Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
விஷாலின் அப்பாவை ஏமாத்தி ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி ஓனர் கைது!

நடிகர் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டியிடம் ரூ.86 லட்சம் பண மோசடி செய்த கல்குவாரி உரிமையாளர் வடிவேலுவை போலீசார் கைது செய்துள்ளனர்

[Image: reddy-g-k.jpg]விஷாலின் அப்பாவை ஏமாத்தி ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி ஓனர் கைது!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவரது தந்தை ஜிகே ரெட்டி. இவர், சென்னை அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர், பிசாசு படத்தின் கன்னட ரீமேக்கான ராக்‌ஷஸி என்ற படத்தில் ராதாரவி கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் நேத்ரா என்ற படத்திலும் நடித்துள்ளார். பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார்
இவர், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: தனது குவாரியில் இருந்து கருங்கல், ஜல்லி ஆகியவற்றை தருவதாக கூறி மதுரையைச் சேர்ந்த கல்வாரி உரிமையாளர் வடிவேலு என்பவர் ரூ.86 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், அவர் குறிப்பிட்டபடி கருங்கல், ஜல்லியை கொடுக்காமலும், பணத்தையும் திருப்பி தராமலும் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வருகிறார் என்று கூறப்பட்டிருந்தது. 

ஜிகே ரெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் வடிவேலுவை அழைத்து முதலில் விசாரணை நடித்தியுள்ளனர். விசாரணையைத் தொடர்ந்து மோசடி வழக்கில் வடிவேலுவை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்ந்து வடிவேலுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் ரொம்பவே பிஸியாக இருக்கும் நிலையில், அப்பா கல்குவாரி உரிமையாளர் மீது புகார் கொடுத்திருப்பது கொஞ்சம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு வெளியான அயோக்யா படத்தைத் தொடர்ந்து விஷால் தனது 27ஆவது படத்தில் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கிறார். ஆனால், நடிகர் சங்க தேர்தலில் பிஸியாக இருந்ததால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 26-06-2019, 09:50 AM



Users browsing this thread: 2 Guest(s)