Fantasy ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐
(05-10-2024, 10:34 PM)snegithan Wrote: பாகம் - 136

நிகழ் காலம்

மாறனை பார்த்த உடன் ஆராதனாவுக்கு பெருமூச்சு வந்தது..

மாறன், தன் குருநாதரை அழைத்து வந்து இருந்தான்.

மூவரின் முகம் இருள் அடைந்து இருப்பதை பார்த்து,"என்ன ஆரு ஒரு மாதிரியா இருக்கே..என்ன ஆச்சு.."என கேட்டான்.

காத்தவராயன் வந்து போனதையும்,அவன் சொன்ன விசயத்தையும் ஆராதனா சொல்ல,மாறனின் முகம் கவலையில் ஆழ்ந்தது..

மாறன் அவன் குருவிடம்,"ஒருவேளை காத்தவராயன் பொய் சொல்லி இருப்பானோ"என மாறன் கேட்டான்..

குருவின் முகம் கொஞ்சம் கூட கவலை அடையவில்லை..மாறாக இன்னும் பிரகாசம் அடைந்தது.."காத்தவராயன் பொய் உரைக்கவில்லை.உண்மையை தான் சொல்லி உள்ளான்.நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்று குரு சொன்னார்..

"குருவே..தாங்கள் சொல்வது ஒன்றும் புரியல..மதிவதனிக்கும்,காத்தவராயனுக்கும் உருவாகிய வாரிசு மூலம் உண்டான அவன் வம்சத்தையே அவனே அழித்துவிட்டான் என்கிறான்.அந்த வாரிசு மூலம் தானே நாம் காத்தவராயனை நிகழ் காலத்தில் கட்டுபடுத்த எண்ணி இருந்தோம்.இப்போ அவன் வம்ச வாரிசு இல்லை என்றால் நமக்கு பாதகம் தானே..இது எப்படி நன்மை ஆகும் .?

குருநாதர்,மெல்லிய புன்னகையுடன் நடந்து மதிவதனி மரத்தை தொட்டு பார்த்தார்..
"நீ பட்ட கஷ்டம் வீண் போகாது தேவி."என சொல்லிவிட்டு அந்த மரத்தின் அடியில் அமர்ந்தார்.

பின்பு அவர்களை பார்த்து,"இந்த அரக்கர்கள் காலங்காலமாக தங்கள் முட்டாள்தனத்தால் தப்பை செய்வார்கள்.ஆனால் அந்த தப்பு எதிராளிக்கு நன்மையாக போய் விடும்..அது அவர்கள் இயல்பு,அது போல தான் காத்தவராயன் அவனுக்கு தெரியாமலேயே ஒரு தப்பை செய்து நமக்கு  நன்மையை செய்து உள்ளான்.அதை உங்களுக்கு ஒரு கதை மூலம் விளக்குகிறேன்..

"தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி யுத்தம் வந்த காலம் அது.தேவர்களுக்கு அப்போ அமிர்தம் இன்னும் கிடைக்கவில்லை..ஆனால் அசுரர்கள் கையில் ஒரு மிகப்பெரும் பலம் இருந்தது.அது தான் அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார்..அவருக்கு சஞ்சீவினி மந்திரம் தெரியும்.அதனால் அசுரர்கள் போரில் மடிந்தாலும் அவர் சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்து மீண்டும் அசுரர்களை பிழைக்க வைத்து விடுவார்.என்ன தான் தேவர்கள் பலமாக இருந்தாலும் அசுரர்கள் மீண்டும் உயிர்பெற்று வர வர தேவர்கள் பலம் குறைந்து கொண்டே வந்தது..இதனால் தேவர்களின் குரு பிரகஸ்பதி கவலை கொண்டார்.அவர் தன் மகன் கசனை அழைத்து,நீ சுக்ராச்சாரியாரிடம் சென்று சஞ்சீவினி மந்திரத்தை கற்று கொண்டு வரும்படி சொன்னார்..

அவனும் அசுரகுரு சுக்கிராச்சாரியாரிடம் சென்று அவருக்கு சீடனாக சேர்ந்தான்..இதை அரக்கர்கள் எதிர்த்தாலும்,சீடனாக வந்து கல்வியை யாசகம் கேட்பவனிடம் மறுக்க கூடாது என்பது நியதி.அதனால் அசுரகுரு,என்ன தான் எதிரியின் மகனாக இருந்தாலும் சுக்ராச்சாரியார் தன் இனத்தின் எதிர்ப்பை மீறி அவனை சேர்த்து கொண்டார்.அவனுக்கு  சகல வித்தைகளையும் சொல்லி கொடுத்தார்.சஞ்சீவினி மந்திரத்தை தவிர..காரணம் அந்த மந்திரத்தை சொல்லி கொடுத்தால் எங்கே தன் இனத்திற்கே அழிவு வந்து விடுமோ என்று அவர் கருதினார்.நேரம் வரும் வரை கசன் பொறுமையாக இருந்தான்.ஆண்டுகள் பல கடந்தன.ஆனால்   அந்த பொறுமை அரக்கர்களுக்கு இல்லை.அதனால் கசனை கொல்ல தீர்மானித்தனர்..அவனை கொன்று முதலைகளுக்கு உணவாக போட்டனர்.விதி விளையாடியது..கசனின் அழகை கண்டு சுக்ராச்சாரியார் மகள் தேவயானி மையல் கொண்டாள்..அவனை அரக்கர்கள் கொன்றதை அறிந்து தன் தந்தையிடம் அவனை உயிர்ப்பிக்க வேண்டினாள்.சுக்ராச்சாரியாரும் தன் செல்ல மகளின் விருப்பத்திற்கு இணங்க அவனை உயிர்ப்பித்து கொடுத்தார்.இதே போல பல சமயங்களில் அரக்கர்கள் கசனை கொன்றாலும் சுக்ராச்சாரியர் மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்து கொண்டே இருந்தார்.அதனால் அரக்கர்கள் இம்முறை வேறு திட்டம் போட்டனர்.அவனை கொன்று அப்படியே விட்டு விடாமல் கசனின் எலும்புகளை நொறுக்கியும்,அவன் மாமிசத்தையும்,இரண்டையும் மதுவில் கலந்து சுக்ராச்சாரியாருக்கே குடிக்க கொடுத்து விட்டனர்.மீண்டும் கசனை தேடி கிடைக்காமல் தேவயானி தன் தந்தையிடம் வந்து முறையிட சுக்ராச்சாரியார் தியானம் செய்து பார்க்கும் பொழுது தான் அவன் தன் வயிற்றில் இருக்கிறான் என்று புரிந்தது..இப்பொழுது அவனை உயிர்ப்பித்தால் தன் வயிற்றில் உள்ள கசன் உயிர்பெற்று வயிற்றை கிழித்து கொண்டு வருவான்.அப்போ தான் இறந்து விடுவோம் என்று அவருக்கு தெரிந்தது..அப்போ தன்னை உயிர்ப்பிக்க யாராவது வேண்டுமே என்று நினைத்தார்.
அதனால் தன் மகளுக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லி கொடுக்க,அவள் மண்டையில் அம்மந்திரம் ஏறவில்லை..தப்பு தப்பாக உச்சரித்தாள்.
அதனால் கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லி கொடுப்பது தான் ஒரே வழி என்று அசுரகுரு தெரிந்து கொண்டார்..அவனை மீண்டும் தன் வயிற்றில் உயிர்ப்பித்து,"கசனே, நான் உனக்கு சஞ்சீவினி மந்திரத்தை சொல்லி தருகிறேன்..நீ என் வயிற்றை கிழித்து வெளியே வந்த பிறகு என்னை உயிர்ப்பிக்க செய்."என்று சொல்லி அவனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை கொடுத்தார்.அவனும் அவ்வாறே செய்தான்.எந்த மந்திரத்தை கசன் தெரிந்துகொள்ள கூடாது என அரக்கர்கள் மீண்டும் மீண்டும் அவனை கொன்றனரோ..!கடைசியில் அவர்கள் செய்த முட்டாள்தனத்தாலேயே அவன் தெரிந்து கொண்டான்.அரக்கர்கள் அவனை கொல்லாது இருந்திருந்தால் தன் இனத்தின் நலனுக்காக கண்டிப்பா சுக்ராச்சாரியார் கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்து இருக்க மாட்டார்.அதே போன்ற தவறை தான் காத்தவராயன்  செய்து உள்ளான்.
தன் வம்சம் அழிந்து விட்டது ,இதற்கு மேல் தன்னை யாரும் தடுக்க முடியாது என இறுமாப்பில் காத்தவராயன் இருப்பான்.அதனால் இனி நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவன் உங்களை கண்காணிக்க மாட்டான்.அது தான் நமக்கு தேவை.காத்தவராயன் சோழர் காலத்திற்கு சென்று இலங்கை மன்னனுடன் நடந்த போரில் தன் வம்சத்தின் வாரிசை அழித்து இருக்கிறான்.நமக்கு ரெண்டு வழி உள்ளது.ஒன்று காத்தவராயன் அவன் வம்ச வாரிசை அழிக்க வரும் பொழுது அவனை தடுக்க வேண்டும்..அது போர் நடந்து கொண்டு இருக்கும் பொழுது மிக மிக சிரமமான காரியம்.இன்னொன்று அவன் அழிக்க வரும் முன் நேரத்திற்கு சென்று நீங்கள் சமயோசிதமாக செயல்பட்டு காத்தவராயன் வம்சாவளியை தொடர செய்துவிட்டு  வரவேண்டும்.அந்த விசயம் முக்கியமா காத்தவராயனுக்கு தெரிய கூடாது.உங்களில் இருவர் சோழர் காலத்திற்கு பயணம் செய்ய வேண்டும்..யார் போக போவது.." என கேட்டார்.

மாறன் உடனே,"குருவே..என்னை பொறுத்தவரை அனு மற்றும் லிகிதா செல்வது சரியென நினைக்கிறேன்..ஏனெனில் ஆராதனா கொஞ்சம் அவசரகுடுக்கை.."என்று சொல்ல ஆராதனா முகம் கோபத்தில் சிவந்தது..

அதை பார்த்த மாறன்,"ஆரூ..நான் சொல்றேன் என்று கோச்சுக்காதே..ஒவ்வொருவர் கிட்ட குறையும் இருக்கும்,நிறையும் இருக்கும்.உன்கிட்ட இருப்பது சின்ன குறை தான்.உன்கிட்ட இருக்கும் நிறை அவங்ககிட்டேயும் இல்ல..இப்போ அவங்க போக போறது எதிரியை எதிர்க்க இல்ல..நடந்த பிழையை சரிசெய்ய..காத்தவராயன் அந்த காலத்திற்கு பிரவேசிக்கும் முன்னரே இருவரும் நிகழ் காலத்திற்கு திரும்பி விடுவார்கள்.இந்த வேலைக்கு அவர்கள் தான் தகுதி ஆனவர்கள்.ஆனால் காத்தவரானை எதிர்க்க போகும் பொழுது நீ கண்டிப்பா தேவை"என மாறன் சமாதானம் சொன்னாலும் ஆராதனா மனசு ஆறவில்லை..

குருநாதரும் மாறன் சொல்வதை ஒப்புக்கொண்டு,"இப்போ நீங்க காலம் கடந்து செல்ல போறீங்க..ஆனா,இப்போ காலச்சக்கரம் இங்கே உருவாக போறது இல்ல..அந்த காலச்சக்கரம் அமாவாசை அன்று தான் மாயமலையில் உருவாக போகிறது.அதுவரை நாம் காத்திருக்க முடியாது.காலச்சக்கரம் இல்லாமல் நீங்கள் உடலோடு பின்னோக்கி செல்ல முடியாது..உங்கள் உடலை விட்டு தான் நீங்கள் செல்ல வேண்டும்..நீங்கள் திரும்பி வரும் வரை உங்கள் மேனியை பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு.இதற்கு மேல் நான் சொல்வதை கவனமா கேளுங்க.."என்று அவர் சொல்ல இருவரும் கவனமாக கேட்டு கொண்டனர்

"உங்கள் ஆன்மா உடலில் இருந்த பிரிந்த உடன் நீங்கள் வெட்டவெளி என்ற தளத்திற்கு சென்று விடுவீர்கள்.அங்கு நிகழ் காலம்,இறந்த காலம்,எதிர்காலம் என்று எதுவுமே கிடையாது..நீங்கள் கொஞ்சம் கூட அங்கே பதட்டபட கூடாது.அங்கு நீங்கள் பல உயர்ந்த ஆன்மாக்களை சந்திக்க நேரிடும்..அவர்களை எதுவும் தொந்தரவு செய்யாமல் நீங்கள் எந்த காலத்திற்கு செல்ல வேண்டுமோ அதை மட்டும் தியானியுங்கள்.அது போதும்.. உடனே அந்த காலத்திற்கு சென்று விடுவீர்கள்..தியானம் செய்யும் ஆன்மா தான் காலம் கடந்து செல்லும். "என்று அவர் சொல்ல இருவரும் கேட்டு கொண்டனர்.

"சாமி,எங்களுக்கு ஒரு சந்தேகம்,இருக்கும் குறைந்த நேரத்தில் நாங்க எப்படி காத்தவராயன் வம்சாவளியை கண்டுபிடிப்பது.."என அனு கேட்டாள்.

"அது மிகவும் சுலபம் பெண்களே..!கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ தான் காத்தவராயன் வம்சாவளி.இலங்கை,மற்றும் கங்கை வரை வெற்றி கொண்டதன் அடையாளமாக ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரை உருவாக்கினான்.அங்கு தான் முடிசூட்டும் விழாவுக்கு முன்பு இலங்கை மன்னன் சதி செய்து நடத்தும் ஒரு போரில் காத்தவராயன் ஆவி இளங்கோவை கொன்றான்.நீங்கள் அந்த நிகழ்வு நடக்கும் இரு தினங்களுக்கு முன்பு அங்கே சென்று உங்கள் காரியத்தை கச்சிதமாக செய்து விட்டு வாருங்கள் ."

"உத்தரவு சாமி"என இருவரும் கோரசாக சொன்னார்கள்.

வாழ்வில் தங்களுக்கு  ஏற்பட போகும் ஒரு புதிய அனுபவத்திற்கு ஆவலுடன் தயாராக இருந்தனர்.

மாறனின் குரு,சில மூலிகைகளை அரைத்து குளிகையாக மாற்றி கொண்டு வந்து இருந்தார்.அதை  இருவரிடம் கொடுத்து வாயில் போட்டுக்க சொல்ல,அவர்கள் அப்படியே போட்டு கொண்டு அங்கேயே காலை நீட்டி,கண்ணை மூடி படுத்து கொண்டனர்.

கொஞ்ச கொஞ்சமாக உள்ளுக்குள் ஒவ்வொரு உறுப்பாய் அடங்கி கொண்டு வருவதை உணர்ந்தனர்..கை,கால்கள் மருத்து போனது போல ஆனது.உடலுக்குள் உள்ளே ஆன்மா இதயத்திற்கு கீழே வந்து ஒடுங்கியது போல இருவரும் உணர்ந்தனர்.அடுத்து அவர்கள் ஆன்மா ஒரு முடிவில்லாத இருட்டில் பயணம் செய்தது போல தெரிந்தது..அடுத்த சில நொடிகளில் இருவரும் ஒரு பளீரென்ற வெளிச்சத்தை கண்டனர்..ஆனால் அந்த வெளிச்சம் கண்ணை உறுத்தவில்லை.அவர்கள் உடலை அவர்களே பார்த்தார்கள்.காற்றில் மிதப்பது போல உணர்ந்தார்கள்.அதே நேரம் லேசாக மழை தூர ஆரம்பித்தது.ஆனால் அவர்கள் நனையாதது கண்டு ஆச்சரியம் ஆனார்கள்.

"என்ன ஆச்சரியமா பார்க்கறீங்க..!ஆன்மா பஞ்சபூத சக்திகளுக்கு அப்பாற்பட்டது..நீரில் நனையாது.நெருப்பில் எரியாது.தரையில் படாது.பேசுவது கேட்காது.எதுவும் ருசிக்காது"என குருநாதர் பேசாமலே பார்வையில் சொன்னது அவர்களுக்கு புரிந்தது.அவர்கள் குருவை வணங்கி முடித்த உடனேயே அடுத்த நொடி அவர்களின் ஆன்மாவை எங்கேயோ இழுத்து செல்லப்பட்டது போல உணர்ந்தார்கள்.

"மாறா..இவங்க ரெண்டு பேர் உடலை உடனே மழையில் நனையாமல் மடத்தின் உள்ளே பத்திரப்படுத்து..மணிக்கு ஒருமுறை நான் கொடுத்த மூலிகையை இவர்கள் உள்ளங்காலில் தேய்க்க மறக்காதே.இருவர் உடலும் எக்காரணம் கொண்டும் உஷ்ணம் குறைந்து சில்லிட கூடாது."என குருநாதர் எச்சரித்து சொல்ல,அவன் ஆராதனாவை உதவிக்கு அழைத்தான்.ஆனால் அவன் மேல் உள்ள கோபத்தினால்
ஆராதனா முறைத்து கொண்டு கொண்டு,அங்கே சற்று தள்ளி உட்கார்ந்து கொள்ள,காமினி உதவிக்கு வந்தாள்.
இருவரும் சேர்ந்து அனு,மற்றும் லிகிதா உடலை பத்திரப்படுத்தினர்.

[Image: P-20241005-222634.jpg]
image hosting
ஆஹா ஆஹா என்ன ஒரு பதிவு. அற்புதம். அதுவும் சுக்கிராச்சாரியாரின் சஞ்சீவி மந்திரம் நான் இதுவரை கேள்வி பட்டதேயில்லை. உங்கள் வரிகள் உண்மையாகவே இந்த கதையின் வழியே பயணிப்பது போல் இருக்கிறது. மிக சிறந்த பதிவு.
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️மாயமலை கோட்டையும் காத்தவராயன் ரகசியங்களும்♥️♥️⭐ - by rameshsurya84 - 05-10-2024, 11:05 PM



Users browsing this thread: 55 Guest(s)