Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[Image: Ner-Konda-Paarvai-Trailer-Ajith-kumar-750x506.jpg]
'நேர் கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் ஆகலையாம்!
நடிகர் அஜித் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘நேர் கொண்ட பார்வை’.
2016-ம் ஆண்டில் இந்தியில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் தான் இது. இந்தியில் நடிகர் அமிதாப் பச்சனும், நடிகை டாப்ஸியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தற்போது பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். தமிழ் ரீமேக்கான ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கேரக்டரில் நடிக்கிறார்கள்.
Ner Konda Paarvai Trailer: ‘அப்படி எல்லாம் நடக்காது, நடக்கவும் கூடாது’! – நேர் கொண்ட பார்வை ட்ரைலர்!
இதனை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, நேர் கொண்ட பார்வை படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்தது.
இந்நிலையில் முன்னதாக, இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 10 நாட்கள் முன்பாக அதாவது ஆகஸ்ட் 1-ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம் படக்குழுவினர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 26-06-2019, 09:49 AM



Users browsing this thread: 3 Guest(s)