25-06-2019, 10:04 AM
Arun Vijay: இறுதிச்சுற்று ரித்திகா சிங்குடன் பாக்ஸிங் போடும் பாடி பில்டர் அருண் விஜய்!
அருண் விஜய் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்து புகழ் பெற்றார். அதன் பிறகு அவரது சினிமா வாழ்க்கை ஏறுமுகமாக அமைந்தது. தற்போது ரித்திகா சிங்குடன் பாக்ஸிங் போட்டும் அசத்தல் பாக்ஸராக அருண் விஜய் ‘பாக்ஸர்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
“பாக்ஸர்” படக்குழு நீண்டகால முன் தயாரிப்புகளுக்கு பிறகு படப்பிடிப்பை இன்று தொடங்கியிருக்கிறது. இயக்குனர் ஹரி & திருமதி ப்ரீதா ஹரி, நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி, இயக்குனர் சாம் ஆண்டன் மற்றும் இயக்குனர் கார்த்திக் நரேன் போன்ற பிரபல நபர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள மிக எளிமையாக துவங்கியது. அருண் விஜய் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார், அறிமுக இயக்குனர் விவேக் இயக்குகிறார். ![[Image: Master.jpg]](https://tamil.samayam.com/img/69905774/Master.jpg)
first 5 lakhs viewed thread tamil