08-12-2024, 06:15 AM
(This post was last modified: 22-05-2025, 10:33 AM by Kavinrajan. Edited 4 times in total. Edited 4 times in total.)
அத்தியாயம் #10
ஆரம்பத்தில் ஆதியின் காமவெறிக்கு இரையாகி இறுதியில் அவரது கொலைவெறிக்கு பலியாகி போனாள் அந்த பாவப்பட்ட அழகான இளம்பெண் அனுஷ்கா.
ஒரு உயிரை கொலை செய்யுமளவுக்கு கொடூரமான மனிதரல்ல ஆதி. அதே நேரத்தில் சமூகத்தில் தொழிலதிபர் அந்தஸ்த்தில் பெரிய மனுஷனாக அறியப்பட்டாலும் யோக்கியர் என கூறிடவும் முடியாது.
எந்த தவறுக்கும் அவரது அகராதியில் மன்னிப்பு என்பது உண்டு. நம்பிக்கை துரோகத்திற்கு மட்டும் மன்னிப்பு அளிக்க கூடாது என்பது அவரது திடமான கொள்கை. அந்த கொள்கையே இன்று அவரை கொலை செய்யும் அளவுக்கு கொண்டு போய் விட்டது.
உண்மையாக சொல்ல போனால் அனுஷ்கா தான் அவர் செய்யும் முதல் கொலை. அனுஷ்காவை கொலை செய்ய அவருக்கு எந்த முகாந்திரமும் இருக்கவில்லை. பின்னர் எப்படி?
அனுஷ்கா படுக்கையறையில் ரகசிய கேமரா வைத்து தனக்கு துரோகம் இழைத்து விட்டாள். பணத்தை மட்டும் அவள் கேட்டு மிரட்டினால் பரவாயில்லை.
தான் அனுஷ்காவோடு படுக்கையறையில் நடத்திய மன்மத லீலைகள் அடங்கிய விடியோவை ஆதாரமாக கொண்டு தன் அந்தஸ்த்தை பாதிக்கும்படியாக வேறு எதாவது காரியங்களில் இறங்கி விடுவாளா என்ற பயமும் பழியுணர்ச்சியும் அவரை உடனே இவ்வாறு கொலை செய்ய தூண்டி விட்டது.
பயணங்களில் வழக்கமாக கேட்கும் ஆங்கில துள்ளல் இசை பாடல்களை இம்முறை அவர் கேட்கும் மூடுக்கு வரவில்லை.
சரியோ தப்போ ஒரு உயிரை பறித்து விட்டேன். என்னதான் அனுஷ்கா செய்தது தப்பேன்றாலும், பதிலுக்கு நான் அவளை கொலை செய்தது மகாத்தவறு.
பேசி பார்த்திருக்கலாம். அவளுக்கு ஒரு வாய்ப்பு அளித்திருக்கலாம். மன்னிப்பு கொடுக்காமல் அவசரப்பட்டு விட்டேன்.
இப்போது அவளது உடலை புதைக்க வேண்டும். அவள் கொலையினால் எழும் விவகாரங்களை மூடி மறைக்க வேண்டும். நிறைய தலைவலிகள் தொடர்ந்து வரப் போகிறது எனக்கு.
தொடர்ச்சியாக ஹார்ன் அடித்தபடி, நிதானமாக செல்லும் சரக்கு லாரியையும் தன் கவலைகளையும் ஒதுக்கி தள்ளி விட்டு காரை நெடுஞ்சாலையில் விரைந்து ஒட்டினார் ஆதி.
அச்சமயம் அவர் கைபேசி வீறிட்டு அலறியது. அவர் மனைவி சுமித்ரா அழைத்திருந்தாள்.
"பத்திரமா இருக்குறியா சுமி...? நா கிளம்பி வந்துட்டே..."
"ன்னங்க.. என்னங்க.. எங்க இருக்குறிங்க... எப்ப இங்க வரப்போறிங்க...? கார்டன்ல யார் யாரோ நடக்கற காலடி சத்தம் கேட்குதுங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.. சீக்கிரமா வாங்க.. இங்க வந்துடுங்க.."
அவரை பேச விடாமல் ஒரே பல்லவியே திரும்ப திரும்ப பாடி அவரிடம் கைபேசியில் கதறினாள்.
"கொஞ்சம் என்ன பேச விடுறியாடி... நா இன்னும் பத்து நிமிஷத்துல அங்க வந்துடுவேன். ஏற்கனவே துரைய வரச் சொல்லி இருக்கேன். அவன் அந்த கொலகாரன.. இல்ல இல்ல கார்டன்ல சுத்திட்டிருந்த அந்த ஆள புடிச்சு அவுட் ஹவுஸ்ல வச்சிகிட்டானாம்.. இனிமே நீ எதுக்கும் பயப்படத் தேவயில்ல... இருந்தாலும் நா வர்ர வரைக்கும் பெட்ரூம்லேயே உள்ள லாக் பண்ணிட்டு இரு... கதவ திறந்து வெளிய வந்துறாத..."
ஆதி முழுவதுமாக சொல்லி முடித்ததும் சுமித்ரா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
"ம்ம்.. சரிங்க.. நீங்க சொல்றபடியே செய்றேன்.."
"ஒரு விஷயம் சுமி.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உனக்கு நா கால் பண்றப்போ ஸ்விட்ச் ஆப்னு வந்ததே...அங்க எதாவது பிரச்சனையா?"
"இல்லங்க... பயத்துல இருந்ததால.. ஃபோன்ல சுத்தமா சார்ஜ் போயிருந்தத கவனிக்கல... இப்ப சார்ஜ் போட்டுகிட்ட உங்ககிட்ட பேசுறேன்..."
"அப்படியா... சரி சரி.. கொஞ்சம் தைரியமா இரு... சீக்கிரமா வந்துர்றேன்.."
ஆதி தொடர்பை அணைத்து விட்டு காரை ஓட்டுவதில் கவனம் செலுத்தினார்.
அடுத்த பதினைந்து நிமிடங்கள் கழித்து...
கோடிக்கணக்கில் பணத்தை விழுங்கி ஏப்பமிட்ட கிரானைட் அரக்கர்களை போல இரு பக்கமும் சொகுசு பங்களாக்களால் நிரம்பி வழியும் நியூ அவென்யூ சாலையில் ஆதிராஜின் பார்சுனர் கார் மெதுவாக நுழைந்தது.
பத்து பங்களாக்களை கடந்து தன் பங்களாவின் முன்பு பார்சூனர் காரை நிறுத்தினார் ஆதி. அவர் கார் எஞ்சின் சத்தம் கேட்டாலே வழக்கமாய் ஓடி திறக்கும் செக்யூரிட்டிகள் இம்முறை ஹார்ன் அடித்தாலும் கதவை திறக்க வரவில்லை.
எரிச்சலுற்றார் ஆதி.
ஹெட்லைட் வெளிச்சங்களை அதிகப்படுத்தி பத்து அடி உயர உறுதியான எஃகு கதவின் மீது பீய்ச்சி அடித்து உற்று பார்த்தப்பின் அதிர்ச்சியடைந்தார்.
ஒரு ஆள் போகுமளவுக்கு கதவு ஏற்கனவே திறந்திருந்தது. கதவை திறந்து வைத்து விட்டு செக்யூரிட்டிகள் அப்படி என்ன தான் உள்ளே வேலை செய்கின்றனரோ?
கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு, காரினை விட்டு இறங்கினார். ஒரு கார் போகுமளவுக்கு வாயிற்கதவுகளை தானே முழுவதுமாக திறந்தார்.
"ராம்...தேவ் நட்..ராஜ்" கர்ஜித்தார் ஆதி.
எத்தனை சத்தமாக கத்தியும் பிரஜோனமில்லை. செக்யூரிட்டிகள் யாருமே அவர் கூப்பிட்ட குரலுக்கு கைகட்டி வந்து நிற்கவில்லை.
காரை உள்ளே எடுத்து வந்த பிறகு வாயிற்கதவுகளை தானே பூட்டினார்.
இடியட்ஸ்.. லேஸி பீப்பிள்ஸ்.. எங்கே தான் போய் தொலைந்தார்கள்? பயந்து வேலையை விட்டே ஓடி விட்டார்களா? இல்லை செத்து தான் போய் விட்டார்களா..?
மனதில் கேள்விகளை எழுப்பிய நேரத்தில்... செக்யூரிட்டி ரூம் ஒட்டிய தடுப்பு சுவரின் மேல் சில இரத்த துளிகளை அவர் காண நேர்ந்தது.
கலவர மனதுடன் தடுப்பு சுவரை அண்ணாந்து பார்த்ததில்...
வாயில் துணி வைத்து கட்டப்பட்ட நிலையில் இரு செக்யூரிட்டிகள் பழைய ப்ளாஸ்டிக் குப்பைகளுக்கு நடுவே கிடந்தனர்.
உயிரோடு இருக்கிறார்களா இல்லை இவர்கள் கொலை செய்யப்பட்டார்களா...?
"டேய்.. நட்ராஜ்... ராம்தேவ்... என்னாச்சுடா உங்களுக்கு..? எழுந்திருங்கடா..."
அவர்கள் காதுகளுக்கு வெகு அருகே உரக்க கத்தியதில் ஒருவன் மட்டும் லேசாக கண்களை திறந்து பார்த்தான்.
அவன் நெற்றியிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. யாரோ தலையில் பலமாய் அடித்திருக்கிறார்கள்.
அவன் வாயிலிருந்த துணியை எடுத்து விட்டார். கைகட்டுகளை அவிழ்த்து விட்டார்.
"ராம்தேவ்... என்னடா ஆச்சு உனக்கு... யார் உன்ன அடிச்சு இங்க போட்டது..?" குடிக்க தண்ணீர் பாட்டிலை நீட்டியபடி அவனை விசாரித்தார் ஆதி.
"சாப்.. பின்னாலயிருந்து என்னையும் நட்ராஜையும் அடிச்சு போட்டுட்டான். யாருனு தெரியல... எப்படி உள்ள வந்தானும் புரியல..."
"வந்தது ஒருத்தனா இல்ல பல பேரா? அவன் முகத்த பாக்க முடிஞ்சுதா...?"
"ஒருத்தன் மட்டுந்தான் சாப்... பின்னந்தலையில பலமா அடிச்ச உடனே மயக்கமாயிட்டேன்... எதையும் பாக்க முடியல... ஒரு நிமிஷம் இருங்க சாப்... எங்களை சுவத்துக்கு பின்னாடி தூக்கி போடும் போது... அவனுக்கு ஒரு போன்கால் வந்திச்சு... முடிச்சிட்டேன்... இப்போ உள்ள போறேனு யாருகிட்டயோ பேசிட்டே உள்ளே போனான் சாப்... "
"சரி, நட்ராஜ தண்ணி தெளிச்சி எழுப்பி விடு... துப்பாக்கி இருந்தா எடுத்து ரெடி பண்ணி வைச்சிக்கோங்க... வெளிய யாரையும் விடாதீங்க... நா இப்ப உள்ள போறேன்..."
"சாப்... நானும் உங்ககூட வர்ரேன்... "
"வேணாம்... நா சொல்லுறத மட்டும் செய்..."
"சாப்.. போலீசுக்கு இன்ஃபார்ம் பண்ணட்டுங்களா...?"
"எதுவும் வேணாம்... நா... எ..ன்...ன.. சொ..ல்..லு..ற..னோ.. அ..த.. ம..ட்..டு..ம்.. நீ.. செ..ய்..ஞ்..சா.. போ..து..ம்... புரிஞ்சுதா...?"
எரிமலையாய் வெடித்தார் ஆதி.
கார் டிக்கிக்குள் அனுஷ்காவின் உடலை மறைத்து வைத்ததை போலீசார் சுலபமாக மோப்பம் பிடித்து விடுவார்கள் என அவருக்கு சொல்லித்தர வேண்டுமா என்ன?
கோட்பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை உருவி இறுக பிடித்து கொண்டு உள்ளே செல்லும் ஆதியை பயத்தோடு பார்த்தான் செக்யூரிட்டி ராம்தேவ்.
அவுட் ஹவுஸை நெருங்கும் முன் ஒரு முறை துரையை அழைத்தால் என்ன...?
கைபேசியில் அழைத்தார்.
முதல் ரிங்கிலே எடுத்து விட்டான். என் அழைப்பிற்காக காத்திருக்கிறான் போலும்.
"துரை.. எங்க இருக்க...?"
"அவுட் ஹவுஸ்ல... நீங்க சார்...?"
"அங்க தான் வந்துனே இருக்கேன். அவன எங்க கட்டி வச்சிருக்க..."
"என் பக்கத்துல வச்சிருக்கேன் சார்..."
"குட்... இதோ வந்துர்றேன்"
அழைப்பை துண்டித்து விட்டு ஒரு முறை தோள்களை குலுக்கி அலுத்து கொண்டார் ஆதி.
இன்றிரவு இதே துப்பாக்கியால் மற்றோரு உயிர் எடுக்கும் கொலை பாவத்தையும் நான் செய்ய வேண்டும் போலிருக்கே..



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)