26-06-2019, 09:40 AM
ஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி?
சென்னையில் செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட ராகேஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஸ்குருடிரைவர் மூலம் கொலை செய்வதே ராகேஷின் ஸ்டைல் என்கின்றனர் போலீஸார்.
சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக தனியாக நடந்துசெல்லும் பெண்களிடம் செயின்பறிப்புச் சம்பவங்கள் நடந்தன. கடந்த 2 தினங்களில் மட்டும் 9 பெண்களிடம் செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பெண்கள் பீதியடைந்துள்ளனர். செயின் பறிப்புச் சம்பவம்போல செல்போன் பறிப்புச் சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளன. செயின்பறிப்பு, செல்போன் பறிப்புச் சம்பவங்களைத் தடுக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
சென்னை கோட்டூர்புரம் ஏரிக்கரைப் பகுதியைச் சேர்ந்த செல்வியிடம் பைக்கில் ஹெல்மெட் அணிந்துவந்த கொள்ளையர்கள் 5 சவரன் செயினைப் பறித்தனர். கொள்ளையர்களுடன் செல்வி போராடியும் செயினைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தக் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.
அதை கோட்டூர்புரம் போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது பைக்கில் வந்த கொள்ளையர்களில் பின்னால் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட் அணியவில்லை. இதனால் அவரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அதைவைத்து செயின்பறிப்புக் கொள்ளையர்களை போலீஸார் அடையாளம் கண்டனர்.
இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் கூறுகையில், ``கோட்டூர்புரத்தில் நடந்த செயின் பறிப்புச் சம்பவத்தில் பயன்படுத்திய பைக், திருடப்பட்டது. இந்த பைக் மயிலாப்பூரில் கடந்த 22-ம் தேதி திருடிய கொள்ளையர்கள் அதன்மூலம் செயின்பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மூலக்கடையைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது கொலை வழக்குகள், கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. செயின் பறிப்புச் சம்பவத்தில் ராகேஷ், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்துள்ளார். இவர்தான் பெண்களின் கழுத்திலிருந்து செயினைப் பறித்துள்ளார். செயின் பறிப்பில் ராகேஷ் கிங் என்கின்றனர் அவரின் கூட்டாளிகள். செல்வியிடம் செயின் பறித்த சம்பவத்தில் பைக்கை ஓட்டியது ராகேஷின் கூட்டாளி சீனு. அவர் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடி வருகிறோம். ராகேஷைப் பிடித்து அவரிடமிருந்து செயின்களைப் பறிமுதல் செய்துள்ளோம். ஸ்குரு டிரைவர் மூலம் குத்திக் கொலை செய்வதுதான் ராகேஷின் ஸ்டைல்" என்றனர்.
ராகேஷ் கைது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனன், ``சிசிடிவி கேமரா காட்சி மூலம் கொள்ளையன் ராகேஷை கைது செய்துள்ளோம். இவர் மீது கொலை வழக்குகள், வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராகேஷின் கூட்டாளியைத் தேடிவருகிறோம். செயின் பறிப்புக்குப் பயன்படுத்திய திருட்டுப் பைக்கை பறிமுதல் செய்துள்ளோம். சம்பவத்தன்று காலையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் தொடங்கும் செயின் பறிப்புச் சம்பவம் கோட்டூர்புரம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், ஆதம்பாக்கம் திருமங்கலம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் இரவு வரை நடந்துள்ளது. ராகேஷின் கூட்டாளியையும் விரைவில் கைது செய்துவிடுவோம்" என்றார்.
தனிப்படை போலீஸார் கூறுகையில், ``சென்னையில் தொடர்ந்து செயின்பறிப்புச் சம்பவங்கள் நடந்ததும் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான் ராகேஷ் குறித்த தகவல் கிடைத்தது. அவரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து இன்று அதிகாலை கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரித்தபோது செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். செயின் பறிப்பில் கிடைத்த நகைகளை ராகேஷ் மற்றும் அவரின் கூட்டாளியும் பங்கு போட்டுள்ளனர். ராகேஷ்தான் நடந்து செல்லும் பெண்களிடம் தைரியமாக செயின் பறிப்பார். அப்போது பெண்கள் போராடினாலும் அவர்களை ராகேஷ் தாக்கிவிட்டு தப்பிச் செல்வதுண்டு. ராகேஷ், எங்களிடம் செயினைப் பறிப்பது எப்படி என்ற தகவலை விளக்கமாக தெரிவித்துள்ளார்" என்றனர்.
நடந்து செல்லும் பெண்களிடம் ராகேஷ் செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகளைப் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கிறது.
சென்னையில் செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட ராகேஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஸ்குருடிரைவர் மூலம் கொலை செய்வதே ராகேஷின் ஸ்டைல் என்கின்றனர் போலீஸார்.
![[Image: R_14583.jpg]](https://image.vikatan.com/news/2019/06/25/images/R_14583.jpg)
சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக தனியாக நடந்துசெல்லும் பெண்களிடம் செயின்பறிப்புச் சம்பவங்கள் நடந்தன. கடந்த 2 தினங்களில் மட்டும் 9 பெண்களிடம் செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பெண்கள் பீதியடைந்துள்ளனர். செயின் பறிப்புச் சம்பவம்போல செல்போன் பறிப்புச் சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளன. செயின்பறிப்பு, செல்போன் பறிப்புச் சம்பவங்களைத் தடுக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
சென்னை கோட்டூர்புரம் ஏரிக்கரைப் பகுதியைச் சேர்ந்த செல்வியிடம் பைக்கில் ஹெல்மெட் அணிந்துவந்த கொள்ளையர்கள் 5 சவரன் செயினைப் பறித்தனர். கொள்ளையர்களுடன் செல்வி போராடியும் செயினைக் காப்பாற்ற முடியவில்லை. இந்தக் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.
அதை கோட்டூர்புரம் போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது பைக்கில் வந்த கொள்ளையர்களில் பின்னால் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட் அணியவில்லை. இதனால் அவரின் முகம் தெளிவாகத் தெரிந்தது. அதைவைத்து செயின்பறிப்புக் கொள்ளையர்களை போலீஸார் அடையாளம் கண்டனர்.
![[Image: R1_14466.jpg]](https://image.vikatan.com/news/2019/06/25/images/R1_14466.jpg)
ராகேஷ் கைது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனன், ``சிசிடிவி கேமரா காட்சி மூலம் கொள்ளையன் ராகேஷை கைது செய்துள்ளோம். இவர் மீது கொலை வழக்குகள், வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராகேஷின் கூட்டாளியைத் தேடிவருகிறோம். செயின் பறிப்புக்குப் பயன்படுத்திய திருட்டுப் பைக்கை பறிமுதல் செய்துள்ளோம். சம்பவத்தன்று காலையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் தொடங்கும் செயின் பறிப்புச் சம்பவம் கோட்டூர்புரம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், ஆதம்பாக்கம் திருமங்கலம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் இரவு வரை நடந்துள்ளது. ராகேஷின் கூட்டாளியையும் விரைவில் கைது செய்துவிடுவோம்" என்றார்.
தனிப்படை போலீஸார் கூறுகையில், ``சென்னையில் தொடர்ந்து செயின்பறிப்புச் சம்பவங்கள் நடந்ததும் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான் ராகேஷ் குறித்த தகவல் கிடைத்தது. அவரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து இன்று அதிகாலை கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரித்தபோது செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். செயின் பறிப்பில் கிடைத்த நகைகளை ராகேஷ் மற்றும் அவரின் கூட்டாளியும் பங்கு போட்டுள்ளனர். ராகேஷ்தான் நடந்து செல்லும் பெண்களிடம் தைரியமாக செயின் பறிப்பார். அப்போது பெண்கள் போராடினாலும் அவர்களை ராகேஷ் தாக்கிவிட்டு தப்பிச் செல்வதுண்டு. ராகேஷ், எங்களிடம் செயினைப் பறிப்பது எப்படி என்ற தகவலை விளக்கமாக தெரிவித்துள்ளார்" என்றனர்.
நடந்து செல்லும் பெண்களிடம் ராகேஷ் செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகளைப் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கிறது.
first 5 lakhs viewed thread tamil