Adultery இது எங்கள் வாழ்க்கை!!!(On Hold)
⪼ மதியின் அப்பா ⪻

ரொம்ப தாங்க்ஸ்டா என நண்பனுக்கு நன்றியை சொன்னார் மதியின் அப்பா.

வருத்தப்படாதடா. முத நேரம் அவனா உதவி கேட்ருக்கான். சீக்கிரம் அவனாவே பேசுவான்.

நடக்கும்னு நம்புறேன்டா.

மதியின் அப்பா மற்றும் அவரது நண்பர் இருவரும் 'யார் இந்த பொண்ணு, அவளுக்கு இப்படி ஒரு பிரச்சனைன்னு இவனுக்கு (மதி) எப்படி தெரியும்' என கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஜீவிதா சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தது, ஒருநாள் இரவு கவியின் வீட்டில் தங்கியது, அவள் யார், என்ன உறவு, மதியின் தேவதை, அவளால் மதிக்கு பிரச்சனை எதுவும் இல்லை என தனக்கு கிடைத்த தகவல்களையும், ஆள் வைத்து ஜீவிதா குறித்து விசாரித்த தகவல்களையும் மதியின் அப்பாவுடன் பகிர்ந்து கொண்டார் மதியின் அப்பாவின் நண்பர்.

தன் மகன் மதி, பொய் சொல்ல வாய்ப்பில்லை என தெரிந்தாலும், மதியின் அப்பாவும், ஆள் வைத்து, தன் மகன் சொல்வது போல அரவிந்த் மூலம் ராஜிக்கு தொல்லை இருப்பது உண்மையா என்பதை விசாரித்தார். மதி சொன்ன தொந்தரவை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் அரவிந்த் மற்றும் ராஜி இருவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்த தகவல் மட்டும் கிடைத்தது.

மதியின் அப்பா, அரவிந்தின் மாமாவை அழைத்து மகனின் வேண்டுகோள் என சொல்லாமல், ஒரு விஷயம் காதுக்கு வந்துச்சி அதை விசாரித்த பிறகு கிடைத்த தகவல்களை சொன்னார்.

யார் சொன்னாலும் பெண்கள் விஷயத்தில் அரவிந்த் கேட்பதில்லை. எங்களுக்கும் என்ன பண்ணன்னு தெரியலை. எல்லாம் பெண்களும் விரும்பி தான் நடக்குதுன்னு நினைத்ததாக சொன்னார் அரவிந்தின் மாமா.

மதியின் அப்பா : சரி. நான் நேரடியா பேசுனா உனக்கு எதுவும் வருத்தம் இல்லையே?

இல்லை.

என்ன பேசுவேன்னு தெரியும் தான.?

மேல கை வைக்காம என்ன வேணும்னாலும் பண்ணிக்க.

சொன்னா கேக்கலன்னா?

அதெல்லாம் கேட்பான்.

நீ சொல்லி கேட்கலையே.

என்ன பண்ண. அக்கா மகனா போய்ட்டான். எப்படியும் ஒண்ணும் பண்ண மாட்டாங்கன்னு ஆட்டம் போடுறான்.

நீயா விஷயத்தை சொல்றியா?

இல்லை. நீயே சொல்லு..

சரி. பை.

அழைப்பை துண்டித்த மதியின் அப்பா, நாளைக்கு (ஞாயிற்றுக்கிழமை) அரவிந்தை வந்து பார்க்க சொல்லு என அடியாள் ஒருவனிடம் தகவலை தெரிவித்தார்.

என்னதான் மகனுக்காக உதவி செய்ய நினைத்தாலும், ராஜி விஷயம் மதிக்கு எப்படி தெரியும்? ஒருவேளை அந்த மேனேஜர் சொல்லியிருப்பாளா? ராஜியை அரவிந்த் தொல்லை செய்யும் போது மேனேஜர் எப்படி உதவி கேட்டிருக்க முடியும்? என மதி-ராஜி குறித்து பலவித குழப்பங்கள் அவருக்கு வந்தது.

மதியின் அப்பாவுக்கு தேவதை கதை ஏற்கனவே தெரியும். ஒருவேளை தன் தேவதையாக  நினைக்கும் மேனேஜருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கிறான் என புரிந்து கொண்டார்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை!![✍✍✍ அடுத்த பதிவு : திங்கட்கிழமை] - by JeeviBarath - 06-10-2024, 10:56 AM



Users browsing this thread: 2 Guest(s)