காவியாவின் அடுத்த பயணம்(completed)
வெளியே வந்து மீண்டும் ஒரு முறை தான் இனி பணி புரிய இருக்கும் நிறுவனத்தின் பெயர் பலகையை பார்த்து

இம்முறை அவளுக்கு அந்த பெயர் பலகை கொஞ்சம் பிடித்து இருந்தது. இந்த உணர்வு புரிய வேண்டும் என்றால்

எப்படி பெண் பார்க்கும் படலத்தின் போது ஒரு பெண்ணிற்கு முதல் முறை அவள் தனது புதிய துணையை பார்த்து

மனதில் ஒரு மதிப்பீடு இருக்க அதுவே சம்பந்தம் முடிந்து இவளுக்கு அவன் என்று உறுதி செய்தபின் அந்த

மதிப்பீடு பல மடங்கு உயர்ந்து விடுவது போல் காவியாவிற்கு இப்பொழுது அந்த நிறுவனத்தின் பெயர் மிகவும்

கவர்ந்தது.

ஒரு ஆட்டோ எடுத்து அடையாறு போக சொல்ல ஆட்டோ டிரைவர் கேட்ட தொகை அவளுக்கு மிகவும் அதிகமாக பட

டிரைவரிடம் எதற்கு இவ்வளவு தரனும் என்று கேட்க அவன் என்ன மேடம் இங்கே இருந்து அடையாறு 15 கிலோமீட்டர்

இருக்கு மேடம் என்று சொன்ன போது தான் அவளுக்கு தருண் கேட்ட கேள்விக்கு அர்த்தம் முழுமையாக புரிந்தது.

இறுதியாக ஒரு தொகைக்கு ஒத்துக்கொண்டு ஆட்டோவில் ஏற வெளியே பார்த்துக்கொண்டே தனது புது வேலை பற்றி

நினைத்து மகிழ்ந்தாள்.

நடுவே விஷால் அழைத்து இந்த விஷயத்தை சொல்ல அவனும் உண்மையான சந்தோஷத்தை வெளிப்படுத்த அவனை

மாலை கொஞ்சம் வர முடியுமா என்று காவியா கேட்க விஷால் அதை பற்றி மூன்று மணி அளவில் உறுதி செய்தவதாக

கூறினான். காவியா வீட்டிற்கு சென்று பல நாட்களுக்கு பிறகு அவளுக்கு பசி எடுக்க காவியா மதிய உணவு தயாரித்து பசியாறினாள்.

பிறகு அவள் தனது வார்ட்ரோபை பார்த்து இன்னும் சில உடைகள் தேவை என்று நினைக்க அவளுக்கு நினைவுக்கு வந்தது

வந்தனா தான் அவளை அழைத்து மாலை ஷாப்பிங் வர முடியுமா என்று கேட்க எப்போவும் போல் வந்தனா நிச்சயம் என்றாள்.

காவியா லேசான மனதுடன் அவள் ஐ பாடில் ஹெட் போன்ஸ் மாட்டி பாட்டு கேட்க ஆரம்பித்து அப்படியே சோபாவில் உறங்கி போனாள்

மூன்று மணி அளவில் விஷால் கால் பண்ணின போது தான் தூக்கம் கலைய அவள் எதிர் பார்த்தது போலவே விஷால்

அவனுக்கு வேலை இருப்பதாகவும் மாலை வர முடியாது என்று சொல்ல காவியா சரி என்று சொல்லி முடித்தாள்.

வந்தனாவை அழைத்து அவளை திநகர் பஸ் ஸ்டாண்டில் மாலை ஏழு மணிக்கு சந்திப்பதாக சொல்லி தனது முகத்தை கண்ணாடியில்

பார்க்க அது பொலிவிழந்து இருப்பதாக உணர்ந்து சரி இன்னமும் நேரம் இருப்பதால் அருகே இருந்த அழகு நிலையத்திற்கு செல்ல

ஆயத்தம் ஆனாள்.

சரியா ஏழு மணிக்கு அவள் தி நகரில் தான் சொன்ன இடம் அருகே செல்ல அங்கே அவளுக்கு முன்னமே வந்தனா காத்திருந்தாள். புது

பொலிவுடன் இருந்த காவியாவை பார்த்து ஒரு சிறிய விசில் அடித்து இப்போ தான் என் காவியா அழகு பதுமையாக தெரிகிறாள் என்று

பாராட்ட காவியா மனதில் பெருமை பட்டு வந்தனாவிடம் தான் அடுத்த நாள் சேர போகும் நிறுவனத்தை பற்றி சொல்லி அதற்கு தான்

அவள் ஷாபிங் என்று முடிக்க வந்தனா தட்ஸ் கிரேட் என்று சொல்லி ஆட்டோ எடுத்து அவர்கள் விரும்பிய சில கடைகளுக்கு சென்று

காவியாவிற்கு தேவையான பொருட்களை வாங்கி கிளம்பினர்.

ஆட்டோவில் ஏறின பிறகு வந்தனா என்ன பா எங்கே வேலை கிடைச்சு இருக்கு என்று வினவ காவியா தனது புது வேலை

பற்றி சொல்ல வந்தனாவிற்கு அங்கேயும் ஒருவனை தெரிந்து இருக்கு. காவியா வியந்தாள் எப்படி தான் இவள் இத்தனை ஆண்களை

சமாளிக்கறாள் என்று.

வந்தனாவிடம் அவள் நண்பனை பற்றி கேட்க வந்தனா அவள் கைபேசி எடுத்து அந்த நண்பனுக்கே கால் பண்ணி முதலில் கொஞ்சம் அவள்

பேசி பிறகு அவனிடம் "ஹே தீபக் உன் கலிக் ஒருவர் உன்னுடன் பேச விரும்பறா" என்று சொல்ல அவன் குழம்பி என் ஆபிசில் உனக்கு

என்னை தவிர வேறு யாரை தெரியும் என்று கேட்க வந்தனா ஒன்றும் சொல்லாமல் போனை காவியாவிடம் குடுத்து பேசு என்றாள்.

காவியா "ஹலோ தீபக் எப்படி இருக்கீங்க இன்னும் ஆபிஸ்ல் இருக்கீங்களா பேசலாமா" என்று கேட்க தீபக் மேலும் குழம்பி இது வரை தான்

இந்த குரலை கேட்டதே இல்லையே என்று நினைத்து "என்ன மேடம் உங்களுக்கு தெரியாதா நம்ப ஆபிஸ்ல் ஆபிஸ் நேரம் சரியாக ஆறு மணிக்கு

முடிந்து விடும் அதற்கு மேல் வேலை செய்ய யாருக்கும் இடம் இல்லை என்று சொல்லி கொண்டே அவன் மனசில் நிச்சயம் இந்த பெண் நம்

ஆபிஸ்ல் வேலை செய்யவில்லை என்று. மீண்டும் அவனே காவியாவிடம் மேடம் உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா என்று தன்மையாக கேட்க

காவியா தன்னை பற்றி சொல்ல அவன் ஒ அப்படியா வெல்கம் டு அவர் கம்பெனி என்று சொல்லி அப்போ திங்கட்கிழமை பார்க்கலாம் என்று முடித்தான்.

காவியா கைபேசியை வந்தனா கிட்டே குடுத்து ரொம்ப பொலைட்டா பேசறான் தீபக் என்று சொல்ல ஆமாம் ஆமாம் என்று வந்தனா சொன்ன விதம் ஒரு

நெக்கல் கலந்து இருப்பதை புரிந்து கொண்டாள் காவியா.

வந்தனாவை அவள் வீட்டில் இறக்கி விட்டு அவள் வீடு சென்று கதவை திறக்க அதில் விஷால் தனது பிஸ்னெஸ் கார்ட் வைத்திருப்பது பார்த்து வீட்டினுள்

சென்று அவனை அழைத்து என்ன ரொம்ப அவசரமா வந்து போனா போல இருக்கு என்று கேட்க விஷால்

ஆமாம் நீ கூடத்தான் என்னிடம் வெளியே போகுறாய் என்று சொல்லலே எனிவே இப்போ எங்கே இருக்கே என்றான்.

காவியா பதில் சொல்லி இப்போ நீ வறியா என்று வினவ அவன் இல்லை என்றான்.

காவியா சரி அப்புறம் பேசறேன் என்று முடித்தாள்.
பிறகு பல நாட்களுக்கு பிறகு இரவு உணவு எடுத்து நிமதியாக உறங்க சென்றாள். அடுத்த மூன்று நாட்கள் செல்ல காவியா ஞாயிறு அன்று

வந்தனாவிற்கு கால் பண்ணி அவளை வீடிற்கு வர முடியுமா என்று கேட்க வந்தனா நான்கு மணிக்கு வருவதாக சொல்ல காவியா வீட்டை சுத்தம்

செய்ய முடிவு செய்து அவள் வேலைக்காரியை அழைக்க மதியம் வரை அந்த வேலையில் நேரம் கடந்தது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 26-06-2019, 10:28 AM



Users browsing this thread: 5 Guest(s)