Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சந்திரபாபு நாயுடுவின் ரூ.8 கோடி மதிப்புள்ள வீட்டை இடிக்கும் பணி தொடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

[Image: buildijpg]சந்திரபாபு நாயுடுவின் வீட்டை இடிக்கும் பணி நடந்து வரும் காட்சி : படம் ஏஎன்ஐ

கிருஷ்ணா நதியின் கரைஓரத்தில் கட்டப்பட்டுள்ள தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ரூ.8 கோடி மதிப்புள்ள வீடு, பிரஜா வேதிகா எனும் கட்சியின் கட்டிடம் ஆகிவற்றை இடிக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கி நடந்து வருகிறது.
வீட்டை இடிப்பதை நிறுத்தக் கோரும் பொதுநலன் மனுவை நள்ளிரவில் விசாரித்த உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது
ஆந்திர முன்னாள் சந்திரபாபு நாயுடு அமராவதியில் உண்டவெளி பகுதியில் கிருஷ்ணா நதிக்கரையின் ஓரத்தில் பிரம்மாண்ட வீட்டையும் அதன் அருகே, ரூ.5 கோடி மதிப்பில் பிரஜா வேதிகா (மக்கள் குறைதீர்க்கும் அரங்கு) என்ற கட்டிடத்தை கடந்த 2017-ம் ஆண்டு கட்டினர். இதன் மதிப்பு ரூ. 8 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த கட்டிடமும், சந்திரபாபு நாயுடுவின் வீடும் அருகே அமைந்தவாறு அமைக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகளிடம் பேசுவதற்கும், சிறப்புக்கூட்டங்கள் நடத்துவதற்கும் பிரஜா வேதிகா இல்லம் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதிக்கரையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் அகற்றப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
[Image: naidujpg]
 
தேர்தலில் சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதிய சந்திரபாபு நாயுடு, தனது இல்லத்தையும், பிரஜா வேதிகா இல்லத்தையும் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால், கடந்த சனிக்கிழமை பிரஜா வேதிகா இல்லத்தை ஆந்திர மாநில அரசு கையகப்படுத்தியது. அந்த இல்லத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் எஸ்பிக்கல், அதிகாரிகளுடன் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையின் முடிவில், கிருஷ்ணா நதிக்கரையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களையும் இடிக்க உத்தரவிட்டார். மேலும், சந்திரபாபு நாயுடு வாழ்ந்துவரும் இல்லமும், பிரஜா வேதிகா இல்லமும் சட்டவிரோதமானது என்று ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று நள்ளிரவில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் இல்லம் இடிக்கும் பணி தொடங்கியது. கட்டிடத்தின் சுற்றுச்சுவர், சமையற்கூடம், சாப்பிடும் அறை, கழிவறை ஆகியவை இடிக்கப்பட்டன. இன்று காலை முதல் மீண்டும் இடிக்கும் பணி தொடங்கி போலீஸார் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.
[Image: demojpg]வீட்டை இடிக்கும் பணி நடந்து வரும் காட்சி: படம் ஏஎன்ஐ
 
தலைநகர் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் கூடுதல் ஆணையர் விஜய் கிருஷ்ணன் தலைமையில் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. உண்டவெளி பகுதியில் பதற்றமாக இருப்பதால், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையை கட்டிடத்தை தேவையின்றி  இடிப்பதால், மக்கள் பணம் வீணாகிறது எனக் கோரி சமூக ஆர்வலர் பி. சீனிவாச ராவ் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்து, கட்டிட இடிக்கும் பணியை நிறுத்தக் கோரினார். இந்த மனுவை அதிகாலை 2.30 மணிக்கு நீதிபதிகள் சீதாராம மூர்த்தி, ஜி.ஷியாம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால் கட்டிடத்தை இடிக்க தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
முன்னதாக சந்திரபாபு நாயுடு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 26-06-2019, 04:35 PM



Users browsing this thread: 91 Guest(s)