25-06-2019, 09:56 AM
47 ஆண்டுகளுக்கு பிறகு வசூலை வாரிகுவிக்கும் வசந்த மாளிகை
சிவாஜி, வாணிஸ்ரீ நடிப்பில் 47 ஆண்டுகளுக்கு முன்பு (1972) வெளிவந்த படம் வசந்த மாளிகை. தமிழ் சினிமாவின் டாப் டென் காதல் கதைகளில் இப்போதும் இடம் பிடிக்கிற படம். கண்ணில் எடுத்து ஒற்றிக் கொள்ளும்படியான வண்ணத்தில் படமாக்கி இருந்தார் ஒளிப்பதிவாளர் வின்செண்ட், இன்றைக்கும் மனதை சுண்டி இழுக்கும் பாடல்களை கொடுத்திருந்தார் கே.வி.மகாதேவன். பிரபல தெலுங்கு இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். முதலில் இந்தப் படம் பிரேம நகர் என்ற பெயரில் தெலுங்கில் தயாரானது. அதில் நாகேஸ்வரராவ், வாணி ஸ்ரீ நடித்தனர். பிறகு தமிழில் வசந்த மாளிகை என்ற பெயரில் தயாரானது.
சிவாஜி நடிப்பில் அதிக நாட்கள், அதாவது 750 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம். இந்த படத்தை நவீன தொழில்நுட்பத்தில் மறு உருவாக்கம் செய்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள். சென்னையில் வெளியிடப்பட்ட 20 தியேட்டர்களிலும் இந்த வாரம் முழுக்க படம் தொடர்கிறது.
முதலில் 40 தியேட்டர்களில் திரையிடப்பட்டு தற்போது 100 தியேட்டர் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆல்பட் தியேட்டரில் நேற்று நடந்த சிறப்பு காட்சியில் திரையுலக முன்னணியினர் படம் பார்த்தனர். 2013ம் ஆண்டும் மறுவெளியீடு செய்யப்பட்டு அப்போதும் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது

first 5 lakhs viewed thread tamil