Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
32 ஏக்கர்; 54,000 சதுப்பு நில மரங்கள்! - புல்லட் ரயில் திட்டத்துக்காக அழிக்கப்படும் காடுகள்

பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான, மாகாராஷ்டிராவின் மும்பை முதல் குஜராத்தின் அகமதாபாத் வரையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. மொத்தம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டத்துக்கு ஜப்பான் அரசு 88,000 கோடி ரூபாய் இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையை மாகாராஷ்டிரா மற்றும் குஜராத் அரசுகள் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Image: mangroovs_2_09552.jpg]

கடந்த வருடம் மே மாதம் இந்தியா வந்திருந்த ஜப்பான் நாட்டு அதிபர் புல்லர் ரயில் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இன்னும் சில மாதங்களில் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் தற்போதே புல்லட் ரயில் திட்டத்துக்கான பணிகளை விரைவில் நடத்த அதிக மும்முரம் காட்டி வருகிறது மத்திய அரசு.


இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் இந்த விவகாரத்தை எழுப்பிய சிவசேனா கட்சியின் மனீஷா கயாந்தே, `புல்லட் ரயில் திட்டத்துக்காக 32 ஏக்கரில் உள்ள 54,000 சதுப்பு நில மரங்கள் அழிக்கப்படும் அபாயம் இருக்கிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்' எனக் குற்றம்சாட்டினார். 
[Image: mangroovs_3_09202.jpg]
அவரின் கருத்துக்கு பதில் அளித்துப் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் திவாகர் ராவ்தி, ``விரைவில் புல்லட் ரயில் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. ஆனால், அதற்காக அதிக மரங்கள் வெட்டப்படப்போவதில்லை. இதனால் வெள்ள அபாயமும் வரப்போவதில்லை. புல்லட் ரயில் திட்டத்துக்காக அனைத்துத் தூண்களும் மிகவும் உயரமாகக் கட்டப்படவுள்ளது. அதனால் சுற்றுச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இந்தத் திட்டத்துக்காக சில மரங்கள் வெட்டப்பட்டாலும், ஒரு மரத்துக்கு ஐந்து புதிய மரங்கள் வீதம் இன்னும் அதிகமான மரங்கள் நடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
[Image: mangroovs_09546.jpg]
இதையடுத்து, புல்லட் ரயிலால் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதாகவும் கூறிய காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் கேள்விக்குப் பதிலளித்த திவாகர், ``புல்லட் ரயில் திட்டம் மொத்தமாக 1,379 ஹெக்டேர் வரை கொண்டது. இதில் 724 ஹெக்டேர் குஜராத்திலும், 270 ஹெக்டேர் மகாராஷ்ட்ராவிலும் உள்ளது. அதிலும் 188 ஹெக்டேர் நிலங்கள் தனியாருக்குச் சொந்தமானது. அவர்களுக்கு உரிய தொகை வழங்கப்பட்டு அந்த நிலங்களை அரசு வாங்கிவிட்டது. தானே மாவட்டத்தில் உள்ள 84 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே விவசாயிகளுடையது. அதில் 2 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே விவசாயிகளின் விருப்பபடி வாங்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய தொகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 26-06-2019, 09:30 AM



Users browsing this thread: 102 Guest(s)