12-10-2024, 02:03 AM
என்னுடைய இந்த கதையை நான் எழுத துவங்கி இரண்டு வருடங்களுக்கு மேல் கடந்து விட்டது. ஆரம்பத்தில் எதோ நாமும் ஒரு கதையை எழுதுவோம் என்று ஆரம்பித்த கதைக்கு எடுத்தவுடனே பெரிய வரவேற்பெல்லாம் குவிந்து விடவில்லை. நிறைய பேர் நெகடிவாக தான் கமெண்ட் செய்தனர். ஆனால் நாளாக ஆக என் கதை நல்ல வரவேற்பை பெற்றது. இன்று 15,00,000 வ்யூஸை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதே அதற்கு சாட்சி.
இப்படி ஒரு ஆதரவை வழங்கிய வாசகர்களாகிய உங்களுக்கு நான் மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
அதே சமயம் ஏற்கெனவே பலமுறை கெஞ்சியே கேட்டு பதிவிட்டிருந்தாலும் மீண்டும் மீண்டும் என்னுடைய மட்டுமல்ல எழுத்தாளர்கள் பலரின் மனக்குறையை இங்கே சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது.
இன்று இந்த கதையின் பகுதியை பதிவு செய்ய மிகவும் சிரமமாக இருந்தது. தளம் சரியாக வேலை செய்யவில்லை. ஒரு பதிவை பலமுறை திரும்ப திரும்ப செய்த பின் தான் பதிவு செய்ய முடிந்தது. இன்றைய பதிவுகளை முழுமையாக பதிய மட்டும் நான் இரண்டு மணி நேரம் போராடியிருக்கிறேன்.
காமக் கதை எழுதுவது, அதுவும் வாசகர்கள் ரசிக்கும் படி எழுதுவது ஒன்றும் எளிதான விசயமில்லை. என்னுடைய இந்த கதை இன்று நான் பதிவு செய்துள்ள வரை வேர்ட் டாக்குமெண்டில் ஏ4 சீட்டில் ஆயிரம் பக்கங்கள் வருகிறது. இத்தனை நீளமான கதையை எழுத எவ்வளவு கஷ்டப்பட்டு டைப் செய்ய வேண்டும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இப்படி சிரமப்பட்டு எழுதும் கதைகளுக்கு எந்த பணமும் எங்களுக்கு கிடைக்காது. முழுக்க முழுக்க எங்களுடைய ஆசைகளுக்காகவும் உங்களுடைய சந்தோஷத்திற்காகவும் மட்டும் தான் கதை எழுதுகிறோம்.
நாங்கள் வாசகர்களாகிய உங்களிடம் கெஞ்சி கேட்பது ஒன்றே ஒன்று தான். தமிழில் டைப் செய்வது சிரமமாக இருப்பதால் கமெண்ட் கூட செய்ய வேண்டாம். கதையின் ஒவ்வொரு பதிவுக்கும் குறைந்த பட்சம் அந்த லைக் பட்டனையாவது அழுத்தினால் அதிலாவது நாங்கள் சந்தோஷம் அடைவோம்.
லாகின் செய்யாமல் கெஸ்டாக படிப்பவர்கள் தயவு செய்து யூசர் ஐடி க்ரியேட் செய்து படிக்கும் படி திரும்பவும் கேட்டுக் கொள்கிறேன். அது ஒன்றும் சிரமமான விசயமும் இல்லை, ஆபத்தான விசயமும் இல்லை.
உங்களுடைய ப்ரவுசிங் ஹிஸ்டரிக்காக பயப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் லாகின் செய்யாமல் படித்தாலும் ப்ரவுசிங் ஹிஸ்டரியில் நீங்கள் கதை படித்தது தெரியுமே? அதனால் பயப்படாமல் யூசர் ஐடி க்ரியேட் பண்ணி படியுங்கள். கதைகளுக்கு ஆதரவு கொடுங்கள். எழுத்தாளர்களை ஊக்குவியுங்கள்.
எந்த ரியாக்சனும், லைக்கும் இல்லாமல் கடனே என்று கதை எழுதி பதிவு செய்வது சில சமயம் விரக்தியாக இருக்கிறது. சில சமயம் என் கதைக்கு ஆதரவும் லைக்கும் கமெண்ட்டும் செய்த வாசகர்களுக்கு மட்டும் கதையை மெயிலாக அனுப்பி விடலாமா என்று கூட தோன்றுகிறது.
இந்த தளமும் பல சமயங்களில் சரியாக ஒத்துழைப்பதில்லை. ஹேங்க் ஆகிறது. ஒருவேளை தள நிர்வாகியும் கூட வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகாத காரணத்தால் தளத்தை நிர்வகிப்பதில் ஆர்வம் இல்லாத நிலைக்கு வந்து விட்டாரோ என்று கூட தோன்றுகிறது.
நீங்கள் சந்தோஷமாக இருக்க நாங்கள் மட்டும் கதை எழுதிக் கொண்டிருந்தால் போதாது. நீங்களும் எங்களை ஆதரிக்க வேண்டும்.
தவறான வார்த்தைகள் எதாவது இருந்தால் மன்னித்து விடுங்கள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.