Romance பத்மினி எனும் பத்தினி
#29
சித்ரா : என்ன வராத ஆட்களெல்லாம் ஒன்ன வந்துருக்கிங்க என்ன விஷயம் என்ன புதுமாப்பிள்ளை சோகமா இருக்கிங்க என கேட்டபடி கோகுலை பார்க்க
வேலாயுதம் : ஓய் கழுதை போ உள்ளே போ அம்மாடி சீதா அவளை உள்ள கூப்பிட்டு போ இங்கே கொஞ்சம் பேச வேண்டி இருக்கு இவ இருந்தான்னா தொன தொனனு எதாவது பேசிகிட்டே இருப்பா
சீதாதேவி : சரிங்க
என்றபடி ஓய் மருமகளே நீ வா நாம உள்ளே வேலை இருக்கு என்றபடி சீதாதேவி கோமளவள்ளி சித்ரா நகர சமையலறையில் இருந்து மூவரும் காதை நன்றாக தீட்டிக்கொண்டு அங்கு நடப்பதை கேட்க துவங்கினர்.



வேலாயுதம் : இங்க பாரு முகுந்தா என்னை பெருசா நினைக்காதே பையன் வாழ்கை முக்கியம் அவன் காதலிச்சி தொலைச்சிட்டான் யாரா இருந்தா என்ன இப்போ என் பையன் கூட தான் சித்ராவை காதலிக்கிறான் நான் என்ன சண்டையா போட்டேன் பெத்தவங்க கிட்ட உண்மையா இருக்கிறது வரம்டா நண்பா உன் பையனும் என் பையனும் நமக்கு கிடைச்ச பொக்கிஷம் புரியுதா அந்த சிந்து பொண்ணுகூட நடந்த நிச்சயத்தை நிறுத்த சொல்லு கல்யாணம் வேண்டாம் கோகுலுக்கு பத்மினியவே கட்டி வைச்சிரலாம் அந்த பொண்ணுக்கு என்ன தேவையோ அதை நானே செஞ்சி தரேன் என்ன இருந்தாலும் அவளுக்கு நான் தாய்மாமன் தானே அந்த பொண்ணுக்கும் என்னோட சொத்துல பங்கு இருக்குடா நண்பா கோகுலுக்கும் பத்மினிக்கும் கல்யாணம் ஓகேவா.


முகுந்தன் : கண்கலங்கியபடி சரி நண்பா எனக்கு பரிபூரண சம்மதம் ஆனா இதை எப்படி உன் தங்கை கிட்ட சொல்றது.

வேலாயுதம் : நடராஜா போய் உன் அத்தையையும் பத்மினியை அழைச்சிட்டு வா.

நடராஜன் : அப்பா நிஜமாத்தான் சொல்றியா நீ தானே அவங்களை வீட்டுக்குள்ளேயே விடல இப்போ இப்படி மாறிட்டியேப்பா எல்லாம் இந்ந மாங்க மடையன் கோகுலுக்காகவா நீ பன்றது சரியில்லப்பா என்னமோ பண்ணி தொலை.

என்றபடி வெளியே சென்று தனது சொந்த அத்தை வீட்டு கதவை தட்டினான். கதவு திறந்துதான் இருக்கு உள்ளே வாங்க என்றாள் பத்மினி உள்ளே நுழைந்த நடராஜன் அத்தையையும் உன்னையும் அப்பா கூப்பிட்டாறு உடனே வருவிங்கலாம் என சொல்ல.

உள்ளே இருந்த கஸ்தூரிக்கு இதை கேட்டதும் கண்கள் கலங்க பத்மினியை அழைத்து கொண்டு பக்கத்து வீடான தனது சகோதரன் வேலாயுதம் வீட்டை நடராஜனோடு சென்றாள் எனினும் வாசல் கதவுவரை வந்தவள் அப்படியே நின்றாள் தான் செய்த ஒரு காதல் அதனால் 22 வருடமாக சொந்த வீட்டுக்கு செல்லமுடியாத பாவி ஆகி போனதை எண்ணி பார்த்தபடி நிற்க உள்ளே இருந்து ஒரு குரல் உள்ளே வா என்று உரக்கமாக கேட்க பயம் கலந்த பாசத்தோடு தான் பிறந்து வளர்ந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள் கஸ்தூரி பின்னால் நடந்தாள் பத்மினி
[+] 2 users Like Natarajan Rajangam's post
Like Reply


Messages In This Thread
RE: பத்மினி எனும் பத்தினி - by Natarajan Rajangam - 02-10-2024, 04:31 PM



Users browsing this thread: 4 Guest(s)