27-06-2019, 09:19 AM
`ஒரு சிலரின் தவற்றுக்காக மாநிலத்தையே குற்றம்சாட்டுவது சரியல்ல!' -ஜெய்ஶ்ரீராம் குறித்து மோடி
ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் கடந்த 18-ம் தேதி அன்சாரி என்கிற 24 வயது இளைஞனை திருடன் எனக் கருதி ஒரு கும்பல், கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தது. அந்த இளைஞன் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர் எனத் தெரிந்ததும் அவரை `ஜெய் ஶ்ரீராம்', `ஜெய் ஹனுமான்' என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தி மேலும் அடித்தார்கள். சுமார் ஏழுமணி நேரம் தாக்குதலுக்குப் பிறகு அந்த இளைஞன் மயங்கி விழுந்தார். அவரை அடித்துத் துன்புறுத்திய காட்சி சமூக வலைதளங்களில் பரவி மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரையும் தொந்தரவுக்கு உள்ளாக்கியது.
`18 மணிநேரம் கழித்து மருத்துவமனையில் சேர்க்க அந்த இளைஞர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனதும் பெருவாரியானோர் கொந்தளித்தார்கள். பல தரப்புகளிலிருந்து கண்டனக் குரல் எழுந்தது. `ஜெய் ஶ்ரீராம்' சொல்ல மாட்டோம் எனப் பல பதிவுகள் ஃபேஸ்புக்கில் எழுதப்பட்டது. ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சியினர் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் கடுமையாக விமர்சனம் செய்தார். `நோ டு ஜெய் ஸ்ரீராம்' என்கிற முழக்கம் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது.
மாநிலங்களவையில் பேச இருந்த மோடி இதுகுறித்து பேசுவாரா என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பிரதமர் மோடி அது குறித்து தன் கருத்தை தெரிவித்தார். அவர் பேசுகையில், ``ஜார்க்கண்ட் மாநிலத்தில் கூட்டு வன்முறையால் நிகழ்த்தப்பட்ட கொலை கடும் கண்டனத்துக்கு உரியது. காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்" எனச் சொன்னவர் அத்துடன்

``ஒரு சிலர் செய்யும் தவற்றுக்காக மாநிலத்தையே குற்றம் சாட்டுவது சரியல்ல" எனவும் கூறியிருக்கிறார். பிரதமர் மோடியின் மாநிலங்களவை உரையில் இதுதவிர, பீகாரில் மூளைக்காய்ச்சலால் 130 குழந்தைகள் இறந்துபோனதற்கும் தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
first 5 lakhs viewed thread tamil