11-10-2024, 09:34 AM
(10-10-2024, 08:59 PM)snegithan Wrote: பாகம் - 138
மன்னர் காலம்
பொங்கி பெருகி ஒடும் காவிரி கரையில் லிகிதா மற்றும் அனுவின் ஆன்மா பறந்து விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தின..ஆனால் அதன் இயற்கை அழகை ரசிக்க முடிந்ததே தவிர,அதன் குளிர்ச்சியை உணரமுடியவில்லை..அதை உணர பஞ்சபூத கலவையான உடல் தேவை என்று அவர்களுக்கு தெரிந்தது.வயல் வெளிகளில் ஓரம் அங்கங்கே நெல் குவியல்கள் மலை போல குவித்து வைக்கப்பட்டு இருந்தன..யானைகளை கட்டி நெல்லை போர் அடித்து கொண்டு இருந்தார்கள்.. சோழ நாடு சோறு உடைத்து என்ற கூற்று முழுக்க முழுக்க உண்மை என்று அவர்களுக்கு புரிந்தது.ஆனால் அப்படி இருந்த சோழ நாடு இப்போ இருக்கும் நிலைமையை ஒப்பிட்டு பார்த்து உள்ளுக்குள்ளே அவர்களுக்குள் ஏக்கமும் எட்டி பார்த்தது..
அப்போ நம் முன்னோர்கள் சொன்னது எல்லாம் நிஜம் தான் என்று உணர்ந்தார்கள்.ஊருக்கு நான்கைந்து மைதானங்கள் கட்டி வைக்கப்பட்டு அதில் பல வாலிப இளைஞர்கள் வேல் எறிதல், வாள் பயிற்சி,மல்யுத்தம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
வயதில் சின்ன பெண்கள் தெருக்களில் ஒருபக்கம் பல்லாங்குழி ஆடி கொண்டும்,நொண்டி ஆடுதல்,இன்னும் பல கேளிக்கைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்..வயதுக்கு வந்த பெண்கள் தங்களுக்கு உரிய கட்டிளங்காளைகளை தேர்வு செய்து பார்வையால் வசியம் செய்து கொண்டு இருந்தனர்.
எல்லா ஆண்மகன்களுமே பார்ப்பதற்கு நன்கு திடகாத்திரமாக இருந்தனர்..இப்போ இருப்பது போல வயிற்றில் தொந்தி,உடல் பருமன்,தலை வழுக்கை இது போன்று எதுவுமே காணப்படவில்லை..
அறுபது வயது கிழவன் கூட மிக திடகாத்திரமாக சர்வ சாதாரணமாக மிக எடையுள்ள பொருட்களை தூக்கி சென்று கொண்டு இருந்தான்..
"இதில் எங்கேடி இளங்கோவை கண்டுபிடிப்பது" என அனு புலம்பினாள்..
"ஏதோ கொடும்பாளூர் இளவரசன் என்று சொன்னாங்க அனு,இளவரசனை எளிதாக கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்தால் இங்கே அனைவரும் ராஜ குமாரர்கள் போல தெரியுதே..நாம் வந்த காரியம் எளிதான காரியம் என்று நினைத்தேன்,ஆனா மிகவும் கஷ்டமான காரியம் போல இருக்கு.."என லிகிதாவும் புலம்பினாள்..
"லிக்கி..!ஊரு முழுக்க குதுகாலமா இருக்கு..ஏதோ விசேஷமாக இருக்கு என நினைக்கிறேன்.."அனு சொல்ல,
"ஆமா"என்று லிகிதாவும் ஆமோதித்தாள்.
இருவரும் நடக்கும் நிகழ்ச்சிகளையும்,மக்கள் பேசுவதையும் உற்று கேட்க,அங்கு கூடிய விரைவில் இலங்கையில் இருந்து கொண்டு வந்த பாண்டியனின் மணிமுடி மூலம் ராஜேந்திர சோழன் தன் மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ய போவதை அறிந்தனர்.
"ஏண்டி லிக்கி,இவ்வளவு தானிய வளம் இருந்தும் பிற்காலத்தில் நம் தமிழ்நாட்டில் மட்டும் தாது பஞ்சம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பசி,பட்டினியால் வாடி எப்படி இறந்தனர்..?"என அனு சரியாக கேட்டாள்.
"தாது பஞ்சம் ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது அனு..!ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் இறந்த பொழுது கூட அப்பொழுது நம்மை ஆண்ட ஆங்கிலேயன் ஒருத்தனும் இங்கே பசியால் இறக்கவில்லை..இத்தனைக்கும் அன்று அவன் உலகம் முழுக்க ஆண்டு கொண்டு இருந்தான்.அவன் நினைச்சு இருந்தா இந்தியாவின் மற்ற பகுதியில் இருந்தோ,இல்ல வேறு நாடுகளில் இருந்தோ எளிதாக பசி,பஞ்சத்தை போக்கி இருக்க முடியும்.ஆனா அவன் அப்படி பண்ணல.நம் முன்னோர்களை எல்லாம் செத்து தொலையட்டும் என்று தான் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.
இப்போ இருக்கிற சோமாலியா ஒரு காலத்தில் வளம் மிக்க நாடாக இருந்தது.ஆனா இந்த மேற்குலக நாடுகள் கிட்ட சிக்கி கொண்டு அந்நாட்டு மக்கள் இப்போ பசி, பட்டினியால் வாடுறாங்க.அதுக்காக ஆங்கிலேயர்கள் நமக்கு நல்லதே செய்யலயா என்று கேட்டால், செயிஞ்சு இருக்காங்க என்று சொல்வேன்..ஆனா அவங்க செய்த நன்மைகளை விட தீமைகளே அதிகம்..அதுவும் அவர்களுக்கு ஆதாயம் தரும் நன்மைகளை மட்டுமே செய்வார்கள்.."என்று லிகிதா சொல்ல அனுவுக்கு நன்றாக புரிந்தது.
"யப்பா..உனக்கு நிறைய விசயம் தெரியுது லிக்கி"என அனு வியந்தாள்.
'ம்...எனக்கு வரலாறை தேடி படிப்பதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் அனு.."என லிகிதா சொன்னாள்.
சோழ நாட்டில் பல்வேறு சிற்றரசர்கள் இருந்தனர்.. பழுவேட்டையரர்,கொடும்பாளூர், வாணர் குலம்,மலையமான்,சம்புவரையர் இப்படி பல சிற்றரசர்கள் இருந்தனர்.அதில் சுந்தர சோழன் காலர் காலத்தில் மிக செல்வாக்கு மற்றும் முக்கிய பதவிகளை பெற்று இருந்த பழுவேட்டரையர் குலம் கொஞ்ச கொஞ்சமாக செல்வாக்கு இழந்து கொடும்பாளூர் குலத்தின் கையில் அதிகாரம் போய் சேர்ந்தது.. ராஜராஜ சோழன் திருமணம் செய்தது கொடும்பாளூர் இளவரசியான வானதியை தான்.சொல்லவே தேவை இல்லை இப்போ அரசனாக வீற்று இருக்கும் ராஜேந்திர சோழனின் அன்னை வானதி தான்.ராஜேந்திர சோழனுக்கு இரு புதல்விகள்.ஒருவர் அருள்மொழி நங்கை,இன்னொருவர் அம்மங்கா தேவி..
அக்காலத்தில் மன்னர்கள் எப்பொழுதும் ஒன்று போரிட்டு இன்னொரு நாட்டை வெற்றி கொள்வர்.அல்லது பொண்ணு கொடுத்து அல்லது பொண்ணு எடுத்து நாட்டை நட்பாக்கி கொண்டு எல்லைகளை விரிவுபடுத்தி கொள்வர்.அப்படி தான் ராஜ ராஜ சோழனும் தனக்கு பிறந்த மகளை வேங்கி நாட்டுக்கு கொடுத்து நட்பாக்கி கொண்டார்.இப்போ ராஜேந்திர சோழனும் அவ்வழியே வேங்கி நாட்டின் இளவரசான நரேந்திரனுக்கு தம் மகளை கல்யாணம் செய்து கொடுத்து நட்பை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என விரும்பி இருந்தான்.ஆனால் அவள் மகளான அருள்மொழி நங்கை அதற்கு மாறான எதிர்மறை விருப்பம் கொண்டு இருந்தாள்.அவளுக்கு தம் பாட்டியின் குலத்தில் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என விருப்பம்.
கங்கை வரை சென்று போரிட்டு வென்று அங்கிருந்து பெரிய பெரிய பானைகளில் கங்கை நீரை யானைகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.இந்த நீரை கொண்டு தான் ராஜேந்திர சோழன் உருவாக்கிய கோவிலுக்கு குடமுழுக்கு செய்ய போவதாக மக்கள் பேசி கொண்டு இருந்தனர்.
காசி வரை சென்று வென்றதன் அடையாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரையே ராஜேந்திர சோழன் உருவாக்கி இருந்தான்.அந்த நகருக்காக காவிரி நீரை திருப்பி ஒரு பெரிய ஏரியை ராஜேந்திர சோழன் உருவாக்கி இருக்க,அந்த ஆற்றின் ஓரத்தில் அழகான பெண்கள் குளித்து கொண்டு இருந்தனர்..அவர்கள் மேனியின் வனப்பை பார்த்தாலே அரண்மனை பெண்கள் என்று எளிதாக அடையாளம் தெரிந்தது.எல்லோரும் ஒருவரையொருவர் நீரை அள்ளி தெளித்து விளையாடி கொண்டு இருந்தனர்.
ஊர் முழுக்க சுற்றி விட்டு சோர்ந்து போய்,ஆற்றோரம் இருந்த ஆலமரத்தில் லிகிதா மற்றும் அனுவின் ஆன்மா வந்து சேர்ந்தது..ஆற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளை அவர்கள் வேடிக்கை பார்க்க தொடங்கினர்.
அதில் இருந்த ஒரு பெண், தன் எஜமானியை பார்த்து,"தேவி, தாங்கள் மணம் முடித்து வேங்கி நாட்டுக்கு சென்று விட்டால் இந்த ஏழை பெண்களை எல்லாம் ஞாபகம் வைத்து இருப்பீர்களா.."என கேட்டாள்..
word font copy and paste
அந்த முக லட்சணம் பொருந்திய எஜமானி தன் தோழியை பார்த்து,"ம்,கேளடி என் வாய் துடுக்கு சங்கா..நான் திருமணம் செய்து கொண்டு வெளியே போக போவது இல்லை.எனக்கு பிடித்த இந்த சோழ நாட்டில் தான் தங்க போகிறேன்.."என கூறினாள்.
பதிலுக்கு அவள் பணிப்பெண்ணோ,"அது எப்படி சரியாகும் தேவி...திருமணமானால் பெண்கள், தன் கணவர் வீட்டுக்கு அல்லவா செல்வது தானே மரபு.
தாங்கள் மணம் முடித்தால் வேங்கி நாட்டுக்கு அல்லவா செல்ல நேரிடும்..வேங்கி நாட்டு இளவரசன் இங்கு தங்க சம்மதிக்க மாட்டாரே.."என வினவினாள்..
அதை கேட்டு அவள் எஜமானி சிரித்தாள்.."நான் வேங்கி நாட்டு இளவரசனை திருமணம் செய்தால் தானே இங்கு இருந்து செல்ல நேரிடும்.ஆனால் நான் தான் நரேந்திரனை திருமணம் செய்ய போவது இல்லையே.."
அந்த பணிப்பெண்ணும் விடாமல்,"தேவி..!இன்னும் ரெண்டு நாளில் தங்கள் இளவலுக்கு பட்டாபிஷேகம் செய்ய போகிறார்கள்..பட்டாபிஷேகம் முடிந்த உடனே அடுத்து உங்கள் திருமணம் என்று தான் அரண்மனையில் பேச்சு..மாமன்னர் ராஜேந்திர சோழன் பேச்சுக்கு யாராவது ஒருவர் எதிர் பேச்சு இவ்வையகத்தில் பேச முடியுமா..?அவர் எடுக்கும் முடிவை தான் யாராவது தடுக்க முடியுமா..!அதுவும் உங்கள் திருமணம் ராஜாங்க ரீதியானது.போயும் போயும் பெண்ணான உங்களால் இதை தடுக்க முடியுமா"என பரிகாசம் செய்தாள்..
"சிரிப்பை நிறுத்துடி,என் சில்வண்டு..எங்கள் வம்சத்தில் செம்பியன்மாதேவி முதல் என் பாட்டியார் குந்தவை பிராட்டி வரை எப்பவுமே ராஜாங்க ரீதியில் முடிவு எடுத்து உள்ளார்கள்..பெண்கள் பேச்சுக்கு எப்பவுமே சோழர் வம்சத்தில் மரியாதை அளிப்பர்.அந்த வம்சத்தில் வந்த அருள்மொழி நங்கை நான்..என் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கே உள்ளது."
இவர்கள் பேச்சு சுவாரசியத்தில் மூழ்கி இருக்கும் பொழுது ஒரு முதலை இவர்களை நெருங்கி விட்டு இருந்தது.சற்று தாமதமாக தான் கூட்டத்தில் இருந்த பெண் கவனித்து"முதலை..முதலை என்று கூவி கொண்டு ஓட்டமும் நடையுமாக கரையை நோக்கி பாய்ந்தாள்.மற்றவர்களும் கரையை நோக்கி ஓட,அருள்மொழியின் கால்கள் கல் இடுக்கில் சிக்கி கொண்டது..என்ன செய்வது என்று தெரியாமல் அவள் தள்ளாட,முதலை தன் அகல வாயை திறந்து கொண்டு விழுங்க வந்தது.அவ்வளவு தான் கைலாச பதவி தான்"ஈசனே என்னை காப்பாற்று" என்று அவள் கத்திய வேளையில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு ஈட்டி சரியாக முதலையின் வாய்க்குள் பாய்ந்தது..அடுத்த நொடி மின்னல் போல் ஆற்றுக்குள் பாய்ந்த அவன் அருள்மொழியை மீட்டு கரையில் கொண்டு சேர்க்கவும்,அங்கு கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ வாழ்க..என்ற கோஷம் எழுந்தது..
"ஈட்டியை குறிபார்த்து எய்தி,ஒரே நொடியில் எதிரியின் கணக்கை முடிப்பதில் வல்லவரான இளங்கோவின் ஆற்றலுக்கு ஈடு இணை இவ்வையகத்தில் உண்டோ.."என கரகோஷம் எழுந்தது.
இந்த கோஷத்தை கேட்ட உடனே,அனு மற்றும் லிகிதா துள்ளி எழுந்து பார்த்தனர்..ஆலமரத்தின் கிளைகளுக்கு நடுவே பார்க்க நடுநாயகமாய் அவனின் உருவம் தெரிந்தது.
ஆறடி குறையாமல் உயரம்,திடகாத்திரமான தோள்கள்,வலிமைமிக்க கரங்கள்,கட்டுடல் மேனி,லட்சணமான முகம் அதை பார்த்து ஆவியான அனுவின் ஆன்மாவுக்கே அவன் மேல் ஆசை வந்தது..
VERY GOOD UPDATE. EVERY WORD & LINES IS SUPER.