26-06-2019, 09:45 AM
[color=var(--title-color)]நடிகர் சங்கத் தேர்தலில் ஐசரி கணேஷ் என்னை அணுகினார்: நீதிபதி குற்றச்சாட்டு[/color]
[color=var(--title-color)]வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளி வைத்தால், தேர்தலையும் தள்ளிப் போட வசதியாக இருக்கும்[/color]
[color=var(--meta-color)]ஐசரி கே கணேஷ்[/color]
[color=var(--content-color)]கடந்த மூன்று வாரங்களாக சினிமா வட்டாரத்தின் பேசு பொருளாக இருந்தது தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல். கட்டட வேலைகளை செவ்வன செய்ததால் எதிர்ப்பின்றி வருவோம் என்றிருந்த பாண்டவர் அணிக்கு, ஷாக் கொடுத்தார்கள் உதயா, ஆர்.கே. சுரேஷ், `பிதாமகன்’ சங்கீதா. ஆம், இவர்களுக்கும் விஷாலுக்கும் இருந்த தனிப்பட்ட மனஸ்தாபத்தை இந்தத் தேர்தலில் காட்டி வென்றிடலாம் என நினைத்தார்கள். அதற்கு அனைவரும் மதிக்கத்தக்க தலைமையும் பணமும் வேண்டும் என்று நினைத்தவர்கள். சுவாமி சங்கரதாஸ் அணி ஒன்றை உருவாக்கி பாக்யராஜ் தலைவர் மற்றும் ஐசரி கே கணேஷ் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவார்கள் எனத் தீர்மானமானது. ஐசரிதான் எதிரணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்றவுடன் பாண்டவர் அணியிலிருந்து சுவாமி சங்கரதாஸ் அணிக்கு மாறினர்.[/color]
[color=var(--content-color)][/color]
[color=var(--content-color)]அதன்பின் பல விஷயங்களும், குற்றசாட்டுகள், நீதிமன்றத் தடைகள் எனக் கடைசி நிமிட பரபரப்புகள் பலவற்றையும் கடந்தே இந்தத் தேர்தல் நடந்துள்ளது. அப்படி தேர்தலிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு போடப் பட்ட வழக்கு அவசர வழக்காக தேர்தலுக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மாலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முழு போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காவல்துறைக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். தவிர, வழக்கின் போக்கில் தடை செய்ய முற்பட்ட ஐசரி கே கணேஷ் மற்றும் அனந்தராமன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் தானே முன்வந்து எடுக்கும் எனவும் கூறினார். இந்நிலையில் நீதிமன்றம் தாக்கல் செய்த ரிட் மனுவில் நடந்த சம்பவங்களை விவரித்திருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.[/color]
[color=var(--content-color)]அதிலிருந்து, ``தலைமை நீதிபதி அளித்த உத்தரவின் பேரில் எனது வீட்டில் வழக்கு எண் 16949 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு எனது இல்லத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக காலை 11.55 மணிக்கு நீதிமன்றப் பதிவாளர் எனக்கு போன் செய்தார். நிகழ்ச்சி நிமித்தமாக வேலூர் சென்றிருந்த நான் அதை வேகமாக முடித்து விட்டு வீடு திரும்பினேன். அப்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை நெருங்கும்போது மணி 4.20. எனக்கு நன்கு அறிமுகமான ஆனந்தராமன் என்பவர் போன் செய்தார். தொடர்ந்து, மெதுவாக நடிகர் சங்க வழக்கு குறித்து பேச ஆரம்பித்தார். அப்போது, ``இந்த வழக்கில் ஐசரி கே கணேஷ் சம்பந்தப்பட்டுள்ளார். நடிகர் சங்கத்தின் பல பிரச்னைகளுக்கு உதவி செய்துள்ளார் " எனவும் தெரிவித்தார்.
``வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளி வைத்தால், தேர்தலையும் தள்ளிப் போட வசதியாக இருக்கும்" எனவும் தெரிவித்தார். எந்தவொரு சம்பந்தமும் இல்லாமல் அவர் பேசியதையத்து அந்த போன் இணைப்பைத் துண்டித்து விட்டேன். நான் எனது இல்லத்தை அடையும் போது நேரம் 4.45 மணி. ஏற்கெனவே பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு என்பதால் எனது வீட்டின் முன் காவல்துறையும், பத்திரிகை ஆள்களும் இருந்தனர்.[/color]
[color=var(--content-color)]இரண்டாம் தளத்தில் இருக்கும் எனது வீட்டை அடைவதற்குள் ஆனந்தராமனை லிஃப்ட் அருகே பார்த்தேன். மீண்டும் ஐசரி பற்றியும் வழக்கை ஒத்தி வைப்பது குறித்து பேசினார். "
நடிகர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடும் ஒருவரே நீதிபதியை தவறான முறையில் அணுகுவது அதிர்ச்சியாக இருந்தது. நீதிமன்ற வழக்கின் போக்கில் குறுக்கிட்டதால் ஏன் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கக் கூடாது" எனக் கூறியுள்ளார்.[/color]
[color=var(--content-color)]இதையடுத்து, அனந்தன் மற்றும் ஐசரி கே கணேஷ் இருவரும் நான்கு வார காலத்துக்குள் இந்த வழக்கு சம்பந்தமாக ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தியுள்ளார்.
சங்கத் தேர்தலுக்கு எதிராகச் செயல்படுவது. இது நடிகர் சங்கத்தின் சட்ட விதிப்படி, சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் தண்டனை விதிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது[/color]

first 5 lakhs viewed thread tamil