⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
பாகம் - 141

சோழர் காலம்

நந்தவனத்தின் மத்தியில் ஒரு தடாகம் இருந்தது.அதில் தாமரை பூக்கள் மலர்ந்து பூத்து குலுங்கி கொண்டு இருந்தன.அந்த தடாகத்தின் ஓரத்தில் அருள்மொழி அமர்ந்து அழகை ரசித்து கொண்டு இருக்க,அவள் கழுத்தில் மகிழம் பூ அணிந்து இருந்தாள்.அதன் வாசம் நாற்புறமும் பரவி வீசி கொண்டு இருந்தது.தடாகத்தில் கொக்குகள் ரெண்டு சேர்ந்து ஒய்யாரமாக நடந்து கொண்டு தன் அலகுகளால் செல்லமாக காதல் சண்டையிட்டு கொண்டு இருந்தது.அதை பார்த்த அருள்மொழியின் வேல்விழிகள் விரிந்தன.இதழில் அழகான குறும்நகை பிறந்தது.அவள் இதழ்கள் புன்னகைக்கும் பொழுது வேல் விழிகள் அதற்கேற்ப சேர்ந்து அதுவும் புன்னகை சிந்தியது.ஆனால் அது சற்று நேரம் தான்.உடனே அவள் விழிகள் பயத்தில் அதிர்ச்சி அடைந்தன.காரணம் சற்று தூரத்தில் அந்த இரண்டு கொக்குகளில் ஒன்றை வேட்டையாட ஒரு காட்டு பூனை பதுங்கி நேரம் பார்த்து பாய காத்து இருந்தது..ரெண்டு கொக்குகளும் மெய்மறந்து காதல் சண்டை போட்டு கொண்டு இருக்க,இது தான் தருணம் என காட்டு பூனை சீறி பாய்ந்தது.அருள்மொழி சற்றும்  தாமதிக்கவில்லை.பக்கத்தில் இருந்த குச்சியை எடுத்து கொக்கை நோக்கி எறிந்தாள்.பயந்த கொக்குகள் உடனே பறக்க,பாய்ந்து வந்த காட்டு பூனைக்கு ஏமாற்றமாகி போனது.அதன் கோபம் அருள்மொழி பக்கம் திரும்பியது.
அருள்மொழியின் தளிர்மேனி அதன் கண்களில் பட்டது.அவளை வேட்டையாடும் அளவுக்கு அதன் உருவம் இல்லை.ஆனால் தன் உணவை தட்டிபறித்த அவள் மேனியில் காயத்தை உண்டு பண்ண முடியும் என அதற்கு புரிந்தது..

"மியாவ்" என உருமிகொண்டு தன் கோரை பற்களை  காட்டி கொண்டு வாலை கோபத்தில் பெரிதாக்கி கொண்டு ஒரு அடி எடுத்து முன்னே வைத்தது. தன் மேல் பாய போகிறது என அருள்மொழி உணர்ந்தாள்.மீண்டும் ஒரு குச்சியை எடுத்து அதன் மேல் எறிந்தாள்.ஆனால் அதற்கு பெரிதாக காயம் உண்டாகவில்லை.ஆனால் பூனையின் கோபம் இன்னும் அதிகமாகி அவளை நோக்கி சீறி பாய கால் நகங்கள் வெளிபட்டன.அவள் கண்களில் பூனையின் உருவம் பெரிதாகி வருவதன் மூலம் பூனை அவளை நெருங்கி வந்து விட்டதை உணர முடிந்தது.அவள் கன்னத்தில் நகங்களை ஓங்கி பதிக்கும் நொடியில் இளங்கோ அருள்மொழியை தன் பக்கம் இழுத்தான்..பூனையின் நகங்கள் அவன் கழுத்தில் பதிந்தது..பாய்ந்த வேகத்தில் அவன் மீது மோதி கீழே விழுந்த பூனை திடீரென முளைத்த புது உருவத்தை பார்த்து மிரண்டது.அவளிடம் காட்டிய வீரத்தை அவனிடம் காட்டினால் அடுத்த நொடி சிவலோக பதவி தான் என்று புரிந்து கொண்டது.உடனே பக்கத்தில் இருந்த புதருக்குள் ஒடி மறைந்து கொண்டது.

அருள்மொழி கண் விழித்து பார்க்க,தான் அழகான வாலிபனின் கைகளில் இருப்பதை உணர்ந்தாள்.அவன் விரல்கள் அவளின் பஞ்சு போன்ற இலவம்பஞ்சு இடுப்பில் வீணை வாசித்து கொண்டு இருக்க அவள் மேனி சிலிர்த்தது.
அவன் கைகள் அவள் இடுப்பை சுற்றி வளைத்து பிடித்து அவளை கீழே விழாத வண்ணம் தாங்கி பிடித்து இருந்தது..அவள் முகம் கீழ் இருக்க,அவன் முகம் மேலே அவள் முகத்தை பார்த்து கொண்டு இருந்தது.அண்ணலும் நோக்கினான்,அவளும் நோக்கினாள்.இருவர் கண்கள் ஒன்றையொன்று சந்தித்தன..ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தனர்.இருவருக்கும் யுகம் யுகமாய் கடந்து போன உணர்வு.எவ்வளவு நேரம் பார்த்து கொண்டே இருந்தார்கள் தெரியவில்லை.பூனை கீறியதால் இளங்கோவின் கழுத்தில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் அவள் மூக்கின் மீது விழ,அவள் உடனே அவள் பதறி "அச்சோ இரத்தம்"என நிமிர்ந்து எழுந்தாள்.உடனே தன் மேலாடையால் அவன் இரத்தத்தை துடைக்க,இளங்கோ சிரித்தான்..

"வாளும், ஈட்டியும் பாய்ந்து காயங்கள் உண்டான மேனியில் சிறு பூனையின் காயம் என்னை என்ன செய்து விட போகிறது."என அவன் கூறினாலும் அவள் கண்களில் நீர் துளிர்த்தது..

அவள் கண்ணீரை பார்த்ததும்,"தேவி,தாங்கள் ஷத்ரிய வம்சத்தினர்..உங்களுக்கே நன்றாக தெரியும்..வீரனுக்கு இதை விட பெரிய பெரிய காயங்கள்,ஏன் மரணம் கூட என்று அவன் சொல்ல,உடனே அருள்மொழி அவன் வாயை கைவைத்து  பொத்தினாள்.

"மரணம் கூட ஏற்படும் என நான் அறிவேன்..இளவரசே..!ஆனால் உங்கள் மேனியில் ஏற்படும் காயம் என் மனதில் ஏனோ மிகுந்த வலியை உண்டாக்குகிறது."என அவள் சொல்லும் பொழுதே அவள் கண்களில் இன்னும் நீர் கசிந்தது..

தேனினும் இனிய அவள் குரலின் ஓசையை கேட்ட இளங்கோ"அப்பாடா உங்கள் குரல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று..இன்று தான் உங்கள் குரலை கேட்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.இதற்கு முன் வெறும் பார்வை...பார்வை மொழிகள் மட்டுமே.."என சிரித்தான்.

அருள்மொழியும் புன்முறுவலுடன்"என்ன செய்வது இளவரசே..!சிறு வயதில் என் அண்ணனிடம் சண்டை ஏற்படும் பொழுது எல்லாம்  என் மனம் கவர்ந்த சிறுவன் ஓடோடி வந்து என்னை காப்பாற்றுவான்.அவன் என்னை விட்டு ஒருநாளும் பிரிந்ததே கிடையாது..எங்கும் அவன் கை பிடித்தே நான் ஊர் சுற்றி இருக்கிறேன்.எந்த விளையாட்டு ஆனாலும் நான் அவனுடன் தான் விளையாடுவேன்.ஆனால்  எப்பொழுது நான் பெரிய மனுஷி ஆனேனோ, அன்றே அவன் என்னை விட்டு விலகி விட்டான்.என் அருகில் கூட வருவது கிடையாது.."என அருள்மொழி வருத்தமாக சொன்னாள்.

"உண்மை தான் தேவி.இந்த சமூகம் அவ்வாறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.உடன் பிறந்த தங்கையே ஆனாலும் குறிப்பிட்ட வயது வரை தான் தொட்டு பேச முடியும்.பெண்கள் பூப்பெய்திய உடனே  நம் சமூகம் ஆணை விலக சொல்கிறது..என்ன செய்ய.."

அருள்மொழி அவனை சீண்டும் நோக்கத்துடன்"அப்படியா..!இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன் தாங்கள் என் மேனியில் எங்கு கை வைத்து இருந்தீர்கள் தெரியுமா.."என கேட்டாள்.

"அதுவந்து..தேவி..!"என இளங்கோ சற்று ராகம் இழுத்து,"ஆபத்தில் இருந்து உங்களை காப்பாற்றவே உங்கள் கைபிடித்து இழுக்க வேண்டியதாகி விட்டது.அப்பொழுது தாங்கள் இந்த நிலமகள் மீது விழ இருந்தீர்கள்.நிலமகள் மீது விழுந்து எங்கே இந்த நிலாமகளுக்கு காயம் உண்டாகுமோ..என்ற அச்சத்தில் தான் உங்கள் கொடி இடையை தாங்கி பிடித்தேன்.."என்று இளங்கோ கூற அருள்மொழி வெட்கத்தில் சிவந்தாள்.

"உண்மையை சொல்லட்டுமா..தேவி..!தாங்கள் என் கையில் இருக்கும் பொழுது கனமே தெரியவில்லை.ஏதோ ஒரு பூ என் கையில் இருப்பது போல தான் இருந்தது."என்று அவன் சொல்ல நாணத்தில் அருள்மொழி தலை குனிந்தாள்.

அவன் கைபிடித்து உள்ளங்கையை அருள்மொழி ஆராய்ந்தாள்.

'என்ன பார்க்கறீங்க தேவி..!"

"எனக்கு ஒரு ஐயம் இளவரசே..! வாள் பிடித்து போர்களத்தில் சமர் செய்த தங்கள் விரல்கள் பார்க்க மிகவும் உறுதியாக இருக்கின்றன.ஆனால் நீங்கள் என் இடுப்பில் கைவைத்த பொழுது எதிரியிடம் சமர் செய்த விரல்களா இவை என்ற எண்ணம் தோன்றியது..உங்கள் விரல்கள் என் மேனியை தீண்டிய பொழுது மயிலிறகு வருடுவது போல அன்பை மட்டுமே உணர்ந்தேன்..அதனால் தான் உங்கள் விரல்களின் வலிமையை பரிசோதிக்கிறேன்..இந்த விரல்களா எதிரிகளின் தலைகளை பந்தாடியது.. "என அருள்மொழி ஆச்சரியமாக கேட்டாள்..

"தேவி..என்ன தான் சிங்கம் ,மற்ற மிருகங்களை காட்டுத்தனமாக வேட்டை ஆடினாலும், தன் குட்டியை வாயில் கவ்வும் பொழுது அன்பு மட்டுமே வெளிப்படும்..அது போல தான் இது

இளங்கோ அவள் கண்களை பாத்து,"தேவி...! சிறுவயதில் உங்கள் விரல் பிடித்து காவிரி கரையில் நடந்த அந்த இனிமையான நாட்கள் போல,மீண்டும் அந்த நாட்கள் கிடைக்குமா..! என என் மனம் ஏங்குகிறது.."என இளங்கோ ஏக்கத்துடன் சொல்ல..

அருள்மொழி வெட்கத்துடன்,"ம்..அதை சொல்ல தான் நான் உங்களை அழைத்தேன் இளவரசே..!நீங்கள் என்னை மணம் புரிந்தால் மீண்டும் அந்த பழைய நினைவுகள் உயிர்பெறும்.."என அவள் சொல்ல,அந்த வார்த்தைகளில் இளங்கோ மெய்மறந்தான்.

"தேவி....."என்று அவன் அழைக்க,அருள்மொழி அழுத்தமாக தன் இளமையான மாங்கனிகள் நசுங்க அவனை கட்டிக்கொண்டாள்..

கொஞ்சம் நேரம் கூட கடக்கவில்லை.."அருள்மொழி..!என்று ஆக்ரோஷமான குரல் கேட்டு பிரிந்தார்கள்.அந்த குரல் யாருடையது என உணர்ந்து இருவருமே பிரிந்தார்கள்..

[Image: images-4.jpg]

அங்கே ரோஹிணியை அப்படியே தனியாக விட்டு வந்தோம் அல்லவா..!அங்கே கொஞ்சம் செல்லலாம்..

தன்னை ஒரு ஆண்மகன் நிராகரித்தான் என்பதை ரோஹிணியால் ஏற்று கொள்ளவே முடியவில்லை..தன்னை மீண்டும் அருள்மொழி மீண்டும் தோற்கடித்து விட்டாள் என்ற கோபம் வேறு அவளை மதியிழக்க செய்தது..அங்கே திருக்குளம் அவளின் கண்ணில் பட,அதில் குதித்து மாய்த்து கொள்ள எண்ணி விறுவிறுவென சென்றாள்.. குளத்தில் குதிக்க முற்பட்ட ஒரு நொடி அவள் கரங்களை இன்னொரு கரம் பற்றியது.ரெண்டுமே ஒரே நிறத்தில் இருந்தன..முகத்தை மறைத்து இருந்த திரையை அவன் விலக்க,மாறுவேடத்தில் இருந்தாலும் அவன் தன் தம்பி என்பதை ரோஹிணி உணர்ந்து கொண்டாள்.

அவன் முகத்தில் அதிர்ச்சியுடன்"ரோஹிணி..!என்ன காரியம் செய்ய துணிந்தாய்..நீயும்,நானும் ஒரே கருவறையில் இருவரும் இருந்து,எனக்கு முன் ஒரேயொரு வினாடி பிறந்து என் தமையவள் ஆனவள் அல்லவா நீ.ஏன் இந்த விபரீத முடிவு..!"என சிங்கள இளவரசன் கேட்டான்...

அவனை பார்த்த உடன் ரோஹிணிக்கு,அடக்கி வைத்து இருந்த அழுகை பீறிட்டது..

"என்ன ஆயிற்று..சொல்லு..ரோஹிணி.."என அவள் தம்பி அவளை தேற்றினான்.

"நான் தோற்று விட்டேன்..ஹர்ஷா...!தோற்று விட்டேன்..என் அழகை கொண்டு இந்த உலகத்தில் உள்ள யாரையும் வசப்படுத்த முடியும் என்று இறுமாந்து இருந்தேன்.ஆனால் என்னை ஒருவன் எச்சில் இலை போல தூக்கி எறிந்து சென்று விட்டான்.."என்று அவள் அழுதாள்.

"யார் அது சொல் ரோஹிணி..அவனை இப்பொழுதே இழுத்து வந்து உன் காலில் விழ செய்கிறேன்.."என்று அவன் கூற ரோஹிணி விரக்தியாக சிரித்தாள்..

"போடா...முட்டாள்..!நானே அவன் காலில் விழுந்து தான் உன் உயிரை காப்பாற்றி இருக்கிறேன்.."என அவள் சொல்ல,

"இளங்கோவா..!என ஹர்ஷா கேட்டான்..

"ஆமாம்..அவன் இந்த நாட்டின் இளவரசி அருள்மொழி உடன் காதல்வயப்பட்டு இருக்கிறான்.அதனால் தான் என்னை உதாசீனப்படுத்துகிறான்.இந்த அவமானத்தை பொறுத்து கொண்டு நான் உயிர்வாழ வேண்டுமா சொல் என் சகோதரனே..!"

"அதற்காக தாங்கள் உயிர் துறக்க வேண்டியது இல்லை இளவரசி..!தங்களை அவமானப்படுத்தியவர்கள் தான் உயிர் துறக்க வேண்டும்.."என்ற  குரல் கேட்டு தான் ரோஹிணி தன் தம்பி பக்கம் நிற்பவனை அப்போது தான் பார்த்தாள்.கருத்த மேனி,திடகாத்திரமான உடம்பு,முறுக்கேறிய கைகள் கொண்ட உருவத்தை பார்த்தாள்.சிங்கத்திடம் சண்டை இடும் பொழுது அவன் முகத்தில் சிங்கம் ஒரு அறை விட இடது பக்க முகத்தில் இருந்த பாதி சதை விழுந்து விட்டது.அதனால் அவன் முகம் காயம் ஆறிய பின்னரும் வலது பக்கம் சதை அதிகமாகவும்,இடது பக்கம் சதை குறைவாகவும் ஒழுங்கற்று முகம் அஷ்ட கோணலாய் இருந்தது.அவன் தான் இடும்பன்காரி..

ஹர்ஷா அவளிடம்"ரோஹிணி..இவர் பெயர் இடும்பன்காரி..பாண்டிய தேசத்தை சேர்ந்தவர்..சோழர்களின் எதிரி..நமக்கு நண்பன்..நமக்கு உதவவே இங்கு வந்து உள்ளார்.."

ரோஹிணி அவன் பார்வையை ஆராய்ந்தாள்.அவன் பார்வை அவள் மேனி முழுக்க மேய்வதை பார்த்த உடனே அவனின் எண்ணத்தை புரிந்து கொண்டாள்.

இடும்பன்காரி அவளிடம்"உங்களை போன்ற ஒரு பேரழகியை துறந்த அந்த இளங்கோ முற்றிலும் மதி இழந்தவன் தான் இளவரசி' என இடும்பன்காரி கூற,ரோஹிணி அவன் உடல் வலிமையை கண்களினால் ஆராய்ந்தாள்.

ரோஹினி ஹர்ஷாவை பார்த்து,"ஹர்ஷா..! நான் சாப்பிட ஏதாவது பழம் நீ கொண்டு வா. நான் இவரிடம் கொஞ்சம் பேச வேண்டும்"என சொல்ல ஹர்ஷா அவ்விடம் அகன்றான்.

"என்ன இது வேஷம்..!"ரோஹிணி கேட்க,

இடும்பன்காரி அவளிடம்,"இந்த ஊருக்குள் எல்லை வீரர்களை தாண்டி உள்ளே நுழைய ஒரு வேஷம் தேவைப்பட்டது தேவமங்கையே..!சரியாக அந்நேரம் ஒரு நாடக கோஷ்டி உள்ளே நுழைய, நான் கம்சன் வேடம் பூண்டு ஊருக்குள் நுழைந்தேன்.."என்று சொன்னான்.

"உங்களால் எனக்கு உதவ முடியுமா..!"என ரோஹிணி கேட்டாள்..

"கட்டளை இடுங்கள் இளவரசி..நீங்கள் காலால் இடும் வேலையை தலையில் வைத்து செய்ய நான் காத்து இருக்கிறேன்..நீங்களும்,உங்கள் தம்பியும் அச்சு எடுத்தது போல ஒரே மாதிரி உள்ளீர்கள்.."என அவன் சொன்னான்.

ரோஹிணி அதற்கு"ஆமாம்,நாங்கள் இருவரும் ரெட்டை பிறவிகள்..நான் நேராக விசயத்திற்கு வருகிறேன்.உன்னால் இளங்கோவை கொல்ல முடியுமா.."என கேட்டாள்.

"கண்டிப்பா முடியும் இளவரசி..இளங்கோவை எதிர்த்து தனியாகவே என்னால் வீழ்த்த முடியும்..என் கைப்பிடியில் அவன் தலை சிக்கி கொண்டால் போதும் நசுக்கியே அவன் தலையை சாறு பிழிந்து அவனுக்கு கோர மரணத்தை பரிசு அளிப்பேன்.."என தன் இரு கையை இருப்பக்கம் உயர்த்தி காட்டினான்.அவனது பிரமாண்ட உருவத்தை பார்ப்பதற்கு இராவணன் கையாலய மலையை தூக்குவது போல இருந்தது.

"சரி..உன்னை நான் நம்புகிறேன்..அவனை கொன்று விட்டு என்னிடம் வா.உனக்கு விலையுயர்ந்த வைர ஆபரணங்களை பரிசு அளிக்கிறேன்"என ரோஹிணி சொல்ல,

இடும்பன்காரி சற்று தயக்கத்துடன்,"ஆனால் தேவி எனக்கு எந்த வைர ஆபரணமும் வேண்டாம்..!அதற்கு பதில் உலகத்திலேயே அரிய,யாருக்கும் கிடைக்காத ஒன்று தங்களிடத்தில் உள்ளது.அது தான் வேண்டும்..."என கேட்டான்.

"என்ன வேண்டும் கேள்..தருகிறேன்.."ரோஹிணி சொல்ல,

அவன் தம்பி வருவதை பார்த்த இடும்பன்காரி,"இளங்கோவை தீர்த்து கட்டுவதற்கான திட்டத்தை வகுத்து கொண்டு நாளை உங்களை சந்திக்கிறேன் இளவரசி..அப்போ நான் விரும்பியதை கேட்கிறேன்.."என்று சொல்லி முடிக்கவும் சிங்கள இளவரசன் அருகில் வந்து விட இவர்கள் பேச்சு நின்றது..

யாரை கண்டு பயந்து அருள்மொழி மற்றும் இளங்கோ பிரிந்தார்கள்.

இடும்பங்காரி ரோஹிணியிடம் கேட்க போவது என்ன?

நிகழ் கால பிரியங்காவை விட்டு வந்து நீண்ட நாட்களாகிறது.


அடுத்தடுத்த பாகங்களில்.
தொடரும்...

இந்த கதை 150 பாகங்களில் முடித்து விடலாம் என்று எண்ணி இருந்தேன்.ஆனால் சோழர் கால கதை விரிவாக எழுதுவதால் 150 பாகங்கள் கடந்து செல்லும் என நினைக்கிறேன்.

[Image: images-2.jpg]
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐ - by Geneliarasigan - 18-10-2024, 08:04 PM



Users browsing this thread: 138 Guest(s)