Romance 80s மற்றும் 2K காதல் கதை♥️
#12
Heart 
எபிசோட் - 1

கதை அறிமுகம்: ராம், இந்த கதையின் நாயகன், சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறான்.


காலை 8 மணி - ராமின் வீடு

ராமின் அம்மா மற்றும் ராம்:
 அம்மா: ராம், சீக்கிரம் எழுந்திரு, நேரம் 8 மணி ஆகி விட்டது!

ராம்: இன்னும் 5 நிமிஷம், மா. நேரம் இன்னும் 8 மணி தான், இல்லையா?

(கோபமாக) அம்மா: நீ இந்த 5 நிமிஷத்தை அரை மணி நேரமா சொல்லிட்டு இருக்க. தூங்கவேணும்னா, லீவு எடுத்துக்கிட்டு தூங்கு. ஆபீஸ் 10 மணிக்குதான்னு தெரியும்ல?

ராம்: சரி, மா. எழுந்திருவேன். கத்தாதீங்க. நான் 5 நிமிஷத்தில் ரெடியாகிடுவேன். அதற்குள் எனக்கு சூப்பரா சாப்பாடு ரெடி பண்ணுங்க.

அம்மா: சரி. சீக்கிரம் ரெடி ஆகி வா.
(ரெடியாகி விட்டு, டைம் பார்த்த ராம்) ராம்: அய்யோ, 9 மணி ஆகி விட்டதே. அம்மா, டைம் மிகவும் ஆகி விட்டது. காலை ல உணவையும் ரெடி பண்ணி தர முடியுமா?

அம்மா: உன்ட இருந்து இந்த வார்த்தை வரும்னு எனக்கு தெரியும். அதனாலேயே, காலை உணவும் மதிய உணவும் இரண்டையும் ஏற்கனவே தயாராக பாக்கெட்டில் போட்டுவிட்டேன்.

ராம்: நான் ரெடி மா. நன்றி! நான் போறேன். நன்றி. பை!
(ராம் தனது ஃபக் எடுத்து, தெருவில் இருந்து சென்று கொண்டிருந்தான். பக்கத்து தெரு ல போகும் போது பைக் பஞ்சர் ஆயிற்று.) ராம் (மனசுக்குள்): அம்மா காலையில் சீக்கிரம் எழுந்திரு னு சொன்னாங்க. எழுந்திருந்தா எப்படி இதை மெனேஜ் பண்ணியிருப்பேன். இப்போ என்ன பண்ண? 10 மணிக்கு மீட்டிங் இருக்கே.

(தனது அம்மாவை அழைக்கும் ராம்) ராம்: அம்மா, பைக் பஞ்சர் ஆயிடுச்சு. அப்பாவை கேட்டு பைக்கை பஞ்சர் கடைக்கு கொடுக்க சொல்றேன். நான் பைக் அப்பாவின் ஃபிரண்ட் கடைல நிறுத்தறேன். கடை தெருவில் இருக்கு, அப்பாவுக்குத் தெரியும். அதை அப்பாவிடம் சொல்லிடுங்க. நான் ஆபீஸ் எப்படியோ ரீச் ஆகிறேன்.

(ராம் அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பிற்கு நடக்கத் தொடங்குகிறான். அப்போது, ஒரு கார் ராமின் முன்னால் வந்து நிற்கிறது.)

அடுத்த பகுதி ல கார் ல யார் இருக்கா என பார்க்கலாம்.
[+] 1 user Likes max082300's post
Like Reply


Messages In This Thread
RE: 80s மற்றும் 2K காதல் கதை♥️ - by max082300 - 01-12-2024, 06:35 PM



Users browsing this thread: