Romance கோடீஸ்வரி
#39
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

 நான் டாக்குமெண்ட் எல்லாமே ரெடி செய்து.. கோயம்புத்தூர் கிளம்பி சென்றேன்.. பாதுகாவலரோடு, நேராக நான் சிறுவயதிலிருந்தே வளர்ந்த ஆசிரமத்திற்குள் கார்களைக் கொண்டே உள்ளே நுழைந்தேன்.. எல்லோரும் யாரு யாரு என  அதிசயமாக பார்த்தனர்.. காரில் இருந்து கீழே இறங்கி ஆசிரமத்திற்கு உள்ளே சென்றேன்... அங்கு உள்ள இன்சார்ஜ் இடம்.. நான் கொண்டு வந்த டாக்குமெண்ட் எல்லாமே கொடுத்தேன்... கவிதாவுக்கு என்னையே அடையாளம் தெரியவில்லை... நான் வேண்டுமென்றே கூலிங் கிளாஸ் போட்டு ஸ்டைலாக நின்றிருந்தேன்.. நான் இந்த மாதிரி இங்கு இருந்ததே கிடையாது... அவளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இந்த உடையில் வந்து இருந்தேன்... இன்சார்ஜ் அதை வாங்கி பார்த்து விட்டு.. ரொம்ப நன்றி மேடம் இந்த ஆசிரமம்... பல போராட்டத்துக்கு அப்புறம் உங்க கைக்கு வருது.. இந்த ஆசிரமத்தையும் இங்க உள்ளவங்களையும் நல்லபடியா பார்த்துக்கோங்க மேடம்..
கவிதா : அண்ணே என்னன்னு சொல்றீங்க இந்த ஆசிரம இவங்க வாங்கிட்டாங்களா.. அது எப்படி நான் முடியும் அப்ப நம்ம எல்லாருமே என்ன செய்ய 
நந்தினி : எல்லாருமே இங்கேயே இருங்க சொல்லிட்டு கண்ணாடியை கழட்டினேன். மாசாக கவிதாவை பார்த்தேன்..
கவிதா : ஏய் நந்தினி நீயாடி.. என்று கட்டிப்பிடிக்க வந்தாள்.. என்னுடைய பாதுகாவலர் அவளை தடுத்தனர்,
நான் : இங்க பாருங்க அவ்வளவுதான் எடுக்காதீங்க.. அவ என்னுடைய உயிர்த்தோழி... இந்த சொத்து இந்த பதவி எல்லாமே... இப்ப வந்தது ஆனால் நான் பிறந்ததிலிருந்து இப்ப வரைக்கும்.. கூட இருந்தவ இவள் மட்டும் தான்.. இவன தடுப்பதற்கு உண்டான.. தகுதி உங்களுக்கு கிடையாது தள்ளி நில்லுங்க.. கோபப்பட்டு பேசினேன் 
பாதுகாவலர் : சாரி மேடம் தெரியாம செஞ்சிட்டேன்..
நான் : அந்தப் பொண்ணு என்னைய கட்டி.பிடிக்க வாரால் என்றால்.. அந்தப் பொண்ணுக்கு நான் எவ்வளவு பெரிய க்ளோஸ் பிரண்டுன்னு தெரிஞ்சிருக்கணும்... சரி இதான் லாஸ்ட்.. என் பிரண்டா நீங்க தடுத்தீங்க அதனால கோபப்பட்டேன் அதுக்கு சாரி. இனி அப்படி நடக்காதீங்க 
 பாதுகாவலர் : மேடம் என்ன மேடம் நீங்க பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க.. நாங்க உங்க கிட்ட வேலை பார்க்கிறவங்க அவ்வளவுதான்.. நீங்க சொல்றத நாங்க செய்யணும்.. சாரி எல்லாம் சொல்ல வேண்டாமா.. உங்க குடும்பத்தால தான் எங்க குடும்பம் நல்லா இருக்கு..
நான் : சரி விடுங்க.. கவிதா இப்பவாது என்னைய பத்தி நல்லா புரிஞ்சுக்கோ.. நான் எது செஞ்சாலும் ஒரு காரணம் இருக்கும்... என்னையவே நீ நம்பாமல் இருந்துட்டு இல்ல.. சொத்து எல்லாம் வந்த உடனே நான் மாறிட்டேன்னு நீ நினைச்சுட்டேன் அப்படித்தானே.. நான் என்னைக்குமே உன்னுடைய நந்தினி தான்...
கவிதா : ஏய் சாரிடி.. இருவரும் கட்டிப் பிடித்து பாசமலையை பொழிந்தனர்..
நான் : சரி இன்னிலிருந்து இந்த ஆசிரமம் மட்டும் இல்ல.. தமிழ்நாட்டுல உள்ள எல்லா ஆசிரமத்தையும் நாங்களே வாங்கிட்டோம்.. எல்லாத்தையுமே நாங்க தான் நடத்த போறோம்... அரசாங்க கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டோம்.. சோ இனி கவலைப்படாமல் இந்த ஆசிரமத்துla சந்தோசமா எல்லாருமே இருங்க.. உங்களுடைய சந்தோசத்துக்கு நான் பொறுப்பு... என்னைக்குமே இந்த நந்தினியை மட்டும் குறைச்சி மதிப்பிடாத.. என்னைக்குமே நான் உங்களில் நான்..
கவிதா : சரிடி அந்த வேலாயுதம்...
நான் : யாரு வேலாயுதமா இப்ப பாரு... பாதுகாவலரை கூப்பிட்டு.. வேலாயுத நம்பருக்கு போன் போட்டு தாங்க.. அவரும் போன் போட்டு தந்தார்... லவ்ட் ஸ்பீக்கரில் வைத்தேன்.. ஹலோ வேலாயுதம்.. பி எஸ் எஸ் குரூப் ஆப் கம்பெனி ஓட எம்டி நந்தினி பேசுறேன் 
 வேலாயுதம் : மேடம் சொல்லுங்க மேடம் நான் உங்க விஷயத்துல  தலையிடல மேடம்.. அப்புறம் எதுக்கு போன்...
 நான் : சும்மாதான் நான் இப்ப கோயம்புத்தூர்ல தான் இருக்கேன்.. அப்புறம் உனக்கு ஒரு பேட் நியூஸ்.. நீ ரொம்ப காலமா ஆசைப்பட்டாயே இந்த ஆசிரமம் இப்ப அது என் பெயரில் மாத்திகிட்டேன்... இந்த ஆசிரமம் இனி எங்க கட்டுப்பாட்டுக்குள்ள.. நீ இந்த ஆசிரமத்தை வாங்கணும்னு முடிவு எடுத்த.. என்ன செய்வோம் என்று உனக்கே தெரியும் 
 வேலாயுதம்: அப்படி எதுவும் செஞ்சுறாதீங்க மேடம் அந்த ஆசிரம பக்கமே நான் வரமாட்டேன்.. என்னைக்குமே உங்க விஷயத்துல நான் தலையிடவே மாட்டேன்..
நான் : குட் இப்படியே இருந்தா உனக்கு நல்லது எல்லாருக்கும் நல்லது.. சரி வைக்கிறேன்.. போனை கட் செய்து வைத்தேன்... கவிதா கண்களை பெரிதாக்கி வாயை திறந்து கொண்டு.. அதிசயத்தில் நின்றால் 
நான் : என்னடி ஆச்சு ஏன் இப்படி சிலையாயிட்ட...
கவிதா : நம்மள மிரட்டி அழ வச்சவன் இந்த அளவுக்கு பம்மி கிட்டு பேசுறான்.. என்னால எதுவுமே நம்ப முடியல டி.. உண்மையில நீ கிரேட்.. கடவுள் இருக்காருடி 
நான் : நாளைக்கு இங்க உள்ள எங்க கம்பெனி பிரான்சுக்கு.. வேலைக்கு போ... போய் ஜாயின் பண்ணு.. சரியா.. சரிடி நான் ஆபீசுக்கு போறேன் அப்புறமா கால் பண்றேன்.. சொல்லி கோயம்புத்தூர் பிரான்ச் கே சென்றேன்.. அங்கு உள்ள வாட்ச்மேன் முதலில் நான் வரும்போது.. என்னை ஏளனமாக பார்த்தான்.. கேவலமாக பேசினான்... காரை விட்டு இறங்கி கம்பீரமாக அவன் முன்னால் நின்றேன்..
 வாட்ச்மேன்  : என்னை பார்த்து ஆடித்தான் போனான்.. மேடம் குட் மார்னிங் மேடம்...
நான் : பணம் பணம் இருந்தா தான் இங்க எல்லாமே மதிப்பு அப்படித்தானே... இதே பொண்ணு நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்தேன்.. என்னைய எப்படி கேவலப்படுத்துனீங்க... பணத்தை உடைகளை பார்த்து என்னைக்குமே எடை போடாதீங்க.. திறமையை பார்த்து எடை போடுங்க. இன்னொரு தடவை இந்த மாதிரி ஏதாவது நடந்தது... நீங்க வேலையில இருக்க மாட்டீங்க
 வாட்ச்மேன்  : சாரி மேடம் எதுவும் செஞ்சுறாதீங்க மேடம் தெரியாம பண்ணிட்டேன் இனி.. எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவேன்..
நான் : குட் அப்படி இருந்தா உங்களுக்கு நல்லது..  உள்ளே சென்றேன் கோயம்புத்தூர் சிஇஓ.. இந்த பிரான்ச்  மேனேஜர் என் முன்னால் கைகட்டி நின்று இருந்தனர்.. மேனேஜர்: குட் மார்னிங் மேடம்.. சி இ ஓ குட் மார்னிங் மேடம்.. நீங்க வர்றீங்கன்னு எனக்கு தகவலை தெரியாது மேடம்.. இல்லன்னா உங்கள பிக்கப் பண்ண வந்திருப்பேன்..
நான் : ஒன்னும் பிரச்சனை இல்ல ரெண்டு பேரும் கேபினுக்கு வாங்க.. நேரா கேபினுக்கு சென்றேன்.. பின்னாடியே மேனேஜரும் சிஇஓவும் வந்தனர்.. இங்க இன்டர்வியூ வரவங்களுக்கு டெபாசிட் கேப்பிங்களோ..
 மேனேஜர் : தப்புதான் மேடம் பெரிய எம்டி வந்து சத்தம் போட்டுட்டு போயிட்டாங்க.. இனி அந்த மாதிரி யார்கிட்டயும் டெபாசிட் வாங்க மாட்டோம் மேடம்..
நான் : என்ன சி இ ஒ சார்.. இந்த பிராஞ்சில இப்படி ஒரு தப்பு நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா.. நம்ம கம்பெனி பொருத்தவரை எல்லாருக்குமே.. திறமையான மட்டுமே இங்கு வேலை கிடைக்கும்.. அது உண்மை தானே.. அனுபவம் இல்ல அப்படின்னாலும் இங்கு வேலை கிடைக்கும்.. அவங்க ஈஸியா வேலையை கத்துக்கிடுவாங்க.. பட் இந்த டெபாசிட் வாங்குறது தப்பு.. அவங்களுக்கு பணம் தேவை இருக்கிறதுனால தான் இங்க வேலைக்கு வராங்க.. மாச மாசம் சம்பளம் வாங்குனா அந்த சம்பளத்தை வைத்து அவங்க வீட்டை காப்பாற்றலாமே.. அப்படின்னு நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வராங்க கரெக்டா.. அப்படி கஷ்டப்பட்டவனிடம் டெபாசிட் வாங்கி நாம வேலை கொடுக்கணும்னா நீங்க ரெண்டு பேரும் எதுக்கு..
Ceo : சாரி மேடம் இதெல்லாம்  எனக்கு தெரியாது மேடம்..
நான் : இந்த மாவட்டத்துல மட்டும் 18 பிரான்ச் இருக்கு கரெக்டா.. 18 பிரான்ச்சுக்கும் ஹெட் ஆப் தி டிபார்ட்மெண்ட் சி இ ஓ நீங்க தான் கரெக்டா.. எல்லாத்தையும் இதுக்கு அப்புறம் செக் பண்ணி இருக்கணும்... இனி இதுக்கு அப்புறம் நம்ம ஆபீஸ்ல எந்த ஒரு தப்பும் நடக்கக்கூடாது.. தப்பு செஞ்ச இந்த மேனேஜர் இனி இந்த கம்பெனில இருக்கக் கூடாது... உடனடியா வேற வேலை விட்டு தூக்குங்க ஆர்டர் ரெடி பண்ணுங்க நான் சைன் போடுறேன்..
 மேனேஜர் : மேடம் தப்பு தான் மேடம் என மன்னிச்சிடுங்க மேடம் தெரியாம பண்ணிட்டேன் மேடம்.. இனி அந்த மாதிரி செய்யவே மாட்டேன் மேடம்..
நான் : நம்ம கம்பெனில கஷ்டப்பட்டவங்க வேலைக்கு தேடி வரவங்க கிட்ட... பத்தாயிரம் ரூபா தா அம்பதாயிரம் ரூபாய் தா லஞ்சம் கேட்டு.. அவங்களுக்கு வேலை கொடுத்திருக்கீங்க கிட்டத்தட்ட எத்தனையோ வருஷமா இது நடந்திருக்கு... அந்தப் பணத்தை எல்லாம் வச்சு நீங்க எங்கெல்லாம் வீடு வாங்கி இருக்கீங்க.. உங்க பேர்ல எத்தனை வீடு? உங்க மனைவி பேர்ல எத்தனை வீடு எல்லாம் டீடைலும் விசாரிச்சுட்டு தான் வந்து இருக்கேன்.. கம்பெனி பணம் கையாடல், அப்படின்னு போலீஸ்ட உங்க மேல ஒரு கம்ப்ளைன்ட் பைல் பண்ண போறேன்.. உங்களுடைய மொத்த சொத்து.. முடக்கப்படும்.. நவ் யூ கேன் கோ.. சி இ ஓ  பார்த்து நந்தினி.. லன்ச்சுக்கு மேல.. நம்ம ஸ்டாப் எல்லாத்துக்கும் மீட்டிங்.. ஓகே எல்லாரையும் கரெக்ட்டா மூணு மணிக்கு அசம்பல் ஆகி இருக்கணும்.... நிறைய ரூல்ஸ் மாத்தணும்... ஓகே டக்குனு ஏற்பாடு பண்ணுங்க..
 சிஇஓ கிளம்பி சென்றார்.. மேனேஜர் தலையை தொங்க போட்டு வெளியே சென்றார்..
 பாதுகாவலர் : மேடம் உங்களுக்கு நான் பாதுகாவலராக இருக்கிறது பெருமையா இருக்கு மேடம்.. நீங்க நல்லா இருப்பீங்க மேடம்... உங்களுடைய நல்ல குணத்துக்கு கடவுள் என்றைக்கும் உங்களுக்கு ஆசீர்வதிக்கனும்..
நான் : ஐயோ நான் எனக்கு எது சரின்னு படுதோ அதை செய்றேன் வேற ஒன்னும் இல்ல.. ஏன்னா நான் வளர்ந்தது அப்படி.... ஓகே அண்ணா லன்ச்சுக்கு டைம் ஆயிட்டு போய் சாப்பிட போங்க....
 பாதுகாவலர் : என்னையும் மகிழ்ச்சி அண்ணானு சொன்னீங்க பாருங்க.. உண்மையிலே நீங்க கிரேட் மேடம்.. நான் ஒரு வேலைக்காரன் அப்படின்னு பாக்காம ஒரு சகோதரனா நடத்துறீங்க.. உண்மையிலே எனக்கு பெருமையா இருக்கு மேடம்..
நான் : சரி அண்ணா சாப்பிட போங்க அப்புறம் ஒரு நிமிஷம்.. ஆசிரமத்துல வச்சு கொஞ்சம் ஹார்சா பேசிட்டேன்.. அதுக்கு சாரி கேட்டுக்கிறேன்..
 பாதுகாவலர் : ஒரு தங்கச்சி ஒரு அண்ணன கோபப்படுறது தப்பு இல்ல மேடம்.. நான் அதை அப்பவே மறந்துட்டேன் மேடம்... ஓகே மேடம் சாப்பிட்டு மீட்டிங்ல  கலந்து விடுவேன்..
நான் : ஓகே போயிட்டு வாங்க..

 இனி நந்தினியின் ஆட்டம்

 பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
[+] 2 users Like Murugann siva's post
Like Reply


Messages In This Thread
கோடீஸ்வரி - by Murugann siva - 20-11-2024, 09:12 AM
RE: கோடீஸ்வரி - by utchamdeva - 20-11-2024, 10:46 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 20-11-2024, 11:01 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 21-11-2024, 03:39 AM
RE: கோடீஸ்வரி - by murugadossr1 - 21-11-2024, 12:08 PM
RE: கோடீஸ்வரி - by GowriPriya - 21-11-2024, 12:31 PM
RE: கோடீஸ்வரி - by Kingofcbe007 - 21-11-2024, 01:08 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 21-11-2024, 09:12 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 22-11-2024, 06:27 AM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 24-11-2024, 12:02 AM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 24-11-2024, 07:50 PM
RE: கோடீஸ்வரி - by murugadossr1 - 25-11-2024, 05:10 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 27-11-2024, 09:14 PM
RE: கோடீஸ்வரி - by utchamdeva - 27-11-2024, 10:05 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 27-11-2024, 11:11 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 29-11-2024, 02:39 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 30-11-2024, 11:23 AM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 08-12-2024, 02:25 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 08-12-2024, 02:54 PM
RE: கோடீஸ்வரி - by Murugann siva - 11-12-2024, 04:34 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 11-12-2024, 04:55 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 12-12-2024, 02:18 AM
கோடீஸ்வரி - by Murugann siva - 20-11-2024, 09:13 AM
கோடீஸ்வரி - by Murugann siva - 20-11-2024, 09:13 AM



Users browsing this thread: 3 Guest(s)