Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
விஜய் சேதுபதி படம் : அமலாபால் விலகல், மேகா ஆகாஷ் இணைந்தார்

[Image: NTLRG_20190625170606518713.jpg]

விஜய் சேதுபதியின் 33வது படத்தை சந்திரா ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்க, எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார். இந்தப்படம் குறித்து சமீபத்தில் அதகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.


இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதோடு, தடயற தாக்க, தடம் படங்களின் இயக்குநரான மகிழ்திருமேனி இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் அமலா பால் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஊட்டியில் தொடங்க உள்ளது.

இந்த சூழலில் அமலாபால் ஏன் மாற்றப்பட்டார்? முதலில் ஆர்வத்துடன் நடிக்க ஒப்புக்கொண்ட அமலாபால் அதன் பிறகு பேசிய சம்பளத்தைவிட கூடுதல் தொகை கேட்டதாகவும் சிலபல கண்டிஷன்களை அடுக்கியதாகவும், அதனால் தயாரிப்பாளர் அமலாபால் வேண்டாம் என கூறிவிட்டதாகவும் பட தரப்பில் சொல்லப்படுகிறது. 

அதேசமயம், கால்ஷீட் பிரச்னை காரணமாக அமலாபால் நடிக்கவில்லை, மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என அமலாபால் தரப்பில் கூறப்படுகிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 26-06-2019, 04:37 PM



Users browsing this thread: 6 Guest(s)