Romance கோடீஸ்வரி
#31
கருத்து தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 

நந்தினி : இங்கு நடப்பது கனவா நினைவா, என்று தெரியாமல், கண்கள் முழுவதும் கண்ணீரோடு, தனக்கு இவ்ளோ பெரிய குடும்பம் இருக்குது, அம்மா அப்பா அண்ணா அண்ணி, என்று உறவுகள் இருக்கிறது, என்று ஆனந்த மழையில். பேச்சு இல்லாம சிலையாய் நின்றாள்.

பார்வதி : வாடி என் ராஜாத்தி, என் தங்கமே, நான் தொலைத்த ரத்தினமே. என்று பாசத்துடன் தன் மகளை அரவணைத்து கொண்டால், 

சிதம்பரம் : டேய் சண்முகம், நம்ம பொண்ண. நம்ம பொண்ணா நடிக்க. கூப்பிட்டு வந்து இருக்கோம் டா, இத நினைக்கும் போது. என்னடா சொல்ல 

சண்முகம் : அப்பா எனக்கு என்ன சொல்ல என்று தெரியல, என் தங்கச்சி கிட்ட, என் தங்கச்சி மாதிரி நடிக்க சொல்லி இருக்கோம். நம்ம எவ்ளோ பெரிய முட்டாள் 

சுமதி : எங்க ஐடியா கொடுத்த என்னனையும், முட்டாள் என்று சொல்றிங்களா, நான் அத்தை காக செஞ்சேன், அது இப்படி புஷ்ன்னு போகணும் யாரு கண்டா, 

பார்வதி : நீங்க செஞ்ச முட்டாள் தனம்,  எனக்கு  என் பொண்ணை கொண்டு வந்து இருக்கு, என்னமா நந்தினி ஏதும் பேசாம நிக்கிற, நீ தான் மா. என் பொண்ணு, இந்த வீட்டு வாரிசு, இந்த மொத்த சொத்துக்கும், அதிபதி,

நந்தினி : அம்மா என்று ரொம்ப அழுது கொண்டு தன் தாயை இறுக்க கட்டி புடித்து கொண்டால், இப்படியே ஒரு அரை மணி நேரம் அழுது இருப்பாள். பாவம் அவளே யாரு என்று தெரியாமல். அனாதையாக வளர்ந்து இருந்தவள், இவளுக்கு இவள் அனாதை இல்ல. என்று தெரிந்த உடனே, என்ன செய்வாள், பல வருடம் ஏக்கம். மொத்தமாக அழுது கொண்டு இருந்தால், அம்மா அம்மா அம்மா என்று சொல்லி கொண்டே,

சிதம்பரம் : என் செல்லம். இனி நீ அழ கூடாது மா, நீ இந்த வீட்டு ராணி, எங்க செல்லம், என் அம்மா. உன்ன தொலைச்சி. நாங்க பட்ட கஷ்டம். ஐயோ அந்த கடவுளுக்கு தான் தெரியும்,

நந்தினி : அம்மா நீங்க அழாதீங்க, நான் அழ மாட்டேன், இனி நா எதுக்கு அழணும். அதான் எனக்கு நீங்க இருக்கீங்க, அப்பறம் என்ன, அப்பா சொந்த மகளையே நடிக்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க. உங்கள. என்று அப்பாவையும் கட்டி புடித்தால், அப்பா. ஹாஸ்பிடல் வச்சி. அண்ணா சொல்லும் போது. அவர அண்ணனு கூப்பிடனும், உங்களை அப்பானு கூப்பிடனும் சொல்லும் போது, எனக்கு சந்தோசமா இருந்துச்சி பா, அது ஏன் தெரியல, ஒரு வேலை நான் அனாதையா வளர்ந்து இருக்கேன், அதான் நினைக்கேன் பா. 

சிதம்பரம் : ஏய் இன்னோர் தடவ அனாதை சொன்ன, உன்ன. அடிச்சிருவேன், உனக்கு நாங்க எல்லாம் இருக்கோம். 

சண்முகம் : அப்பா எவ்ளோ நேரம். நீங்களே பாசம் மழையை பொழிவிங்க, இங்க நானும் இருக்கேன், 

நந்தினி : அப்பாவை விட்டு. அண்ணா விடம் சென்றால் அவனை அழுது கொண்டு பார்த்தால், அவன் பேசிய வார்த்தைகள்.

சண்முகம் : தங்கையை பாசத்துடன் கட்டி புடித்தான். என் உயிரே. 

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே. சொந்ததின் சொந்தமே 

பாடும் போது. நந்தினி. அண்ணா இது நல்ல பாட்டு.இந்த பாட்டை நீ கொலை பண்ணாத.கேக்கேவே கேவலமா இருக்கு என்று சொல்லவும் அனைவரும் சிரித்தனர். 

சண்முகம் : ஏய் வாலு உன்னை, என் பாட்டையா கிண்டல் பன்ற, சொல்லும் போது. நந்தினி, ஓடி போய் சுமதி இடம் சென்றால். அண்ணி பாருங்க அண்ணி.

சுமதி : மகராசி இத்தனை வருஷம். நான் பட்ட கஷ்டம் இருக்கே, என் கிட்ட. வந்து பாடியே கொள்ளுவார் மா. நானும் எத்தனை நான். தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது. இனி பாடி பாருங்க, எனக்கு சப்போர்ட் ஆள் இருக்கு.

நந்தினி : ஹலோ மிஸ்ஸ் சுமதி சண்முகம், இவன் என் அண்ணன், இவனை நா கிண்டல் பண்ணுவேன். வேற யாரும் கிண்டல் பண்ணா. நா கேப்பேன்,. 

சுமதி : அடி கழுதை, உன்னை நம்பி pesunen பாரு, 

சண்முகம் : அப்படி சொல்லுமா என் தங்கம். அப்போ அவனுக்கு ஒரு நியாபகம் வந்தது.  ஆமா நந்தினி. உனக்கு ஏதோ பிரச்சனை இருக்குது சொன்னியே. அது என்ன பிரச்சனை மா, 

நந்தினி : வேலாயுதம் செஞ்ச கொடுமைகள். அவனை இனி சும்மா விட கூடாது. என்று ஒரு முடிவு எடுத்து, சொல்ல ஆரம்பித்தால், அண்ண உனக்கு வேலாயுதம்  தெரியுமா 

சண்முகம் : தெரியும், கோவை ஆளுங்கட்சி MLA. தெரியுமே. அவன் என்ன செஞ்சான்,

நந்தினி : அவன் செய்த கொடுமைகள் எல்லாம் சொல்ல ஆரம்பித்தாள். என்னை கொள்ள துடிச்சிட்டு இருக்கான். நா தங்கி இருந்த ஆசிரமத்தை. இடிச்சிட்டு. வேற ஒரு மால் கட்ட போறான், அது மட்டும் இல்ல. அவன் மகன் சாவுக்கு. நா தான் காரணம் நினைச்சிட்டு இருக்கிறான், அந்த கோவத்துல என்னை கொள்ள காத்து கிட்டு இருக்கிறான்.

நடிக்க வந்த பெண் பெயர் கீதா : என்ன பெயர் சொன்னிங்க, வேலாயுதமா,

நந்தினி : ஆமா. வேலாயுதம் தான்.. ஏன் கேக்குறீங்க.

கீதா : அவர் தான் என்னய நடிக்க அனுப்பினான்,.

சண்முகம் : அவனுக்கு எப்படி தெரியும் நம்ம வீட்டுல ஒரு பொண்ணு காணும் என்று.

கீதா : நந்தினி கொள்ளை அனுப்புனது வேலாயுதம் தான், பஸ் ஸ்டாண்ட்ல அந்த பொண்ண நீங்க காப்பாத்தி ஹாஸ்பிடல் சேர்த்து இருக்கிறீங்க,. அவன் அனுப்பிய அடியாட்கள்., ஹாஸ்பிடல் வந்து நீங்க பேசறது எல்லாமே கேட்டு இருக்கிறாங்க., அந்தத் தகவலை வேலாயுதம் கிட்ட சொல்லி இருக்காங்க, அதனால எண்ணிய நடிக்க அனுப்பினான், அத வச்சு நிறைய சாதிக்கலாம் என்று 

பார்வதி : அயோக்கிய ராஸ்கல். என் மகளையே கொல்ல பாக்குறான். வேற ஒரு பொண்ணு என்னுடைய மகளா நடிக்க வைத்திருக்கிறான்,  டேய் சண்முகம் டிஜிபி  க்கு போன் போட்டு. அவனை உடனே அரெஸ்ட் பண்ண வேண்டிய வேலைய பாருடா.. 

சண்முகம் : சரி மா போன் போடுறேன், நேராக வேலாயுதத்துக்கு போன் போட்டான்.. 

 வேலாயுதம் : சண்முகத்தின் நம்பரை பார்த்து அவன் யார் என்று கண்டுபிடித்தான், இவரு நமக்கு ஏன் போன் போடுறாரு. ஹலோ சார் வணக்கம், எப்படி இருக்கிறீங்க சார் நல்லா இருக்கீங்களா.

சண்முகம் : நான் நல்லா இருக்கிறது இருக்கட்டும், ஆமா நீ ஒரு ஆசிரமத்தை வேலைக்கு வாங்க ஆசைப்பட்டு இருக்கியா., அப்படி ஒரு ஆசை இருந்துச்சுன்னா, அத அப்படியே மறந்திரு., அந்த ஆசிரமத்தை இனி நாங்கள் எடுத்து நடத்தலாம் இருக்கிறோம். இனி நீ அதுல தலையிடக்கூடாது. உனக்கு என்னைய பத்தி நல்லா தெரியும்,

 வேலாயுதம் : சார், நீங்க அதுல தலையிடுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, கண்டிப்பா நான் அதை வாங்க மாட்டேன், இப்பவே அதை கை விட்டுடுவேன். ஆமா சார் உங்க தங்கச்சி கிடைச்சுட்டாங்கன்னு கேள்வி பட்டேன்.. ரொம்ப சந்தோசம் சார்.

சண்முகம் : ஆமா வேலாயுதம் என்னுடைய தங்கச்சி கிடைச்சிட்டாள், அதுவும் அவள் எங்க வளர்ந்தா தெரியுமா, நீ ஒரு ஆசிரமத்தை வேலைக்கு வாங்கணும்னு ஆசைப்பட்டாயே. அங்க தான், வளர்ந்து இருக்கிறாள்,


 வேலாயுதம் : என்ன இவரு இப்படி சொல்றாரு நான் வேற ஒரு ஆசிரமம் எல்லாம் சொல்லி தான் அந்த பொண்ண அனுப்பி வச்சேன்,, அந்த நந்தினி இருக்கிற ஆசராமத்தை சொல்றாரு, ஒரே குழப்பமா இருக்கே, அங்க என்னதான் நடந்திருக்கும்.

சண்முகம் : என்ன வேலாயுதம் பேச்சை வரல, என்னடா வேற ஆசிரமம் சொல்றானே அப்படி யோசிக்கிறாயோ, கரெக்ட் நீ நடிக்க சொல்லி அனுப்புனியே அந்த பொண்ணு இல்ல, என்னுடைய தங்கச்சி வேற யாரும் இல்ல, நீ கொல்ல துடிக்கிறியே அந்த நந்தினி தான், ராஸ்கல்

 வேலாயுதம் : சார் என்ன சொல்றீங்க நான் யாரை கொலை பண்ண துடிச்சேன்,அப்படி எதுவும் கிடையாது. உங்களுக்கு யாரோ என்ன பத்தி தப்பா சொல்லி இருக்காங்க.

சண்முகம் : வாய மூடுடா ராஸ்கல், யார்கிட்ட பொய் சொல்ற, நான் இங்க இருந்து உன் அரசியல் செல்வாக்கை அழிக்க முடியும். உன்னைய கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்க முடியும், மந்திரி கிட்ட பேசவா, இல்ல பிரதமர் கிட்ட பேசவா, ராஸ்கல் இதோடு வேலையெல்லாம் மூட்டை கட்டி வச்சிரணும். இதுக்கு அப்புறம் ஏதாவது பிரச்சனை செய்த. அப்புறம் நீ உயிரோட இருக்க மாட்ட. இரு என் தங்கச்சி கிட்ட போன கொடுக்கிறேன் நந்தினி நீயே வேலாயுதத்துக்கு போன் போட்டு. பி எஸ் எஸ் குரூப் ஆஃப் கம்பெனி ஓட எம்டி பேசுறேன். சொல்லுமா அப்புறம் அவனோட பதிலை மட்டும் பாரு. உன்னுடைய கோபத்தை இப்ப காட்டுமா.

நந்தினி : நா எப்படி. அவன் ரொம்ப மோசமாணவன் அண்ணே, சொன்னா புரிஞ்சுக்கோ அண்ணே 

சண்முகம் : நீ சாதா பொண்ணு இருக்கும்போது நீ பயந்து இருக்கலாம். இப்ப நீ அப்படி கிடையாது, நீ டாப் 10 பணக்காரர்கள் இல்லை நீயும் ஒருத்தி. இந்தியாவிலேயே கோடீஸ்வரி. நான் சொன்ன மாதிரியே நீ பேசு. பி எஸ் எஸ் குரூப் ஆப் கம்பெனி ஓட எம்டி பேசுறேன்னு அப்படி மட்டும் பேசி பாரு,அதுக்கு அப்பறம் பாரு அவன் எப்படி பேசுறான்  பேசு மா 

நந்தினி : ஒரு முடிவு எடுத்து, வேலாயுதத்துக்கு  போன் போட்டால் 

வேலாயுதம் :  ஹலோ யாரு பேசுறது.

நந்தினி : நா PSS குரூப் ஆப் கம்பெனி md நந்தினி பேசுறேன், நேத்து வரைக்கும் என்னை கொல்ல துடிச்ச நந்தினி பேசுறேன்,. 

 வேலாயுதம் : மேடம் என்ன மன்னிச்சிடுங்க. நீங்க எவ்ளோ பெரிய ஆள் அப்படின்னு தெரியாம நான் தலையிட்டுட்டேன், உங்க பக்கமே கால் வச்சி படுக்க மாட்டேன், இதைவிட என்னை விட்டுடுங்க. ப்ளீஸ்

நந்தினி : டேய் உன்ன போய் பெரிய ரவுடி. பயங்கரமானவன், உன்னைய கண்ட கோவையில் உள்ளவங்க அத்தனை பேரும் பயப்படுவாங்க அப்படின்னு நினைச்சேன், நீ என்னடா இப்படி இருக்க., உன்னை இப்படி பேச வைக்க, எனக்கு கோடீஸ்வரி என்ற தகுதி வேணும் டா. சாதா ஒரு பொன்னால. ஒரு அரசியல்வாதி தப்பு செஞ்சா, எதுமே செய்ய முடியாது. அப்படி தான். ஆனா இனி இப்படி நடக்காது, தப்பு செஞ்ச அரசியல்வாதிகள் கிட்ட. கேள்வியை தைரியமா கேப்பாங்க டா. ஏனா உண்மை என்னைக்கும் தோற்காது டா. வை டா போனை.

வேலாயுதம் : டேய் இங்க என்னடா. நடக்குது, அந்த நந்தினி பி எஸ் எஸ் குரூப்போட பொண்ணுடா. இனிமேல் அவள் நிழல் கிட்ட கூட நெருக முடியாது டா. அப்படித்தான்டா அவள் நினைச்சிருப்பா. ஆனால் சூழ்ச்சி ஒன்னு இருக்குடா, ஏதாவது மறைமுகமா சூழ்ச்சி செஞ்சு, என் மகனோட சாவுக்கு நிச்சயமா பழிவாங்குவேன். அதே மாதிரி அந்தப் பணக்காரன் நாய்களையும், சும்மா விட மாட்டேன் டா.உங்க மேல தப்பா ஏதாவது. குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவங்கள பிச்சைக்காரனா ஆக்குறேன்டா, இது என்னுடைய சவால் டா.
[+] 3 users Like Murugann siva's post
Like Reply


Messages In This Thread
கோடீஸ்வரி - by Murugann siva - 20-11-2024, 09:12 AM
RE: கோடீஸ்வரி - by utchamdeva - 20-11-2024, 10:46 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 20-11-2024, 11:01 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 21-11-2024, 03:39 AM
RE: கோடீஸ்வரி - by murugadossr1 - 21-11-2024, 12:08 PM
RE: கோடீஸ்வரி - by GowriPriya - 21-11-2024, 12:31 PM
RE: கோடீஸ்வரி - by Kingofcbe007 - 21-11-2024, 01:08 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 21-11-2024, 09:12 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 22-11-2024, 06:27 AM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 24-11-2024, 12:02 AM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 24-11-2024, 07:50 PM
RE: கோடீஸ்வரி - by murugadossr1 - 25-11-2024, 05:10 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 27-11-2024, 09:14 PM
RE: கோடீஸ்வரி - by utchamdeva - 27-11-2024, 10:05 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 27-11-2024, 11:11 PM
RE: கோடீஸ்வரி - by Murugann siva - 29-11-2024, 11:18 AM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 29-11-2024, 02:39 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 30-11-2024, 11:23 AM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 08-12-2024, 02:25 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 08-12-2024, 02:54 PM
RE: கோடீஸ்வரி - by karthikhse12 - 11-12-2024, 04:55 PM
RE: கோடீஸ்வரி - by omprakash_71 - 12-12-2024, 02:18 AM
கோடீஸ்வரி - by Murugann siva - 20-11-2024, 09:13 AM
கோடீஸ்வரி - by Murugann siva - 20-11-2024, 09:13 AM



Users browsing this thread: 9 Guest(s)