12-10-2024, 08:06 PM
(10-10-2024, 09:58 AM)snegithan Wrote: அன்பு monor அவர்களுக்கு வணக்கம்,தலைப்பை மாற்றுவது மிக எளிது.இந்த திரியின் உங்கள் முதல் பதிவில் சென்று edit கொடுத்தால் அதில் மேலே தலைப்பை மாற்றி save செய்தால் போதும் . நான் சொன்ன இந்த தகவலை எதிர்காலத்தில் எப்பொழுதாவது உபயோகித்து கொள்ளுங்கள்
ஆனால் இந்த கதையின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இப்போ இல்லை.ஏனெனில் என்னோட நினைவோ ஒரு பறவை கதையின் பல பாகங்களை அழித்து விட்டேன். காரணம் இன்னொரு நபர் என் கதையை அப்படியே copy and paste செய்து வேறு தளத்தில் பதிவிட்டு வருமானம் பார்த்து கொண்டு இருக்கிறார்.அது கூட பரவாயில்லை என்று விட்டு இருப்பேன்.ஆனால் அந்த கதைக்கு வரும் பாராட்டுக்களில் ஏதோ தானே எழுதியது போல பதில் அளித்து கொண்டு இருந்தார்.குறைந்தபட்சம் எழுதிய எழுத்தாளருக்கு கிரெடிட் கொடுக்கவில்லை.கஷ்டபட்டு ஒவ்வொரு பாகம் எழுத பல மணிநேரங்கள் செலவிட்டது நான்.ஆனால் அதன் பெருமை மட்டும் அவர் எடுத்து கொள்கிறார் என்ற கோபம்.அதனால் delete செய்து விட்டேன்..நீங்கள் இப்போ இந்த தலைப்பையே தொடரலாம் இது என்னோட விருப்பம்.மேலும் அவர் என் கதையை மட்டுமல்ல இன்னும் பல கதைகளையும் தலைப்பை மட்டும் மாற்றி கதையை அப்படியே copy and paste செய்கிறார்.இப்போ நிஷா உங்களில் ஒருத்தி என்பதை உங்களில் ஒருத்தி எனவும் ,என்னோட நினைவோ ஒரு பறவை கதையை காதல் சுகமானது என்ற தலைப்பில் எழுதி கொண்டு உள்ளார்.ஆனால் உள்ளே இருக்கும் கதை ஒரு எழுத்து கூட மாறவில்லை..
அதில் உங்கள் கதையும் இருக்கக்கூடும்.
தங்களின் பதிலுக்கு நன்றி நண்பா.
உங்கல் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனால், நான் வாசகர்கள் படித்து இன்புற வேண்டும் என்பதற்காகவே கதைகளைப் படைக்கிறேன். பெரும்பாலான எனது கதைகள் என் சொந்தக் கற்பனையில் உறுவானது. சில கதைகள், எனக்கு பிடித்திருந்ததால் என் ஸ்டைலில் என் கற்பனையையும் சேர்த்து உறுவாக்கி இருப்பேன்.
என் கதையை மற்றவர்கள் பயன்படுத்தட்டும். படிக்கட்டும். படித்து இன்புறட்டும். ஆனால், வருமானத்துக்காக அடுத்தவர் உழைப்பை சும்மா எடுத்துக்கொள்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.