03-10-2024, 07:31 AM
(This post was last modified: 03-10-2024, 07:59 AM by rathibala. Edited 3 times in total. Edited 3 times in total.)
அத்தியாயம் 22
சுபாவின் மடியில் படுத்துக் கிடந்த முகிலன், “உங்க Ex லவ்வரா நீங்க, திரும்ப பாக்கவே இல்லையா..?!” என்று கேட்ட நொடி, மூச்சடைத்து போனாள்.
—---------- —---------- —---------------
ஆபிசில் போய் கையேழுத்து இட்ட பாலா வெளியே வந்தான்.
பைக்கை ஸ்டார்ட் செய்தவன், மொபைல் கால் ஹிஸ்டரியில் இருந்த “பாலக்காட்டு” நம்பரை அழைத்தான்.
“ஹலோ..?!”
“ஸாரி ஸார்.. நான் காலைல கால் பண்ணி இருந்தேன்… உங்க வைப் எடுத்தாங்க..! பயந்துட்டு கட் பண்ணிட்டேன்..”
“சோபா, இப்ப எங்க இருக்க..?!”
(சோபா என்ற சோபனா - புதிய வாசகர்களாக இருந்தால் பகுதி 11 யை படிக்கவும். சோபா - கல்யாணம் ஆனவள்… கழுத்தில் தாலி இருந்தும்.. இப்போது கணவன் கூட இல்லை. பாலாவின் ஆபிசில் டெம்ப்ரவரியாக சேர்த்து ஒரு மாதம் ஆகிறது)
“அண்ணாநகர்ல சார்”
பெருமூச்சு விட்ட பாலா, “சரி… வாட்ஸ்அப் லொகேஷன் அனுப்பு”
“ம்ம்ம்.. “
போன் கட் ஆனதும்.. பாலா, தாம்பரத்தில் இருந்து அண்ணாநகரை நோக்கி பைக்கில் கிளம்பினான்.
—---------- —---------- —---------------
சுபாவின் மடியில் கிடந்த முகிலன்.. “10th ரிசல்ட்க்கு அப்பறம் என்னாச்சுன்னு..?! திரும்ப உங்க லவ்வர மீட் பண்ணுனீங்களா..? உங்க லவ்வ சொன்னிங்களா..?!” அடுக்கடுக்கான கேள்விகளை மீண்டும் தொடுத்தான்.
“படுத்தாத முகில்.. போ.. போய் வேலைய பாரு..!”
“உங்க பழைய பெட்டியை ஓபன் பண்ணுனா.. தெரிஞ்சுட போகுது..” என்றவன்.. கட்டிலுக்கு அடியில் இருந்த பெட்டியை வெளியே எடுத்தான்.
பின்னால் ஓடி வந்தவள்.. “டேய் எரும, அன்னைக்கு நைட்.. அந்த பெட்டிய ஓபன் பண்ண போய்தான்.. உன் கிட்ட அப்படி நடந்துக்கிட்டேன்.. இப்ப நெனச்சாலும் அருவெறுப்பா இருக்கு.. தப்பு பண்ணிட்டேன்னு தோணுது” குற்ற உணர்ச்சியில் தவித்தாள்.
பெட்டியை மீண்டும் கட்டிலுக்கு அடியில் தள்ளிவிட்டு எழுந்தவன், “பரவாயில்ல விடுமா.. சொல்லணும்னு தோணுறப்ப சொல்லு..”
தலையாட்டியவள், அவனது முன் கூந்தலை ஒதுக்கி விட்டு, கிச்சனை நோக்கி நகர, அவளது கையை அழுத்திப் பிடித்தான்.
“என்னடா..?!”
“ரொம்ப நாள் ஆச்சு.. கொஞ்சம் பாத்து பண்ணுங்க..” வழிந்தவன்.. அவளது கை விரலை இழுத்து நெட்டி முறித்தான்.
அவன் எதற்கு அடி போடுகிறான் என்பது அவளுக்கு புரிந்தது.
“முகில், இது தப்புடா.. யாரது பாத்தா என்ன நெனப்பாங்க..?!”
“உனக்கு புடிக்கலைனா வேணாம்…” பொய் கோபமாய் முறைத்தவன்.. வெளியேற.. அவனது கையை அழுத்திப் பிடித்தாள்.
“சாருக்கு பொசுக்குன்னு கோவம் வந்துரும்..” சிணுங்கியவள், அவன் கன்னத்தில் உதட்டை பதித்து எடுத்தாள்.
“ச்சீ.. இந்த முத்தமா..?! இங்கிலிஷ் முத்தம் குடுங்க..”
“டேய்.. ரொம்ப கெட்டு போய்ட்ட…”
“ப்ளீஸ்.. ப்ளீஸ்..” கொஞ்சலாய் கெஞ்ச,
“அன்னைக்கு மூடிட்டு இருந்து இருக்கணும்” முறைத்தவள், கால்களை ஊன்றி உயர்ந்து, அவனது உதட்டை நெருங்கினாள்.
முகிலனின் நெஞ்சுக்குள் துடிக்க ஆரம்பித்தது. அவளுக்கும் தான்.
உமிழ் நீரை முழுங்கியவள்.. கீழ் உதட்டை உள்ளுக்குள் இழுத்து ஈரப்படுத்தி.. பட்டும் படாமலும்.. அவனது உதட்டில் முத்தமிட்டு விலகினாள்.
“மம்மி.. இதுக்கு குடுக்காமலே இருந்துருக்கலாம்..”
“படுத்துற முகில்…! போ.. போதும்..”
“இங்கிலிஷ் கிஸ்ஸுன்னா.. லிப்ஸ் வெட் ஆகணும்.. துடிக்கணும்.. கடிக்கணும்..” அவன் அடிக்கிக் கொண்டே போக.
“கொன்னுருவேன்.. கட்டிக்க போன்றவ குடுப்ப.. இப்ப போ..“ முறைத்தாள்.
“அவ வாரப்ப வரட்டும்… செல்லமுள்ள.. புஜ்ஜு குட்டி இல்ல“
“நான் புஜ்ஜி குட்டி இல்ல.. உன்னோட புஜ்ஜி குட்டி வருவா.. வாரப்ப வாங்கிக்க..” கண்ண குழி விழ அவள் சிரித்தாள்.
மூக்கு புடைக்க முறைத்தவன்.. விருட்டென அவளது கன்னத்தை நசுக்கி, இரு விரலை அவள் வாய்க்குள் விட்டான்.
“டேய்.. என்ன பண்ணுற..” திமிறியவள்.. உதட்டை மூட,
அவள் உமிழ் நீரில் நனைந்த விரல்களை.. வெளியே எடுத்தான்.
“டேய்.. முகில்..” கத்தியவள்.. அவனது கையை அவள் பிடிக்க, ஈரமான விரல்களை.. அவனது உதட்டில் தேய்த்தான்.
“இந்த மாதிரி குடுத்தாதான் இங்லிஷ் கிஸ்… நீங்க தமிழ் டீச்சர்ல.. அதுதான் தெரியல..” கெக்கலிட்டு அவன் சிரிக்க,
“கருமம் புடிச்சவனே.. வா” அவனது பனியனை பிடித்து இழுத்தவள்.. அவனது உதட்டை முந்தானையில் துடைத்து விட்டாள்.
—------------ —-------- —--------
முகிலன்.. ஆபிஸ் வேலையில் பிஸியானான். அவன் ஆபிஸ் மீட்டிங்கில் பேசிக் கொண்டிருப்பது.. சுபாவின் காதில் விழுந்தது.
சுபா ஒவ்வொரு சேனலாக மாற்றி கொண்டிருந்தாள். எதிலும் மனம் ஒன்றி போகவில்லை. அவ்வப்போது அவளது விழிகள்.. அவனது ரூமை வெறித்துப் பார்த்தது.
“ஏய்.. லூசு.. எதுக்கு லீவ் எடுத்த.. பேசாம ஸ்கூலுக்கு போய் தொலைஞ்சு இருக்க வேண்டியதுதானே..?!” என்று, அவளது மனசு கேள்வி எழுப்ப,
பதில் தெரியாமல்.. உதட்டை பிதுக்கியவள்.. சோபாவில் சுருண்டு படுத்தாள்.
—---------- —---------- —---------------
“மம்மி… மம்மி..”
சோபாவில் தூங்கி கொண்டிருந்த சுபா.. முகிலனின் குரல் கேட்டு.. திடுக்கிட்டு எழுந்தாள். கையில் டீயுடன் முகிலன்.
கண்ணை திறந்த சுபா.. முகத்தை துடைக்க, டீயை நீட்டினான்.
“ஐயோ.. சமைக்கனும்..!’ அவிழ்ந்து கிடந்த கூந்தலை சுற்றி கொண்டை இட்டு எழுந்தாள்.
அவளது தோலை அழுத்திய முகில், “மொத டீய குடிங்க.. பூட் ஆடர் பண்ணிக்கெல்லாம்”
அவளது கையில் சூடான கப்பை திணித்தவன்.. அவனது ரூமுக்குள் நுழைந்தான்.
அவன் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவள்.. உதட்டில் டீயை வைத்தாள்.
“என்னைக்காவது கணவன் டீ போட்டு கொடுத்து இருக்காரா..?!” என்று யோசித்தாள். அப்படி ஓன்று அவளது வாழ்வில் நடந்ததே இல்லை.
பெருமூச்சு அடித்தவள்.. டீயை குடிக்க அவளது தூக்கம் கலைந்தது. போனை எடுத்தவள், பாலாவுக்கு அழைத்தாள்.
“ஏங்க..?!”
“சொல்லு சுபா” (ட்ராபிக் இரைச்சல் அவள் காதில் விழுந்தது)
“ஏங்க, நான் ஸ்கூலுக்கு போலாக.. சாப்பிட வீடுக்கு வாரீங்களா..?!”
“முடியாது சுபா.. நான் எக்மோர் ஆஃபிஸுக்கு போயிட்டு இருக்கேன்… வர சாய்ங்காலம் ஆயீரும்..”
சளித்துக் கொண்டு.. போனை வைத்தவள்… முகிலனின் பெட்ரூம் கதவு அருகே சென்றாள்.
“முகில்…?!”
“உள்ள வாமா”
“வேலையா இருக்கியா…?!”
“இல்ல.. ” கதவை திறந்து விட்டான்.
உதட்டில் மெல்லிய சிரிப்போடு, “சரி என்னோட பெட்ரூம்க்கு வா..” என்றவள்.
அவன் புரியாமல் பின்னால் செல்ல.. கட்டிலுக்கு கீழ் இருந்த இரும்பு பெட்டியை வெளியே எடுத்தாள்.
“முகில்.. என்னோட கல்யாண பட்டு புடவைக்கு கீழே ஒரு சாவி இருக்கும்.. எடு” என்றாள்.
“ஓ.. காமுகனின் உயிர் இங்கதான் இருக்கோ..?!” என்று முகிலன் கவிதை பாட,
“ச்சீ.. குடுடா” சிரித்தவள், பெட்டியை ஓபன் செய்தாள்.
அன்று கிருத்திகா சொன்ன பொன்னியின் செல்வன் புத்தகம் கண்ணில் பட்டது.
அது 25 வருட பழமையானது என்பது, பார்க்கும் போதே தெரிந்தது.
எடுத்து விரித்தான்.
“டேய்… பாத்து… பாத்து…” பதறினாள்.
உள்ளே, காய்ந்து நசுங்கி இருந்த ரோஜா பூ.
“ஓ… இது நீ வயசுக்கு வந்தப்ப வச்சது..”
கன்னக்குழி வந்தப்ப சிரித்தவள்.. தலையை ஆட்டினாள்.
“பயங்கரமான ஆளு மா நீ.. “ என்றவன், முதல் பக்கத்தை விரிக்க.. ரெட் மையில், “அன்புடன் முகிலன்..” என்ற கிறுக்கள்.
“மாமி.. இது அவரோட பிளேட்ட எழுதுவதா..?!” நக்கலாக அவன் கேக்க,
“மயிறு..” வெடுக்கென புக்கை புடுங்கினாள்.
அவனது கை பர பரக்க, பெட்டிக்குள் இருந்த துணியை வெளியே எடுத்தான்.
வெள்ளை கலர் தாவணியும்… பச்சை கலர் ரவிக்கை பாவாடையும்.. உள்ளுக்குள் 5 ஸ்டார் சாக்லேட் கவர்..
“ஓ.. இதுவும் அவரு வாங்கி குடுத்ததா..?!”
சுபாவின் முகம் வெக்கத்தில் சிவந்தது. பிளவுசை விரித்தான்.
“ஓ மை காட்.. இவ்வளவு ஒல்லியா நீங்க..?!”
“ச்சீ குடு..” பறித்தவள்.. அதன் வாசனையை நுகர்ந்து பார்த்தாள்.
“ஐயோ.. செம லவ்வா இருக்கே..! ப்ளீஸ் ப்ளீஸ்.. சொல்லுமா..?! தல வெடிச்சுரும் போல இருக்கு..” என்றவன் ஆடம் பிடிக்க,
“ம்ம்ம்ம்ம்.. சொல்லுறேன்..” தலையணையில் தலை சாய்ந்த சுபா.. அவளது பதினேழாவது வயதுக்கு சென்று நின்றாள்.
—------------------------------------------------------------
(பிளாஸ்க் பேக் - நீங்கள் புதிய வாசகர்களாக இருந்தால், அத்தியாயம் 17ல் இதன் முன் பகுதி உள்ளது.. படித்து விட்டு தொடரவும்)
வேண்டா வெறுப்பாய் +1 சேர்ந்தாள். அந்த கெமிஸ்ட்ரி லேபுக்குள் நுழையும் போதெல்லாம், கெமிஸ்ட்ரி வாத்தியார் முகிலன் கண்ணுக்குள் வந்து நின்றான்.
10ம் வகுப்பில் முதல் மார்க் எடுத்தவள், +1 இடை தேர்வுகள் முழுவதும்.. ஜஸ்ட் பாஸ்.
அன்று கடைசி பரிட்சை… முடித்து விட்டு வெளியே வர, வாட்ச்மேன் அவளது கையில் ஒரு பார்சலை நீட்டினார்.
கை எழுத்தை பார்த்ததுமே, சுபாவின் கண்கள் கண்ணீரில் நிறைந்தது. காட்டிக் கொள்ளாமல் சைக்கிளில் ஏறியவள், வீட்டுக்கு சிட்டாய் பறந்தாள்.
மூச்சிரைக்க.. அவசர அவசரமாக அட்டை பெட்டியை பிரித்தாள். ஒரு காக்கி கவருக்குள் துணி.. வட்டமான கண்ணாடி டப்பாவுக்குள் 12 சாந்து போட்டு.. ஒரு வெள்ளை பாசி மாலை.. இரண்டு 5 Star சாக்லேட்.. கூடவே ஒரு லெட்டர்.
லெட்டரை அவள் பிரிக்க, அவளது கண்கள் அலைபாய்ந்தது. ஆனந்தத்தில் கசிந்த கண்ணீர் துளிகள் எழுத்துக்ளை நனைக்க, பதறியவள்.. தன் மார்பில் ஒற்றி எடுத்தாள்.
“சுபா,
உன்ன எனக்கு புடிச்சதுக்கு காரணம், உன்னோட படிப்பு. +2 மார்க்குக்காக நானும் காத்திருக்கிறேன்.
அன்புடன்,
முகிலன்
(உள்ளே உள்ள காக்கி கவரை.. ஏப்ரல் 9 அன்று பிரிக்கவும்)
“ஐயோ.. என்னோட பொறந்த நாலு” சுபாவின் நெஞ்சுக்குள் பட்டம் பூச்சி பறப்பது போல் ஓர் உணர்வு. விருட்டென எழுந்தவள்.. மார்பில் கிடந்த வெள்ளை தாவணியை உருவி எறிந்தாள்.
பச்சை ப்ளவுஸ் பாவாடையில் கண்ணாடி முன் நின்றவள்.. பாசி மாலையை எடுத்து கழுத்தில் வைக்க, உடலுக்குள் இனம் புரியாத ஓர் கிளர்ச்சி. கூந்தலுக்குள் விரல்களை நுழைத்தவள் பாசி மாலையை மாட்டினாள்.
அது அவளது மார்பை தீண்டியதும்.. கண்களை இறுக மூட, வெளியே அம்மா வரும் சத்தம் கேட்டது.
“ஐயோ.. அம்மா..” வெளியே கிடந்த பாசி மலையை.. ரவிக்கைக்குள் திணித்தவள்… முகிலன் அனுப்பிய அட்டை பெட்டியை மறைக்க, அம்மா மரகதம் உள்ளே வந்தாள்.
“ஏய்.. எரும… எதுக்கு அவுத்து போட்டுட்டு நிக்குற..?!”
அவளது வாயில் வார்த்தைகள் வர மறுத்தது. விருட்டென அம்மாவின் கன்னத்தை பிடித்தவள், இச் என முத்தமிட,
“ஓடு எரும அங்கிட்டு..”
“அம்மா..”
“சொல்லுடி..”
“+2 புத்தம் வாங்கணும்… அப்பாட்ட சொல்லு..!”
“அதுக்கென்ன வாங்கிக்கெல்லாம்.. ஸ்கூல் தொரக்கட்டும்..“
“நான் படிக்கணும்.. வாங்க சொல்லு..”
“சரி.. சொல்லுறேன்… “ என்றவள் கிச்சனுக்குள் நுழைய,
சுபா தவனியை எடுத்து சொருக.. கனி வீட்டுக்குள் வந்தாள்.
“ஏய்.. எரும.. பரிட்சை முடிஞ்சதும் தேடுறேன்.. நீ பாட்டுக்க விட்டுட்டு வந்துட்ட…”
“அது வா… அது வந்து..” சிரித்த சுபா, அவளது கன்னத்திலும் ஓர் முத்தத்தை பதிக்க,
“ஏய்.. லூசு.. என்னாச்சு ஒனக்கு..?! கருமம்.. கருமம்..” கன்னத்தில் இருந்த எச்சை துடைத்த கனி, தூக்கு வாலியுடன் கிச்சனுக்குள் நுழைந்தாள்.
கனி கொண்டு வந்த வாலியில், பாலை ஊற்றிய மரகதம், “ஏண்டி.. பரிச்ச ஈஸியா இருந்துச்சா…?! என்ன..?!”
“கஷ்டம் க்கா.. எதுக்கு கேக்குறீங்க…?!”
“அவ ஒரே குஷியா இருக்கா..!”
“முத்தம் குடுக்குற அவ்வளவு என்ன குஷியோ..?!” முனகிய கனி, வாலியை வாங்க,
“ஒனக்கும் குடுத்தாளா..?!”
“ம்ம்ம்..” தலையாட்டிய கனி, ஹாலுக்குள் வந்தாள்.
“எப்ப பாத்தாலும் மூஞ்ச தொங்க போட்டுட்டு இருப்பா… இவளுக்கு என்னாச்சு இன்னைக்கு..” முனகியபடி, சுற்றி வந்த கனி, கழுத்தில் கிடந்த பாசி மாலையை பிடித்து இழுக்க,
“ஏய்ய்.. ஏய்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. “ கெஞ்சினாள் சுபா.
“புதுசா இருக்கு…. அக்கா..” என்றாள் சத்தமாக..
விருட்டென அவளது வாயை பொத்திய சுபா, அவளை தள்ளிக் கொண்டு வாசலுக்கு சென்றாள்.
“கெமிஸ்ட்ரி.. கெமிஸ்ட்ரி..” அதற்க்கு மேல்.. சுபாவின் வாயில் வார்த்தை வர மறுத்தது.
“வந்தாரா..?! பாத்தியா..?!”
“ம்ஹும்… பார்சல்..”
“அடிபாவி.. “ மூச்சடைத்து போனாள் கனி.
“நடந்து நடந்து.. காகிதத்தில் காதலா..?!“
“ச்சீ போடி…!” வெக்கத்தில் சுபாவின் முகம் சிவந்தது.
“நீ இங்கு சுகமே.. நான் அங்கு சுகமா” முனங்கியபடி நடந்த கனி, “ஏய்… ஏழுமணிக்கு வா.. ஒளியும் ஒலியும் பாக்கலாம்..”
தலையாட்டிய சுபா.. வேப்பமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சலில் உக்கார்ந்தாள்.
கால்களை உந்தியவள்.. ஊஞ்சலில் சிட்டாய் பறக்க, அவளது பாவாடை காற்றில் பறந்தது. உதடு விரிய சிரித்தவள்.. காற்றோடு கலந்தாள்.
“ஏய்.. ஏய்… எறங்குடி.. எறங்குடி..“ துடப்பத்தை எடுத்த மரகதம்.. கத்தியபடி.. ஓடி வர, ஊஞ்சலில் இருந்து தாவிய சுபா, கனி வீட்டுக்குள்.. தலை தெறிக்க ஓடி மறைந்தாள்.
—---------- —--------- —------------
பஞ்சாயத்து போர்டில் டீவியை இழுத்து வெளியே வைக்க, கூட்டத்தோடு கூட்டமாக.. கனி அருகே.. சுபா உக்கார்ந்தாள்.
டீவியில் முதல் பாட்டாக, “எனை தாலாட்ட வருவாளோ..?” பாட்டு ஓட,
தாவணிக்குள் ஒழித்து வைத்திருந்த 5 ஸ்டார் சாக்லேட்டை கடித்து.. கனியிடம் கொடுத்தாள்.
“ஏய்.. இதுவுமா.. அனுப்புனாரு..?!”
சுபா தலையை ஆட்ட,
“ஐயோ… எனக்கு வேணாம்..?! நீயே தின்னு..”
“ச்சீ.. புடிடி..” கனியின் கையில் திணித்தாள்.
“ஏய்.. வேணாம்.. அல்வா ஞாபகம் வருதுடி..” சிணுங்கினாள் கனி.
சுபாவுக்கு அமைதிபடை கஸ்தூரி ஞாபகம் வர, கெக்கலிட்டு அவள் சிரிக்க, டீவி பார்த்துக் கொண்டிருந்த மொத்த கூட்டமும் இவர்களை நோக்கி திருப்ப.. இருவரும் கெக்கலிட்டு சிரித்தபடி.. இருட்டுக்குள் நடந்தார்கள்.
— பிளாஷ் பேக் தொடரும்
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!