17-11-2024, 12:12 AM
(This post was last modified: 22-05-2025, 10:14 AM by Kavinrajan. Edited 6 times in total. Edited 6 times in total.)
அத்தியாயம் #1
சூரியனின் ஒளிகற்றைகளை மிச்சமீதி இல்லாமல் அப்பகுதியிலிருந்து துரத்தி விட்ட இரவின் அருளாசியில் இருள் அடர்த்தியாய் கவிந்து கிடக்க.. அதன் மடியில் தனித்திருந்த அந்த ஆடம்பர பங்களாவின் உட்புற விளக்குகள் நிலவுக்கு இணையான ஒளியை கஞ்சதனமில்லாமல் உமிழ்ந்து கொண்டிருந்தன.
பங்களாவின் பால்கனியில் காற்று வாங்க கைலி பனியன் சகிதமாய் ரிலாக்ஸாக வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தார் நடுத்தர வயதை ஒத்த ஆதி என்கிற ஆதிராஜ்.
ஐம்பதை கடந்திருந்தாலும் இன்னும் உடலை கட்டுமஸ்தாகத்தான் வைத்திருந்தார். காரணம் அவரது உடற்பயிற்சிகள் மற்றும் பெரிதாக குற்றம் சொல்ல முடியாத அவரின் கெட்ட பழக்கவழக்கங்கள்.
மனதில் ஆயிரம் யோசனைகள் ஓடிக் கொண்டிருந்ததை போல அவர் முகம் இருந்தது. பல கம்பெனிகளின் எம்.டி. ஆயிற்றே இருக்காதா பின்ன என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நாம் நினைப்பது போல இந்நேரம் அவர் சிந்திப்பது தான் நடத்தும் கம்பெனிகளை பற்றியோ புதிதாய் தொடங்கவிருக்கும் பிஸ்னஸ்களை பற்றியதல்ல... இன்றிரவு அவருக்கு யார் கம்பெனி கொடுப்பார்கள் என்பதை பற்றியே.
பால்கனியை ஒட்டியவாறு இருந்த தன் படுக்கையறையினுள்ளே பார்வையை வீசினார். மெல்லிய ஜூரோ வாட்ஸ் பல்பு வெளிச்சத்தில் அவர் மனைவி முழுவதுமாக போர்த்தி கொண்டு அயர்ந்து தூங்கி கொண்டிருப்பது தெரிந்தது.
கொடுத்து வைத்தவள். வாய்க்கு ருசியாக சமைக்கிறாள். உண்டு படுத்தவுடன் நிம்மதியாக உறங்கி விடுகிறாள். அதை தவிர என்ன தெரியும் இவளுக்கு.
நான் தான் கொடுத்து வைக்கவில்லை. கட்டிய புருஷனான என்னை கட்டிலில் சந்தோஷப்படுத்த தெரியாத ஜடம் அவள். இவளை குறை சொல்லி என்ன பயன்?
வீட்டு சாப்பாடு சரியில்லையென்றால், ஒட்டல் கேரியர் சாப்பாட்டை தானே வரவழைத்து சாப்பிட முடியும். மனைவியை வீட்டில் வைத்துக் கொண்டே, வேறு ஒருத்தியோடு கட்டில் சுகம் தேடுவது மனதுக்கு தப்பாக படுகிறது. ஆனால் சமூகத்தின் கண்கள் வழியாக பார்த்தால் தவறாக தெரியவில்லை. யாரும் செய்யாத குற்றத்தையா நான் செய்து விட்டேன்?
வெளியே இலைகள் சலசலக்கும் சத்தம் கேட்டது.
திரும்பி பால்கனிக்கு வெளியே பார்த்தார். கார்டன் வெட்டவெளியோரத்தில் க்ரோட்டன் செடிகளை கடந்து ஒரு கரிய உருவம் தனியாக அவுட்ஹவுஸ் பக்கமாய் வந்து கொண்டிருந்தது.
அப்போது இரவு மணி 11 என தன் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தின் மூலம் தெரிந்து கொண்டார்.
அது துரை அனுப்பிய அழகியாகத் தான் இருக்க வேண்டும். எந்த முன்அறிவிப்பின்றி சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள்.
அவர் மனத்தில் ஒரு இனம் புரியாத 'மன்மத' உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அது அடங்காமல் கிளர்ந்தது.
சப்தம் எதுவும் போட்டு தன் மனைவியை எழுப்பி விடாமல் பூனை நடை போட்டபடி பெட்ரூமை கடந்து சென்றார்.
துரித நேரத்தில் இரவு நேர உடுப்பில் மாறிக் கொண்டு, ஊற வைத்த பாதாம் பருப்புகளை வாயில் போட்டு மென்றபடி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான பெர்ஃபியூமை உடல் மணக்க அடித்து கொண்டு அவுட் ஹவுஸ் நோக்கி உற்சாகமாக விரைந்தார் ஆதி.
அந்த உருவம் தற்சமயம் அவுட் ஹவுஸ் பக்கமாய் ஒதுங்கி இருப்பதை கண்டதும், இன்னும் வேகமாக நடையை கூட்டினார்.
சற்று நெருங்கி வந்திருந்தாலும், அந்த உருவத்தை சரியாக அவரால் அடையாளம் காண முடியவில்லை. கார்டனிலுள்ள நியான் அலங்கார விளக்குகளின் மங்கலான வெளிச்சங்கள் கூட ஒரு காரணமாக இருக்க கூடும்.
உருவத்தின் பக்கமாய் வந்து தொண்டையை சொருமியடி பேச முனைந்தார்.
"யாரும்மா நீ...?"
எந்த பதிலுமில்லை.
உருவத்தின் உயரத்தை வைத்து அது துரை இல்லை என ஒருவாறு ஊகித்தார்.
"போன வாரம் வந்த ரஞ்சனியா? இல்ல சுமிதாவா? யாருமா நீ? கூச்சபடாம சொல்லுமா..." ஜொள்ளோழுக பேசினார்.
"நா.. நித்யா.."
அவளின் ஜில் குரலை கேட்டு உருகி விட்டார். நெருக்கத்தில் அவளின் முகத்தை பார்த்து வியந்து போனார். மொத்தத்தில் சேலையில் அவளது ஸ்ட்ரட்க்சரை பார்த்து அசந்து போயிருந்தார் ஆதி.
தாராளமாக பத்துக்கு எட்டு கொடுக்கலாம் இவளுக்கு. ப்ராவாயில்லயே இம்முறை இளசாக.. புதுமுகமாக.. தரமான.. ஐட்டத்தை தான் அனுப்பிச்சிருக்கான் நம்ம துரை.
"தொழிலுக்கு புதுசா..?"
"ல்ல.. இல்ல.. ஆமா" இரு பதில்களை அளித்தாள்.
"ப்ராவாயில்ல.. ரிலாக்ஸா இரும்மா.. பெட்ரூம்ல வெச்சு நானே கண்டுபிடிச்சுக்குறேன்.. ட்ரிங்க்ஸ் அடிப்பியா..?" பேசிக் கொண்டே அவள் தோள் மீது ஒரு கை வைத்து அழுத்தி அவுட் ஹவுஸ்குள் தள்ளி கொண்டு போனார்.
பத்து நிமிடங்கள் கழித்து அந்த அவுட்ஹவுஸின் மாடி அறை விளக்குகள் ஒளிர்ந்ததை மரத்தின் பின்னே வேறு ஒரு முகமூடி அணிந்த ஒரு கரிய உருவம் கவனித்து கொண்டிருந்தது.
உள்ளே நுழையலாமா என்று யாரிடமோ கைபேசியில் கேட்டது. வேண்டாம் என்று எதிர்முனையில் பதில் வரவே அங்கிருந்து நகராமல் இருந்தது.
சுமார் இருபது நிமிடங்களுக்கு பொறுமையாய் காத்திருந்தது. அதன் பிறகு கதவை நோக்கி நகர்ந்தது.
உள்ளே கதவு திறந்திருந்தது. தாப்பாள் போட மறந்து போயிருந்தார் ஆதி.
எதிர்ப்பட்ட ஹாலில் பாதி குடித்து வைத்த இரண்டு கண்ணாடி கிளாஸ்களில் பீர் மிச்சமிருந்தது. எங்கே போயிருப்பார் ஆதி? கிச்சன், கீழ் வரவேற்பு அறை எங்கேயும் அவரையும் அந்த பெண்ணையும் காணோம்.
மேலே போய் பார்க்கலாம் என்று மாடிப்படியில் ஏறியது அவ்வுருவம். படியின் ஆரம்பத்தில் கசங்கி கிடந்த கத்திரிப்பூ கலர் சேலை ஒன்று கிடந்தது.
எடுத்துப்பார்த்து மறுபடியும் தூர போட்டது.
படியில் கொஞ்சம் ஏறியதும் கைப்பிடியில் தொத்திக்கொண்டு சிவப்பான கலரில் ஜாக்கெட். புரிந்து கொண்டதை போல தலையை அசைத்தது அவ்வுருவம்.
ஜாக்கெட்டை தொட்டதும் அது கீழே விழுந்தது. கண்டுகொள்ளாமல் மாடிப்படி ஏறியது.
மாடிப்படி முடிவில் ஈரமாய் ஏதோ இருந்தது. பிசுபிசுப்பாக ஷூ காலில் வழுக்கியது. குனிந்து பார்க்க மனசு வரவில்லை அதற்கு.
என்ன நடக்கிறது இங்கே..? அந்த கேள்விக்கான விடையை தெரிந்து கொள்வது போல படுக்கையறை பக்கம் போனது.
கதவு மூடப்பட்டியிருந்தது.
கைப்பிடியை திருகியது. பலமாய் அழுத்தி பார்த்தது. ஊஹூம் கதவு திறக்கவேயில்லை. உள்ளே தாள் போட்டிருந்தது.
கதவின் ஒரத்தில்.. இது என்ன.. வீசி எறியப்பட்ட சிறுசான வெள்ளை உடை கண்ணில் தட்டுப்பட்டது.
ப்ராவா.. இது?
தொட்டு பார்க்காமலேயே அந்த உருவத்துக்கு புரிந்தது. இதுவும் அந்த பெண்ணுடையதுதான்.
சேலை, ஜாக்கெட், ப்ரா எல்லாமே அவளுடையது தான். ஏன் இப்படி எல்லாம் தாறுமாறாக கிடக்கிறது? அவளது உடைகளை எல்லாவற்றையும் அவுத்து தூரப்போட்டது ஆதியாகத்தான் இருக்கும்.
இப்போது உள்ளே மூம்முரமாக அந்த பெண்ணிடம் காமக் களியாட்டம் நடத்தி கொண்டிருப்பார்.
அந்த உருவம் யோசிப்பது போல கதவு வெளியில் தரையில் சரிந்து உட்கார்ந்தது. உள்ளே என்ன நடக்கிறது என காது கொடுத்து கேட்டது.
முதலில் கதவுக்குள்ளிருந்து 'தட்..தட்..' என்று சீரான ஒலிகள் கேட்டது.
ஆழ்ந்து கேட்க சீராக தட் தட் என்று ஏதோ இடிபடும் சத்தம் கேட்டது. நேரமாக நேரமாக அந்த சத்தங்கள் அதன் காதுக்கு பழகின.
யாரோ முக்கிக்கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணா இல்லை ஆதியா என்று இனம் பிரிக்க அந்த உருவத்தால் முடியவில்லை.
திடீரென்று ஒரு ‘ஹக்’ என்று பலமான திணறல் சத்தம். இது கண்டிப்பாக அந்த பெண்ணுடைய குரல்தான்.
சீராக முக்கலும் இப்போது 'தட் தட்' என்ற படுக்கை குலுக்கலும் சந்தேகமில்லாமல் கேட்டன. 'உம்..உம்..' அந்த பெண் முக்கிக்கொண்டிருந்தாள்.
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது போல தீர்மானமாக கதவில் சாய்ந்து கொண்டது.
உள்ளே அந்த பெண்ணின் சீரான முக்கல் முனகல்கள் இப்போது அந்த முகமூடி உருவத்தின் காதுக்கு பழகிப்போனது.
நடுநடுவில் ஏதேதோ புது சத்தங்களும்.. ஆதியின் பலமான முனகல்களும்.. அதன் பின் அந்த பெண்ணின் மெல்லிய பேச்சுக்களும் அதற்கு நன்றாக கேட்டன.
ரொம்ப நேரத்தில் படபடப்பு குறையாமல் மெதுவாக எழுந்து நின்று கதவை நோக்கி தயாராக காத்திருந்தது.
உள்ளே சத்தம் முற்றிலும் குறைந்து போகவே.. நிதானமாக கதவை தட்டியது.
"யாரது?" ஆதியின் குரலுக்கு பதிலளிக்காமல் அது அலட்சியப்படுத்தியது.
"யாருனு கேக்குறேன்ல்ல..?" அது திரும்பவும் பதில் கொடுக்கவில்லை.
"துரையா?.. கொஞ்சம் இரு கதவ திறக்குறேன்.."
இடுப்பில் ஒரு துண்டு மட்டும் அணிந்தபடி கதவை திறந்து பார்த்தார் ஆதி.
கட்டிலில் நடுவே அந்த இளம்பெண் போர்வைக்குள்ளே அரை மயக்கத்தில் அயர்ந்து படுத்திருந்தது அந்த உருவத்துக்கு தெரிந்தது.
"யாருடா நீ..?" அது துரை இல்லை என்று உணர்ந்து கொண்டார் ஆதி.
அந்த உருவம் பதிலேதும் அளிக்காமல் பளபளக்கும் உலோகத்தில் செய்த பொருள் ஒன்றை எடுத்து சாவகாசமாய் வெளியே நீட்டியது.
சற்றே உற்று பார்த்திருந்தால் அது துப்பாக்கி என அப்போதே அவருக்கு தெரிந்து போயிருக்கும். ஆனால் சற்று முன்னர் ஒரு பெண்ணை சல்லாபித்த மயக்கத்தில் இருந்தவருக்கு அதை கண்டுகொள்ள நேரமில்லை போலும்.
"கேக்குறது காதுல விழலையா.. எப்படிடா உள்ள வந்த? உனக்கு என்னடா இங்க வேலை..?"
அதற்கு பதில் சொல்லும் விதமாக இடைவிடாமல் அடுத்தடுத்து மூன்று குண்டுகளை சத்தமில்லாமல், சைலன்ஸர் துப்பாக்கியின் துணையுடன் ஆதியின் மேல் உமிழ்ந்தது.
கத்த கூட நேரமில்லாமல்... துப்பாக்கியால் சுட்ட அந்த உருவம் யார் என்பதை அறியாமல்... ரத்த வெள்ளத்தில் கதவு ஒரமாக சரிந்தார்.
அந்த உருவம் தூரத்தில் செல்வதை பார்த்து கொண்டே நிலைகுத்திய விழிகளோடு உயிரை விட்டிருந்தார் தொழிலதிபர் ஆதி என்கிற ஆதிராஜ்.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)