⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
பாகம் - 139

மன்னர் காலம்

படை வீரர்கள் சூழ்ந்து கொண்டு இளங்கோவை தூக்கி தோளில் வைத்து கொண்டாட,அருள்மொழியால் இளங்கோவை நெருங்க முடியவில்லை..வீரர்கள் யாரும் இல்லாவிட்டாலும் அவள் நாணத்தால் எப்படியும் அவனிடம் சென்று பேசி இருக்க போவது இல்லை. கண்களால் பேச போவதற்கு எத்தனை பேர் நடுவில் இருந்தால் என்ன..?இருவரும் மௌனமாக காதல் பாஷை பேசி கொண்டு இருக்க,தேவி என்று அழைக்கும் குரல் சங்காவிடம் இருந்து வந்தது..

"தேவி,நமக்கான வாகனம் வந்து விட்டது.வாருங்கள் அரண்மனை திரும்பலாம்" என்று சங்கா அழைக்க,அருள்மொழி அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே ஏக்கத்துடன் சென்றாள்.

[Image: Snapinsta-app-441027205-979883563075374-...n-1080.jpg]

அவள் ஏக்கத்தை இளங்கோவும் புரிந்து கொண்டான்.இதுவரை இளங்கோ ஒருமுறை கூட அருள்மொழியிடம் பேசியதே இல்லை.அவள் மேல் அவனுக்கும் காதல் தான்.செப்பு சிலை போல் இருக்கும் அவளை பார்த்து யாருக்கு தான் காதல் வராது.ஆனால் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் அவளை தவிர்த்து சென்று விடுவான்.காரணம் அவள் எட்டா உயரத்தில் இருக்கிறாள் என்று அவனுக்கு தெரிந்தது.அருள்மொழியை வேங்கி இளவரசன் நரேந்திரனுக்கு  திருமணம் செய்ய தான் ராஜேந்திர சோழனுக்கு விருப்பம் என்பது ஊரறிந்த விசயம்..அது இளங்கோவிற்கு மட்டும் தெரியாமல் இருக்காதா..!மேலும் இளங்கோ சிற்றரசரின்‌ மகன்.ஆனால் நரேந்திரனோ வேங்கி நாடு  என்னும் பேரரசின் இளவரசன்.அதை நினைத்து தன் நிலையை எண்ணி அவன் ஒதுங்கியே நின்றான்.இருவருக்கும் உள்ள காதலை அனு,மற்றும் லிகிதா கவனித்து விட்டனர்.தாங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என அவர்கள் புரிந்து கொண்டனர்.

அன்னப்பறவை வடிவில் இருந்த பிரமாண்டமான படகு நீரில் மிதந்து வர,அதில் அரண்மனை பெண்டிர்கள் ஏறினர். கொஞ்சம் கொஞ்சமாக இளங்கோ பார்வையில் இருந்து படகு மறைந்து போனது.

அதே நேரத்தில் அங்கிருந்து சில மைல்கள் தொலைவில் இருந்த பள்ளிப்படை என்ற சுடுகாட்டில் மூன்று பேர் சந்தித்து உரையாடி கொண்டு இருந்தனர்..

"வா இடும்பன்காரி கொண்டு வந்த நற்செய்தி என்ன..?சாம்பவன் என்பவன் கேட்டான்..

இடும்பன்காரி சற்று தடிமனாக இருந்தான். "கோபத்தில் என் கண்கள் சிவக்கிறது சாம்பவா..இந்திரன் நம் வம்சத்திற்கு அளித்த மணிமுடியை எடுத்து அந்த ராஜேந்திர சோழன் அவன் மகனுக்கு முடிசூட்ட போகிறனாம்.."

சாம்பவன் அதிர்ந்து,"என்ன..! சோழர்களிடம் அந்த மணிமுடி கிடைக்கக்கூடாது என்பதற்காக தானே நாம் அதை இலங்கை மன்னனிடம் கொடுத்து வைத்து இருந்தோம்..அதையும் மீறி எப்படி அவர்களிடம் மணிமுடி கிடைத்தது.."

இடும்பன்‌காரி கோபம் குறையாமல் "எப்படியோ இலங்கையில் இருந்து போராடி கொண்டு வந்து விட்டார்கள் நம் எதிரிகள்..போதாக்குறைக்கு இலங்கையை வென்று சிங்கள மன்னன் மகிந்தனையும்,அவர் குடும்பத்தாரையும் கைது செய்து அழைத்து வந்து உள்ளார்கள்.அப்படி அழைத்து வரும் பொழுது மகிந்தனின் மகன் அவர்களிடம் இருந்து தப்பி விட்டான். சடாசரன் எங்கே..?இன்னும் வரவில்லையா..!என இடும்பன்காரி கேட்க,

"வரும்நேரம் தான் சாம்பவா..!ஆமாம் சிங்கள இளவரசன் தப்பித்து விட்டான் என்று சொன்னாயே..அவன் இப்போது எங்கே இருக்கிறான்.."என சாம்பவன் இடும்பன்காரியிடம் கேட்டான்.

"என்னோட கணிப்பு சரியாக இருந்தால் அவன் இந்நேரம் நம் சடாசரனை‌ சந்தித்து இருக்க வேண்டும்..இளவரசனை அழைத்து கொண்டு எந்நேரமும் சடாசரன் இங்கே பிரவேசிக்க கூடும்.நாம் அவனை அதற்காக தானே அனுப்பினோம்.."என இடும்பன் காரி கூறினான்..

இடும்பன்காரி கருந்திருமனை‌ பார்த்து,"நீ சொல் கருந்திருமா..!நீ கொண்டு வந்த சேதி என்ன?

"இடும்பா,நீ சொன்னது போல அரண்மனையை நோட்டம் விட்டேன்.அதில் எனக்கு முக்கிய ரகசிய செய்தி கிடைத்தது.சோழர்கள் நாராயணபுரி ஏரியை பாசனத்திற்காக ஒன்றும் கட்டவில்லை."

"பின் எதற்காக கட்டி உள்ளார்கள்..கருந்திருமா.."

"சாம்பவா..!திடீரென ஒருநாள் சோழ வீரர்கள் என்னிடம் வந்து உனக்கு படகு ஒட்ட தெரியுமா?என்று கேட்டார்கள்..நானும் தெரியும் என்று சொன்னேன்.அவர்கள் என்னை ஏரியின் நடுவில் உள்ள நிலா மண்டபம் அழைத்து செல்ல சொன்னார்கள்..நானும் படகில் அமர்ந்து காத்திருக்க, சோழ நாட்டு இளவரசி தன் பரிவாரங்களுடன் வந்து ஏறினாள். நான் அவர்களை நிலா மண்டபம் அழைத்து சென்று விட்ட பிறகு என்னை அங்கிருந்த வேறு படகில் இருந்து கரை திரும்ப சொன்னார்கள்..எனக்கு ஒரு சந்தேகம்..நிலா மண்டபத்தில் இருந்து திரும்ப கரைக்கு அழைத்து செல்ல வேண்டாமா..?என்று கேட்டேன்.ஆனால் அவர்கள் வேண்டாம் என மறுதலித்து விட்டார்கள்..இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது என படகை வேகமாக கரையை நோக்கி செலுத்தி விட்டு,மீண்டும் நிலா மண்டபத்தை நோக்கி உயிரை பணயம் வைத்து நீந்தியே வந்தேன்..அப்போ தான் எனக்கு அந்த ரகசியம் தெரிந்தது.."

"என்ன ரகசியம்..!"என இருவரும் ஆவலுடன்‌ கேட்டனர்.

கருந்திருமன் அவர்களிடம்,"சாம்பவா..அந்த நிலா மண்டபத்தில் பரமசிவன்,பிரம்மனின் ஒரு தலையை கொய்வது போல  சிலையை வடித்து உள்ளனர்.அந்த பரமசிவன் சூலாயுதத்தை ஒரு வீரன் பிரம்மனின் தலையை நோக்கி குத்த கீழே ஒரு ரகசிய வழி உண்டாகியது.அதில் உள்ளே இறங்கி நடந்து சோழ நாட்டு இளவரசி அரண்மனை சென்றதை என் கண்ணால் பார்த்தேன்.."

"என்னது ஏரிக்குள் ரகசிய வழியா..!இது எப்படி சாத்தியம்..!"இடும்பன்காரி கேட்க,

"நான் என் ரெண்டு கண்ணால் பார்த்தேன்..இடும்பா.. நான் சொல்வது முற்றிலும் உண்மை.."என கருந்திருமன் கூறினான்.

சாம்பவன் அவனிடம்,"அவன் சொல்வது உண்மையாக தான் இருக்கும் இடும்பா,ஆயிரம் வருடங்களுக்கு முன்பே காவிரியில் கல்லணை கட்டியவர்கள் சோழர்கள்.இதோ இப்போ கூட நம்மை பிரமிக்க வைக்கும் நிழலே தரையில் படாமல் பெரிய கோவிலை தஞ்சையில் கச்சிதமாக கட்டி உள்ளார்கள்..அவர்களிடம் சிறந்த கட்டிட கலை அறிவு உள்ளது..நாம் அரண்மனைக்குள் சென்று அவர்களை கொல்ல சிறந்த வழி ஒன்றை கண்டுபிடித்து கொண்டு வந்து உள்ளாய் கருந்திருமா..உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.நாம் பட்டாபிஷேகம் செய்யும் முன்னிரவு அந்த அரண்மனைக்குள் பிரவேசிக்க வேண்டும்.."

"ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கு சாம்பவா..அந்த ஏரியில் நாம் நீந்தி செல்ல முடியாது..நானே மரணத்தின் பிடியில் இருந்து மயிரிழையில் தப்பி வந்து உள்ளேன்.."

"நீ என்ன சொல்கிறாய் கருந்திருமா..சொல்வதை புரியும்படி சொல்."

"ஆம்..இடும்பா..!ஏரியில் முதலைகள் உள்ளன..!என் நீச்சலின் வேகம் உனக்கே தெரியும்.அவ்வளவு வேகத்தில் சென்றே ஒரு முதலை என்னை துரத்த ஆரம்பித்து விட்டது..அதன் வாயில் சிக்கும் நேரம் அங்கே இருந்த பாறையில் தாவி அமர்ந்து இரவு முழுக்க அங்கேயே கழித்தேன்.விடிந்த பிறகு மிகவும் கவனமாக நீந்தி வந்து கரை சேர்ந்தேன்.

"அப்போ அங்கே எப்படி போவது..!என்று இடும்பன் கேட்க,.

"இரவில் தான் அங்கு போக முடியும்.அதுவும் படகின் வழியே தான் அங்கே செல்ல முடியும்.."

அப்பொழுது காலடி சத்தம் கேட்க,உடனே மூன்று பேரும் தனித்தனியாக பிரிந்து சடசடவென அருகில் இருந்த மரங்களில் ஏறி,இலைகளுக்கு நடுவே தங்களை மறைத்து கொண்டனர்.

வந்திருந்த இருவரில் தங்களுக்கே உரிய சங்கேத மொழியில் கோட்டான் கூவுவது போல கூவிய உடன் மறைந்து இருந்த மூவரும் நிம்மதி பெருமூச்சு விட்டு கீழே குதித்தனர்.

"வா சடாசரா..!உன் வரவை தான் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தோம்.ஏன் இந்த தாமதம்"என்று கேட்ட  இடும்பன்காரி பக்கத்தில் ராஜ உடையுடன் மிடுக்கொடு இருந்தவனை பார்த்த உடன் இலங்கை இளவரசன் என்று புரிந்து கொண்டான்..

சடாசரன் அவர்களிடம்,"எங்கு நோக்கிலும் நம் பகைவர்கள் நிறைந்து உள்ளனர் இடும்பா..அவர்கள் கண்ணில்  மண்ணை தூவிவிட்டு சிங்கள இளவரசனை இங்கு அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி‌ விட்டது.."

இலங்கை இளவரசன் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு இருக்க,அதை பார்த்த இடும்பன்"என்ன இளவரசே..!சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள்.."என்று கேட்டான்.

"இது என்ன இடம்"இலங்கை இளவரசன் கேட்க..

"இது நம் பகைவனின் பள்ளிப்படை வீடு.அதாவது சோழர்களுக்கும், பல்லவர்களுக்கும் போர் புரிந்த இடம்..இங்கு தான் நம் பகைவனின் படைவீரர்கள் புதைக்கப்பட்டு உள்ளனர்."

"இங்கே மனிதர்கள் யாரும் இல்லையா"இலங்கை இளவரசன் கேட்க

"இங்கு ஆந்தைகளும்,நரிகளையும் ,நம்மை தவிர வேறு யாரும் இங்கு வருவது இல்லை."

"ஓ பகைவனின் படைவீட்டில் இருந்தே பகைவனை அழிக்கும் திட்டமா.."என்று இலங்கை இளவரசன் சிரித்தான்.ஆனால் சிறிது நேரத்திலேயே அவன் முகம் வாடி போனது..

"ஏன் இளவரசே தங்கள் முகம் வாடி விட்டது.."

"எனக்கு இங்கே ஒரு எதிரி இருக்கிறான்.அவனை நான் அழிக்க வேண்டும்.."என அவன் கூறும் பொழுதே அவன் கண்கள் சிவந்தது.

"யார் அது இளவரசே..?"கருந்திருமன் கேட்டான்.

"கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ தான்."என சொல்லி கொண்டு இலங்கை இளவரசன் பற்களை நறநறவென கடித்தான்."ராஜ ராஜ சோழன் காலத்தில் கூட எங்களை  சோழர்கள் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை.எங்கள் கோட்டையை கைபற்றி விடுவார்கள்.ஆனால் இலங்கையில் உள்ள எங்களுக்கு மட்டுமே பரிச்சயமான அடர்த்தியான காடுகளில் நாங்கள் மறைந்து இருந்து சரியான சமயம் பார்த்து மீண்டும் எங்கள் கோட்டையை கைப்பற்றுவது தான் வழக்கமா இருந்தது.ஆனால் இந்த இளங்கோ நாங்கள் காட்டில் மறைந்து இருந்த இடத்தையும் கண்டு பிடித்து வெறும் சில வீரர்களை மட்டுமே வைத்து எங்கள் பெரும்படையை அங்கே நிர்மூலமாக்கி விட்டான்.நாங்கள் காட்டில் மறைத்து வைத்து இருந்த உங்கள் மணிமுடியையும் கைப்பற்றி விட்டான்.அவனோடு நேருக்கு நேர் சண்டையிட்ட நான் அவனால் தோற்கடிக்கப்பட்டேன்.என்னை அவன் கொல்ல முயன்ற பொழுது என் தமக்கை ரோகிணி அவன் காலில் விழுந்து காப்பாற்றியது எனக்கு பெருத்த அவமானமாகி போய் விட்டது.அவனை நான் கொல்ல வேண்டும்.ஆனால் நேருக்கு நேர் அவனை போரிட்டு வெல்லும் சக்தி என்னிடம் கிடையாது.அவனை ஏதாவது குறுக்கு வழியில் தான் வெல்ல வேண்டும்."

"அதற்கான சந்தர்ப்பம் வந்து விட்டது இளவரசே..!பட்டாபிஷேகம் அன்று உள்ளிருந்தும் நாம் நம் வேட்டையை தொடுக்கும் அதே நேரம்,வெளியில் இருந்து ராஜேந்திர சோழனிடம் தோற்ற கங்க நாட்டு அரசனும்,ராஜகூட அரசர்களும் சேர்ந்து வெளியில் இருந்து போர் தொடுக்க போகிறார்கள்..இம்முறை நம் பகைவர்களை வேரோடு அழிக்க போகிறோம்.."என இடும்பன்காரி கடகடவென சிரித்தான்.அவன் போட்ட சத்தத்தை கேட்டு அமைதியாக இருந்த அந்த இடத்தையே நடுநடுங்க வைத்தது.நரிகள் சிதறி ஓடின.பறவைகள் பயந்து பறக்கும் சத்தம் கேட்டது.

"இளவரசே..!நீங்கள் தப்பி வரும் பொழுது உங்கள் குடும்பத்தாரையும் அழைத்து வந்து  இருக்கலாமே.."

"இல்லை,அவர்கள் சோழ நாட்டு அரண்மனையில் இருப்பது தான் உச்சிதம்..எதிரிகளின் பலவீனங்களை அறிந்து கொள்ள அவர்கள் அருகில் இருப்பது தான் சரியானது..
மேலும் என் தமக்கை ரோஹிணி அங்கே இளவரசன் இளங்கோவை காதல் வலையில் வீழ்த்த காத்து இருக்கிறாள்.

இடும்பன்காரி நகைத்தான்."ஒரு இளவரசனை மயக்கும் அளவிற்கு உங்கள் தமக்கை அவ்வளவு பெரிய அழகியோ...!என இடும்பன் கேட்க,

"ஆமாம்"என சிங்கள இளவரசனான ரோஹன் வாளின் உறையில் சுருட்டி வைக்கப்பட்டு இருந்த ஓவியத்தை எடுத்தான்.அதை பார்த்த இடும்பன் கண்கள் அகல விரிந்தன..

"ஆகா..!என்ன ஒரு பேரழகி...இவளை அணு அணுவாக ரசித்து ருசிக்க வேண்டுமே..என இடும்பன்காரியின் கருத்த தோள்கள் துடித்தது.


Views இப்போ bad என்ற நிலையில் Worst என்ற நிலைக்கு சென்று கொண்டு இருக்கு.என்ன காரணம் என்று புரியல.இன்னும் கொஞ்சம் views குறைந்தால் அடுத்து zero தான்.பிறகு எழுதுவதன் அர்த்தமே இல்ல.

             தொடரும்

[Image: images-1.jpg]
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐ - by Geneliarasigan - 13-10-2024, 07:36 PM



Users browsing this thread: 126 Guest(s)