Romance பத்மினி எனும் பத்தினி
#32
கஸ்தூரி : அண்ணா
வேலாயுதம் : இங்கே உங்களை கூப்பிட்டது ஒரு அண்ணான இல்ல நீங்க பக்கத்து ஊர் விஏஓ உங்க பொண்ணும் இந்ந இருக்கானே முகுந்தன் பையன் கோகுலும் லவ் பன்றாங்க அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கத்தான் வர சொன்னேன். வேற எந்த பந்தபாசமும் இல்ல அண்ணன் தங்கை உறவேல்லாம் எப்போதோ முடிஞ்சிடுச்சி.

என்று கராரக பேசி முடித்தார் வேலாயுதம்

பத்மினி : என்னது நானும் கோகுலும் காதலிக்கிறோமா அப்படின்னு நான் சொன்னேனே இல்ல இவன் சொன்னான என்று நக்கலாக கேள்வி கேட்க ?

கோகுல் : ஐயா நான்தான் அவளை விரும்புறேன் அவ என்னை விரும்பல ஐயா என சொல்ல

வேலாயுதம் கோபத்தின் உச்சிக்கே சென்றார் ஏன்டா புறம்போக்கு இதை தெளிவான சொல்லமாட்டியா காதலிக்கிறீள்ள அதை அவ கிட்ட சொல்லி தொலைக்க வேண்டியது தானே பரதேசி பரதேசி த்தா நமக்குன்னு வந்து வாய்க்குறானுங்க என மனதுக்குள் புலம்பினார். பின்னர் ஆழ்ந்த யோசனைக்கு பிறகு சரி நான் சொல்வதை கேளும்மா பத்மினி நீ கோகுலை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னோட சொத்துல 25% சதவீதத்தை உனக்கும் மீதி 25% சதவீதத்தை உன்னோட அம்மாவுக்கு எழுதி கொடுக்கிறேன் அதே போல இதுவரை மொத்தமாக உள்ள 72 ஏக்கர் நிலத்தை இதுவரை பயிரிட்டு இருக்கேன் இந்த 22 வருடத்திற்கும் உங்களோட 36 ஏக்கர் நிலத்துக்கான குத்தகை பணத்தையும் வட்டியுடன் தந்துடுறேன் இவனை கட்டிக்கிறியாம்மா என கேட்க.


முகுந்தன் கண்கலங்கியபடி தன் நண்பனை பார்த்து கை எடுத்து கூம்பிட்டார் இப்படி ஒரு குணம் தன் நண்பனுக்கு உள்ளதே என்று வேலாயுதம் பேசுவதை ஆச்சர்யத்தோடு பார்த்து கொண்டிருந்தான் நடராஜன் நம்ம அப்பாதான் இப்படி பேசுறதா ஒரே அதிர்ச்சியா இருக்கே சரி என்ன இருந்தாலும் அவங்களுக்கு போக வேண்டிய பங்குதானே கொடுப்பதில் என்ன தவறு என நினைத்துகொண்டான்.

பத்மினி : சொத்து நீங்க தரனும்னு எந்த அவசியமும் இல்ல தாய்மாமன் அவர்களே நாங்க நீதிமன்றம் போன தானக கிடைத்துவிடும் எங்கம்மாகிட்ட ஏற்கனவே பலதடவை கேட்டும் இருக்கேன் சொத்துல பங்கு கேளுன்னு ஆனால் அம்மா தான் எனக்கு அண்ணன் தான் முக்கியம் சொத்து முக்கியமில்ல அவருக்கு அவமானத்தை கொடுத்துட்டேன்னு சொல்லி அழுதுலுக்காங்க எங்களுக்கு இந்த சொத்து எதுவும் வேண்டாம் அப்புறம் எனக்கு கோகுலை பிடிக்கும் ஒரு அண்ணனாக ஆனால் அவனை எப்படி கல்யாணம் பண்ண முடியும் பல வருடங்களாக கோகுலை அண்ணன் என்று தான் கூப்பிட்டுருக்கேன் எந்த ஊரில் அண்ணனை தங்கை கல்யாணம் பண்ணிக்குவாங்க நம்மலைன்னா உங்க புள்ளையாண்டான் நடராஜனையே கேளுங்க இல்ல சமையக்கட்டுல ஒழிஞ்சிருந்து ஒட்டு கேட்குற சித்ரா கோமளவள்ளி,சீதாதேவிய கேளுங்க. என சொல்ல


வேலாயுத்ததிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை கோகுலை ஒரு முறை முறைத்தார் ஏன்டா நாயே அவ உன்னை அண்ணன்னு தான் கூப்பிடுவாளா என கேட்க பம்மியபடி ஆமாங்கய்யா என்றான்.


ஒன்றுமே பேசாமால் என்மேல் தான் தாயி தப்பு என்னை மன்னிச்சிடுங்க தாயி என அத்தனை பேர் முன்பாக மன்னிப்பு கேட்டார் வேலாயுதம் இதனை பார்த்த தங்கை கஸ்தூரி எதைபற்றியும் யோசிக்காமல் பொத்தென்று தன் அண்ணன் காலில் விழுந்து நீங்க ஏன்னா மன்னிப்பு கேட்கனும் தப்பு பண்ண பாவி நான்தான்னா என்னை மன்னிச்சிடுன்னான்னு காலில் விழுந்து கதற செய்வதறியாது தன் தங்கை தோலை பிடித்து தூக்கி என்னையும் மன்னிச்சிடும்மா ஆம்பள பசங்க காதலுக்கு முழு சம்மதம் சொன்ன என்னால பொம்பள புள்ள உன்னோட விருப்பம் என்னவேன்று தெரியாமல் இருந்துட்டேனேம்மான்னு அவரும் கதறி அழுக

கோகுல் ஐயா அப்போ பத்மினிக்கும் எனக்கும் கல்யாணம் என கேட்க சுட்டேரிப்பது போல அவனை முறைத்து பார்த்த வேலாயுதம் உனக்கும் இந்துவுக்கும் தான் கல்யாணம் கிளம்புடா இங்கிருந்து என கோபமாக கத்த முகுந்தா இவன் இனி இந்த வீட்டுக்கு பக்கம் வரணும்னா இந்துவை கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் வரனும் பரதேசி பரதேசி ஒரு பொண்ணு உன்னை அண்ணன் என்று கூப்பிடுது அவளை காதலிச்சிருக்க ராஸ்கல் வெளியே போடா.


இங்கு இப்படி நடந்து கொண்டிருக்க இதையேல்லாம் ஜன்னல் ஓரம் இருவிழிகள் பார்த்து கொண்டிருந்தன.
[+] 1 user Likes Natarajan Rajangam's post
Like Reply


Messages In This Thread
RE: பத்மினி எனும் பத்தினி - by Natarajan Rajangam - 03-10-2024, 10:08 AM



Users browsing this thread: 1 Guest(s)