04-10-2024, 03:39 AM
(This post was last modified: 04-10-2024, 06:59 AM by rathibala. Edited 3 times in total. Edited 3 times in total.)
(04-10-2024, 02:43 AM)Mak060758 Wrote: உங்க டிரேட் மார்க்..."கெக்கலிட்டு சிரிப்பது".. இது எத்தனை பேருக்கு புரியுதோ! ?
நான் சௌத் தமிழ்நாடு பகுதியை சேர்ந்தவன் நண்பா.
![[Image: trisha-has-done-better-action-compared-t...08f5b9971a]](https://preview.redd.it/trisha-has-done-better-action-compared-to-samantha-and-v0-4izo10fwij5d1.jpeg?width=545&format=pjpg&auto=webp&s=eef08d4d14b3e338faa900ce01276108f5b9971a)
டேய்.. யாண்ட கொழந்த கிட்ட "வெடு"க்குனு புடுங்குற..
"விருட்டு"னு விட்டான் பாரு ஒரு அடி.. கன்னம் பழுத்துருச்சு..
கெக்கலிட்டு - "சென்ற பகுதியின் இறுதியில்... இருமுறை பயன்படுத்தி இருப்பேன். உண்மையில் அது தவறு.
உண்மையில்.. நான் அதை இப்படி எழுதி இருக்க வேண்டும்.
சுபாவுக்கு அமைதிபடை கஸ்தூரி ஞாபகம் வர, களுக்குனு அவள் சிரிக்க, டீவி பார்த்துக் கொண்டிருந்த மொத்த கூட்டமும் இவர்களை நோக்கி திருப்ப.. விருட்டென எழுந்து ஓடியவர்கள்.. கெக்கலிட்டு சிரித்தபடி இருட்டுக்குள் நடந்தார்கள். (வயிறு வலிக்கும், கண்ணீர் வரும்)
“களு”க்கு - ஒரே ஒரு முறை.. சத்தமாக சிரித்தல்
“கெக்”கலிட்டு - சத்தமாக.. பற்கள் வெளியே தெரியும்படி… விடாது/அடங்காமல் சிரிப்பது.. கண்ணீர் வரும் வரை..
சத்தமில்லாமல் சிரிப்பது - கெக்கலிட்டு சிரிப்பது.. ஆனால் சத்தம் வெளியே வராமல்..
உதட்டுக்குள் சிரித்தாள் - எதிரே உள்ளவர்களுக்கு தெரியும்படி.. இதழை திறக்காமல் சிரிப்பது (புன்னகைத்தல்)
மௌனமாக சிரித்தல் - எதிரே உள்ளவர்களுக்கு தெரியாமல்.. இதழை திறக்காமல் சிரிப்பது.
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!