30-10-2024, 04:40 PM
(This post was last modified: 30-10-2024, 05:02 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
(30-10-2024, 01:56 AM)dubukh Wrote: இங்க பாருங்கப்பா... "நாங்கலாம் அப்டேட்டா போட்டு பதிச்சாலும், சொல்லிக்கிற மாதிரி கமெண்டே வர்றதில்ல" என்று சொல்லி விட்டு கதையை நிறுத்திய பலரை / கதைகளை இங்கே பார்க்க முடிகிறது. ஆனால் நம்ம நண்பா, அவர் கதைக்கு இவ்ளோ நல்லா கமெண்ட்ஸ் வந்தும் மொத்தமாக அப்டேட் வராது என சொல்லி இருப்பது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது
கதை கொடுப்பவரின் கமெண்ட் வரவில்லை என்று புலம்பவாவது முடியும். அதற்கு ஆறுதல் வார்த்தைகள் பல நூறும் இங்கே கிடைக்கும். ஆனால் தொடர்ந்து நல்ல கமெண்ட் போட்டும் (சும்மா சூப்பர், ஆஹா, அடுத்த அப்டேட் எப்போ போன்று அல்லாது), கதை இப்படி பாதியிலேயே நிற்கும் படி நடக்கிறதே, நாங்கள் எங்களின் உள்ளக்குமுறல்களை எங்கே சொல்ல? அதை யார் தான் கேட்பார்கள் நண்பா ?
முதலில் தொடர் அப்டேட் இராது, அவ்வப்போது வரும் எனும் போது கூட மனமார ஏற்றுக் கொண்டோம், ஆனால் இப்படி தொடரவே மாட்டேன் என்று சொன்னால் எப்படி நண்பா? ஆரம்பித்ததை முடித்து வைத்து விட்டாவது போகலாமே நண்பா?
நல்ல விமர்சனம் வரும் கதைகளை இப்படி பாதியிலேயே விட்டு சென்றால், என் போல விமர்சனம் செய்யும் ஒரு சிலருமே இனி "ஆஹா, சூப்பர். அடுத்த அப்டேட் எப்போ?" என்ற அளவில் மட்டும் கமெண்ட் போட்டால் போதும் என்று எங்கள் உள்ளம் குமுறுமா இல்லையா நண்பா?
தண்ணீரிலே மீன் அழுதால், அதன்கண்ணீரை தான், யார் அறிவார்?
இப்படி தான் உள்ளது உண்மையாக கமெண்ட் செய்பவர்களின் நிலை இன்று![]()
உங்கள் ஆதங்கம் புரிகிறது. கதையை முடிக்க முயற்சி செய்கிறேன்.