்லை. ஆனால் அனுஷ்காவை பற்றி ஏற்கனவே தெரிந்த பின்னரும், மீண்டும் அவளை தன்னுடன் வருமாறு அழைக்கலாம் என்ற முடிவை எடுத்தது அவரின் விபரீதமான முடிவு.
ஆபத்துடன் மீண்டும் விளையாட முடிவு செய்து விட்டார் ஆதி.