05-12-2024, 01:05 AM
கதை இன்னும் யாருடைய கவனத்தையும் கவராமல் இருக்கலாம். கதையை எழுத துவங்காமல் வெறும் பில்டப் மட்டும் கொடுத்துக் கொண்டிருப்பது அதற்கு காரணமாக இருக்கலாம்.
ஆனால் இந்த அளவு பில்டப் கொடுக்க மூன்று காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று இதுவரை எழுதிய பகுதிகள், எழுதுவதற்காக கற்பனை செய்து வைத்திருக்க பகுதிகள் எல்லாமே என்னைப் பொருத்த வரை மிக அருமையான கதையாக வரும் என்ற நம்பிக்கையை கொடுத்திருப்பது. அதனால் கொஞ்சம் பில்டப் கொடுத்து விட்டு ஆரம்பித்தால் கதை வாசகர்களிடமும் அதிகமாக சென்றடையும் என்ற ஆசை ஒரு காரணம்.
இரண்டாவது காரணம், இத்தனை பில்டப் கொடுத்து விட்டு கதையை பாதியில் நிறுத்தி விட கூடாது, அல்லது பதிவுகளுக்கு இடையில் இடைவெளி அதிகம் விழுந்து விடக் கூடாது என்பதால் ஓரளவு கதையை பதிவுகளுக்கு இடையில் இடைவெளி அதிகம் விழுந்து விடாமல் தொடர்ச்சியாக பதிவு செய்யும் அளவுக்கு எழுதி முடித்து விட்டு பின் கதையை துவங்கலாம் என்று நினைப்பது தான் இரண்டாவது காரணம்.
மூன்றாவது காரணம் தான் மிக முக்கியமான காரணம். நான் ஏற்கெனவே சொன்னபடி இந்த கதையில் நான் சில வரம்புகளை மீற நினைத்திருக்கிறேன். சில எல்லைகளை கடக்க நினைத்திருக்கிறேன். அதே சமயம் அந்த மீறல்கள் அதிர்ச்சியாகவோ, அருவருப்பாகவோ இருக்காது. ஆனால் இப்படி கூடவா நடக்கும், இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று நினைக்க தோன்றும் அளவுக்கு சில சம்பவங்கள் இருக்கும். அந்த சம்பவங்கள் திடீரென்று படித்தால் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியாத மாதிரி இருக்கும். அதனால் வாசகர்களை இந்த கதைக்கு ஏற்ற மனநிலைக்கு கொண்டு வர நினைக்கிறேன். இந்த மாதிரி சில பதிவுகள் வாசகர்கள் என் கதையில் இடம் பெறப் போகும் சில சம்பவங்களை ஏற்கும் மனநிலைக்கு கொண்டு வரும் என்று நினைக்கிறேன். அதற்காக தான் இந்த பில்டப்.
அது என்ன மாதிரியான சம்பவங்கள் என்பதை சொல்லி விட்டால் கதையில் சுவாரசியம் இல்லாமல் போய் விடும் என்பதால் இந்த கதையில் நான் செய்துள்ள சில விசயங்களை சொல்ல விரும்புகிறேன்.
கதை non linear முறையில் செல்லும். அதாவது சம்பவங்கள் தொடர்ச்சியாக இருக்காது. ஒரு சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அடுத்தப் பகுதி இருபது முப்பது வருடங்கள் பின்னோக்கி செல்லும். ஒரு சம்பவம் முடிந்து விட்டது போல இருக்கும். ஆனால் அதற்கு ஒரு தொடர்ச்சி இருக்கும். அது பின்னால் வேறொரு பகுதியில் இடம் பெறும். இந்த மாதிரி கதை எழுத கொஞ்சம் கவனம் தேவை என்பதாலும் எழுதி முடித்தப் பகுதியையே திரும்பவும் படித்து பார்த்து எங்கேயாவது continuity விட்டுப் போயிருக்கிறதா என்று சரிபார்த்து திருத்தி எழுத வேண்டியுள்ளது.
சரி இதையெல்லாம் எதுக்குய்யா எங்க கிட்டே சொல்லி ஒண்ணுமே இல்லாத ஒரு திரியை திரும்ப திரும்ப எங்களை பார்க்க வைச்சு எங்க டைமை வேஸ்ட் பண்றே என்று நீங்கள் கடுப்பாவது எனக்கும் புரிகிறது.
என்ன செய்வது நண்பர்களே, நானும் பிரபலமாக வேண்டும். என் கதை அதிக வாசகர்களால் படிக்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆசை தான். இப்படி பில்டப் கொடுத்து விட்டு கதையை ஆரம்பித்தால் கதையின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி நிறைய பேர் படிப்பார்கள் என்ற நப்பாசை தான்.
கண்டிப்பாக இந்த பில்டப்புக்கு ஏற்ற ஒரு அருசுவை விருந்தாக என் கதை இருக்கும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
அனேகமாக இன்னும் ஒரே ஒரு பில்டப் பதிவு மட்டும் இருக்கும் என்றும் உறுதி கூறுகிறேன்.
இவ்வளவு நேரம் என் தற்பெருமை பதிவை பொறுமையாக படித்த வாசகர்களுக்கு நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.