08-10-2024, 07:55 AM
(06-10-2024, 10:59 AM)JeeviBarath Wrote: ⪼ இன்ஸ்பெக்டர்-டாக்டர் ⪻
இன்ஸ்பெக்டர், டாக்டரை அழைத்து வாயாடியின் சிகிச்சை பற்றி கேட்க, 'அதெல்லாம் சொல்லக் கூடாது, டாக்டர்- நோயாளி உரிமை என தகவலை சொல்ல மறுத்தார் அந்த டாக்டர்.
இன்ஸ்பெக்டர் : சும்மா சொல்லுப்பா.
டாக்டர் : அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. சொல்றது தப்பு.
இன்ஸ்பெக்டர்: புரிஞ்சிக்கப்பா.
டாக்டர் : புரியுது.
இன்ஸ்பெக்டர் : என்ன புரியுது.
டாக்டர் : நீ எதை கேட்க நினைக்குறன்னு.
இன்ஸ்பெக்டர் : சும்மா விளையாடாம சொல்லு. அந்த பய்யன் பாவம். ஹெல்ப் பண்ண நினைச்சு ஜெயிலுக்கு போற நிலமை வந்துடக்கூடாது.
டாக்டர் : ஹம்.
இன்ஸ்பெக்டர் : நான் சீரியஸா கேக்குறேன். பிளீஸ் சொல்லு.
டாக்டர் : அது சரிபட்டு வராது.
இன்ஸ்பெக்டர் : நான் இன்ஸ்பெக்டரா கேக்கல. ஒரு ஃபிரண்டா கேக்குறேன். இல்லை ஒரு பய்யன ஜெயிலுக்கு போகாம காப்பத்த நினைச்சு கேட்கிறேன்.
டாக்டர் : ஹம்.
இன்ஸ்பெக்டர் : நீ எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டாம். அட்லீஸ்ட் அவனுக்கு ஹெல்ப் பண்ற மாதிரி எதாவது சொல்லு.
டாக்டர் : புரிஞ்சிக்க பிளீஸ்.
இன்ஸ்பெக்டர் : அட்லீஸ்ட், நான் சொல்றது சரியான்னு சொல்லு.
டாக்டர் : ஓகே.
இன்ஸ்பெக்டர் : சூழ்ச்சியான எண்ணம் உள்ளவ. தன்னுடைய தேவைக்காக எப்படி வேணும்னாலும் பேசுவா, கரெக்ட்.
டாக்டர் : ஹம்.
இன்ஸ்பெக்டர் : தன்னோட தேவை நிறைவேற என்ன வேணும்னாலும் பண்ணுவா.
டாக்டர் : ஹம்.
இன்ஸ்பெக்டர் : போலீஸ் கிட்ட போய் புகார் கொடுப்பாளா?
டாக்டர் : நான் எப்படி சொல்ல?
இன்ஸ்பெக்டர் : அப்ப நினைச்சது நடக்க ஒவ்வொரு மாதிரி பேசி மிரட்டுவா பட் புகார் கொடுக்க மாட்டான்னு எடுத்துக்கவா?
டாக்டர் : ஹம்.
இன்ஸ்பெக்டர் : சோ மொத்தத்துல பொய் சொல்லி, தேவைய நிறைவேற்ற எல்லாம் பண்ணுவா, அவ நினைச்சது நடக்கலைன்னா சுத்தி இருக்கிற எல்லாருக்கும் ஏழரை தான்?
டாக்டர் : ஹம்.
இன்ஸ்பெக்டர் பரத்தை அழைத்து 'என்ன பண்ணினாலும் நாய் வாலு நிமிராது',கவனமா இருந்துக்க என வார்னிங் கொடுத்தாள்.
⪼ ஜீவிதா ⪻
பரத் விவாகரத்து கொடுக்க மாட்டேங்கறான். அப்பா கிண்டலாக சொன்ன மாதிரி ஒருவேளை மதியின் அப்பாகிட்ட சொல்லி ஆள் வச்சி, அப்படி பண்ண வேண்டியது வரலாம் என்ற எண்ணம் ஜீவி மனதிலும் வந்தது...
, நெக்ஸ்ட் பார்ட் வெயிட்டிங்